Azhagu Serial: தண்ணீர் கேட்டு மகள் விரலை ஆசையாய் வருடி..ஆஹா தாய்ப்பாசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் தொலைந்து போன இரண்டு பெண் குழந்தைகளை லண்டுபிடித்து விட்ட கதையாக தற்போதைய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் இரண்டு மகள்களில் சின்னவள் பூர்ணா கிடைத்துவிட்டாள்.. பெரியவள் கிடைக்கவில்லை என்று ஏங்கிக் கொண்டு இருந்த சமயத்தில் சுதாதான் முதல் பெண் என்கிற விவரமும் தெரிந்து விடுகிறது சகுந்தலா தேவிக்கு.

கடைசியில் அக்கா, தங்கை என்று தெரியாமலே சுதாவும், பூர்ணாவும் அழகம்மையின் வீட்டு மருமகளாகி உள்ளனர். ஆனால்,பூ ர்ணாவுக்கு சுதாவை சுத்தமாக பிடிக்காது என்று சொல்வதை விடஅத்தனை வெறுப்பு விரோதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நிலா மச்சம்

நிலா மச்சம்

காணாமல் போன தன்னுடைய மூத்த மகளை கண்ணில் காமி தாயே என்று வேண்டிக்கிட்டு வரும்போதே சகுந்தலா தேவி கண்ணில்,கோயிலை சுற்றி அங்க பிரதட்சணம் செய்து வரும் சுதாவின் உள்ளங்காலில் இருந்த அரை நிலா மச்சம் தெரிந்து விடுகிறது.

உங்க பொண்ணா

உங்க பொண்ணா

சுதா உங்களுக்கு பிறந்த பொண்ணான்னு அவளை வளர்த்த அம்மாவை கண்டுபிடிச்சு கேட்கறாங்க. இல்லைன்னு சொன்ன அந்த அம்மா சுதாவை எங்கே கண்டு எடுத்தோம்னும் சொல்றாங்க. அப்போதுதான் சுதா தான் பெற்ற மூத்த மகள் என்று தெரிகிறது.

பூர்ணா ஏத்துக்கலை

பூர்ணா ஏத்துக்கலை

பூர்ணாவிடம் போன் செய்தபோது சகுந்தலா தேவி சொல்ல, அவள் யாரும்மா என் அக்கா..சொல்லு சொல்லுன்னு சொல்ல, அவங்க வீட்டுக்கு வந்து சொல்றாங்க. பூர்ணா சுதாவை நான் அக்காவா ஒரு நாளும் ஏத்துக்க மாட்டேன்.அப்படி நீங்க கூட்டி வந்தா, இந்த உலகத்தை விட்டே போயிருவேன்னு கத்திட்டு போயிடறா.

உடனே பெண்ணை

உடனே பெண்ணை

என் பொண்ணு சுதாவை நான் உடனே பார்க்கணும்ங்க.ஆனா,பூர்ணா இப்படி சொன்ன பிறகு சுதாகிட்ட இப்போதைக்கு நீதான் என் பொண்ணுன்னு சொல்லவேணாம். இந்த மன கஷ்டம் என்னோடே போகட்டும் .நான் போயி என் பொண்ணை பார்த்துட்டு வரேன்னு அழுதுகிட்டே கிளம்பறாங்க.

சம்பந்தி அழகம்மை வீட்டுக்கு வந்து தன்மையாக பேசுவதை பார்த்து ரவி,அப்பா,சுதா மூவரும் அதிர்ச்சியில் இருக்க,சகுந்தலா தேவி சுதாவையே பார்த்துகிட்டு நிக்கறாங்க.

சுதா குடிக்க தண்ணி உன் கையால குடுக்க மாட்டியான்னு கேட்க, இருங்ககொண்டு வரேன்னு போயி தண்ணி கொண்டு வர்றா. தனது மகளான சுதாவின் விரலை ஆசையா தொட்டு பார்த்துட்டு,அ வள் தனது கையால் தந்த தண்ணீரை ஆசையா குடிக்கறாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+