Azhagu serial: அவருக்கு பதில் இவர்னு டிக்ளேர் பண்ணுங்க... அதை விட்டுட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஒன்றரை மாதமாக அழகு சீரியலில் அம்மாவாக நடிக்கும் நடிகை ரேவதியை காணலைங்க. இவருக்கு பதில் இவர்னு டிக்ளேர் பண்ணுங்க இல்லையா இல்லைன்னு சொல்லுங்க.

மிக முக்கியமான விஷயம் கடைசி பிள்ளைக்கு பெண் பார்க்கறாங்க அப்பவும் ரேவதி இல்லை. போனில் ஏற்கனவே பார்த்த பொண்ணுதானே... சம்பிரதாயம்தானே..நிச்சயம் பண்ணும்போது கண்டிப்பா வரேன்னு சொல்லிட்டா அழகுன்னு டயலாக் வச்சுட்டாங்க.

ரேவதிக்காகத்தான் பல பேர் சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் அழகு சீரியலைப் பார்த்து வந்தார்கள்.அவர்களை ஏமாற்றுவதா உங்களின் வேலை?

பிஸி நடிகை

பிஸி நடிகை

ரேவதி பிஸி நடிகைதான்...அவருக்கு இந்த சீரியல் ஒரு பொருட்டல்ல என்று நினைத்து அவர் வேறு வேலைகளை பார்க்க போயிருந்தால் அவருக்கு பதில் இவர் என்று டிக்ளேர் பண்ணி விடுங்களேன். இதை விடுத்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாக அழகு கோயிலுக்கு போயிருக்கா..ஊருக்கு போயிருக்கான்னு பாவ்லா எதுக்கு?

மக்களை வைத்து

மக்களை வைத்து

மக்களை வைத்து அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பத்தான் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சினிமாக்கள் கூட எடுக்கப்படுகின்றன. அந்த மக்களை மதிக்காதவர்களை வைத்து நீங்கள் ஏன் மக்களுக்கு கண்ணாமூச்சு ஆட்டம் காண்பித்து வருகிறீர்கள். இந்த செயலை மறைமுகமாக ஊக்குவிப்பது போல இல்லையா?

சொல்வது போல

சொல்வது போல

கடந்த ஒன்றரைமாதத்துக்கும் மேலாக அழகு என்கிற ஒரு கேரக்டரை வச்சு விளையாடி வருகிறோம்.. இது மக்களுக்கு நான் செய்யும் சரியான செயல்தானா என்று அந்நியனில் விக்ரம் சொல்வது போல யாருக்கும் அக்கறை இல்லை.. இப்படி எதுவும் சொல்லாமல் கண்ணா மூச்சு விளையாட்டு காண்பிக்கிறோமே என்கிற பயமும் மக்கள் மீது இல்லை.

இப்படித்தான் இருக்கிறது

இப்படித்தான் இருக்கிறது

எல்லாத் துறையும் இப்படித்தான் மக்கள் மீது ஒரு அக்கறை இல்லாமல் இருக்கிறது. பொழுது போக்குத் துறையும் இப்படித்தான் இருக்கிறது. மக்களை மதிப்பது இல்லை.. நாங்க எடுப்பதைத்தான் நீங்கள்பார்க்க வேண்டும் என்கிற திணிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+