Baakiyalakshmi முழு வில்லியாகவே மாறிய ராதிகாவை பாருங்க.. கொடைக்கானலில் பாக்யாவுடன் மல்லுக்கட்டு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கொடைக்கானலில் பாக்யாவை சந்திக்கும் ராதிகா அவரிடம் மல்லுக்கட்டும் ப்ரோமோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாக்கியலட்சுமி எனும் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் திருமணமான மகன், வயதுக்கு வந்த மகள், திருமண வயதில் இருக்கும் மகன் ஆகியோரை வைத்துக் கொண்டு கதாநாயகன் கோபி, பழைய காதலி ராதிகாவை கரம் பிடிக்கிறார்.
ராதிகா கழுத்தில் எப்போது தாலி கட்டினாரோ அப்போது முதல் கோபியை வறுத்தெடுக்கிறார் ராதிகா. முன்பு இருந்த நிலைக்கு அப்படியே நேர் எதிராக சக்காளத்தி சண்டை போடுகிறார்.

புதுமண தம்பதி
இந்த நிலையில் புதுமண தம்பதி கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்கிறார்கள். இவர்களை போல் பாக்யா குடும்பமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கு இரு சீரியல்களின் சங்கமம் நடைபெறுகிறது. ஒரு நாள் ரூமை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் கோபியை பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் பார்த்துவிடுகிறார்.

மாமா
உடனே மாமா எப்படியிருக்கீங்க, என கோபியை கட்டி பிடித்து நலம் விசாரிக்கிறார். இதையடுத்து கோபி ராதிகா வருகிறாரா என ரூமையே பார்க்கிறார். உடனே கண்ணனோ என்ன மாமா அங்கயே பார்க்கிறீங்கள். அது உங்கள் ரூமா என கேட்டு அவரை இழுத்து கொண்டு உள்ளே செல்லும் கண்ணன் அய்யோ எத்ததாண்டி ரூமு என கேட்டு கட்டிலில் போய் குதிக்கிறார்.

ராதிகா வந்துவிட போகிறார்
கோபிக்கோ எங்கே ராதிகா வந்துவிட போகிறாரோ என்ற பயம். இந்த நிலையில் கேம்ப்ஃபயர் முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் பாக்யாவின் குடும்பமும் சேர்ந்து நடனமாடுகிறார்கள். அதில் டூடூ டூடூ டுட்டு பாடலுக்கு தனமும் அவரது கணவரும் டான்ஸ் ஆடுகிறார்கள். அந்த இடத்திற்கு கோபியும் ராதிகாவும் வருகிறார்கள்.

பாடலுக்கு கைதட்டிய கோபி
இதையடுத்து ஒரு இனிய பறவை இசையை அழைத்து செல்லும் என்ற பாடலை பாக்யா பாடுகிறார். இதை மெய்மறந்து கேட்கும் கோபி தன்னை அறியாமல் கை தட்டி விடுகிறார். உடனே ராதிகா கோபியை முறைத்து பார்க்கிறார். இதையடுத்து ஒரு முறை ஒரு பார்க்கில் வைத்து பாக்யாவை ராதிகா பார்த்து, எங்க நிம்மதியை ஏன் கெடுக்குறீங்க, இதுக்கு நீங்க விவாகரத்து கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே என சண்டை போடும் காட்சிகள் ப்ரோமாவாக வந்துள்ளன. இதை பார்த்த ரசிகர்கள், இனிதான் முழுசாக வில்லியாக மாறிய ராதிகாவை பார்க்க போகிறோம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications