பாண்டியன் ஸ்டோரை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீசன் 2.. இனி கதை இது தானா? பிரபலம் வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கதை சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாக்கியலட்சுமி இரண்டாவது பாகம் என்று இந்த சீரியலில் நடிக்கும் பிரபலம் ஒருவர் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே இந்த சீரியலின் கதை போகும் விதத்தைப் பார்த்து சீக்கிரமாக முடித்துக் கொண்டால் நன்றி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இனி சீசன் 2வில் கதை எதுவாக தான் இருக்கும் என்றும் இந்த சீரியலின் நடிகர் வெளியிட்ட புகைப்படத்தால் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் சமீபத்தில் டிஆர்பியில் சரிவடைய தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தில் இந்த சீரியல் தான் இருந்தது. கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.
குடும்ப தலைவியாக இருக்கும் பாக்யா தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி பல இடங்களில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்ததை பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். பாக்கியாவின் வெற்றியை தங்களுடைய வெற்றியாகவே பலரும் கொண்டிருந்ததாலயே இந்த சீரியல் டிஆர்பியில் முக்கிய இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்த கள்ளக்காதல் தொடங்கி வருகிறது.
ஏற்கனவே அமிர்தாவின் முதல் கணவர் மரணமடைந்தது போன்று காட்சிகள் வைத்திருந்தனர். ஆனால் இப்போது மீண்டும் அவர் உயிரோடு வந்தது போன்று கதையை மாற்றி இருக்கின்றனர். அதுபோல செழியனின் வாழ்க்கையில் மாலினி என்ற கேரக்டர் வந்து பூகம்பத்தை ஏற்படுத்துகிறார். இப்படியாக இந்த சீரியல் கதை பயணம் மாறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் காரணமாக கடந்த வாரத்தில் கூட டிஆர்பி யில் இந்த சீரியல் இரண்டாவது இடத்தில் வந்துவிட்டது. மொத்தமாக டாப் 10 சீரியல்களில் இந்த சீரியல் 6.79 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி பார்ட் 2 என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஒரு பொம்மை அதாவது கணவன் சேர் ஒன்றில் சாய்ந்து இருப்பது போன்றும், அங்கு அவருடைய மனைவி பாயில் கணவரின் பக்கத்தில் புத்தகம் படித்தது போன்றும் இருக்கிறது. இந்த நிலையில் அப்போ சீக்கிரமாக இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா? ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போதுதான் முடிவுக்கு வந்து இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இனி பாக்கியலட்சுமி சீரியலும் இரண்டாவது பாகம் தொடங்க இருக்கிறதா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இதில் சேரில் இருப்பது கோபி என்றால் பக்கத்தில் இருப்பது பாக்கியாவா அல்லது ராதிகாவா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications