பரிதாப நிலையில் தவிக்கும் பாக்கியா..இனியா கேட்ட கேள்வி.. இனி தான் ஆட்டம் ஆரம்பம்
சென்னை: கோபி தன்னுடைய அறையில் ராதிகா உடன் இருப்பதால் பாக்கியா தனியாக ஹாலில் படுத்திருக்கிறார்.
இனியா பாக்யாவின் நிலைமையை நினைத்து பரிதாபப்படுகிறார்.
பாக்கியா வீட்டை விட்டு போய்விடக்கூடாது என்று இனியா பீல் பண்ணுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் கோபி குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டிருக்க, அவரை எப்படியாவது வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்று ஈஸ்வரி செய்த செயலால் கோபி வீட்டிற்க்கே வந்துவிட, அதனால் இப்போது ராதிகாவும் கோபியோடு சேர்ந்து வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஈஸ்வரி ராதிகாவை பாக்யாவை திட்டுவது போல திட்டி அனுப்பிவிடலாம் என்று நினைத்த நிலையில், அது என்கிட்ட எல்லாம் நடக்காது என்று ராதிகா நிரூபித்து விட்டார். தன்னிடம் சவால் விட்ட ஈஸ்வரியை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து விட்டு நான் இந்த வீட்டில் தான் இருப்பேன். அதுவும் பாக்யாவை இந்த வீட்டை விட்டு அனுப்பி விட்டு நான் இந்த வீட்டில் கோபியோடு இருப்பேன் என்று கெத்தாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

கோபியும் ராதிகாவும் ஒரே வீட்டில் தங்கிவிட பாக்யா என்ன செய்வது என்று அமைதியாகவே இருக்கிறார். அதிகமாக பேசாமல் இருக்கும் பாக்கியா மீது ரசிகர்களுக்கு கடும் கோபம் இருக்கிறது. என்ன இந்த மாதிரி நிலையில் கூட பஞ்ச் வசனம் பேசாமல், என்ன செய்யட்டும் அத்தை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். என்று பலர் பீஃல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 24 முதல் 29ஆம் தேதிக்கான எபிசோடு காண ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ராதிகாவும், கோபியும் தன்னுடைய அறையில் இருந்து கொண்டதால் தனக்கு எங்கே செல்வது என்று தெரியாமல் பாக்கியா ஹாலில் தனியாக பாயை விரித்து உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் அவரவர் ரூமில் படுத்திருக்கின்றனர். அப்போது இனியா, ஜெனி உடன் ஒரே ரூம்பில் படுத்து இருக்கிறார். பிறகு எழுந்து ஹாலுக்கு வருகிறார்.
அங்கே பாக்கியா தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து இனியா பாக்கியாவிடம் நீ ரொம்ப பாவமா, டாடி தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்காரு அவரு ராதிகா ஆன்ட்டியை இங்க கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது. இந்த வீடு ரொம்ப டார்ச்சர் இருக்குன்னு நீ எங்கேயும் போயிற மாட்டல்ல என்று, நான் உன்னை ரொம்ப ஹேட் பண்ணிட்டேன். சாரிமா என்று அழுதபடி பேசிக் கொண்டிருக்கிறார்.

அழுது கொண்டிருக்கும் இனியாவிற்கு பாக்கியா ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்படி களிமண் போல இருப்பது எரிச்சலாக இருக்கிறது என்றும், உண்மையில் வரவர இந்த சீரியலுக்கான சுவாரசியம் குறைந்துவிட்டது என்றும் இந்த சீரியலுக்கான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இனி ராதிகா என்னவெல்லாம் அட்டகாசம் செய்யப் போகிறாரோ என்று இப்போதே பலர் பதறி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications