பாக்கியாவிற்கு பழனிச்சாமி கொடுத்த அட்வைஸ்..ஈஸ்வரியிடம் பிரச்சனை செய்யும் ராதிகா..கோபி எடுத்த முடிவு
சென்னை: வீட்டை விட்டு போக முடிவெடுத்த பாக்கியாவிருக்கு பழனிச்சாமி அறிவுரை கூறுகிறார்.
கிச்சனுக்கு காபி போட வந்த ராதிகா அங்கு இருக்கும் செல்வி இடம் பிரச்சனை செய்கிறார்.

ராதிகாவின் வார்த்தையை கேட்டு கடுப்பான கோபி வீட்டை விட்டு போக முடிவெடுக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை யோசித்துக் கொண்டே இருக்கிறார். வகுப்பை கவனிக்காமல் பாக்கியா இருப்பதை பார்த்த பழனிசாமி என்ன ஆச்சு என கேட்க பாக்கியா முதலில் ஒன்றும் இல்லை என்று சொல்லி பிறகு வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்கிறார்.

அதே நேரத்தில் ராதிகா கோபிக்கு காபி போட கிச்சனுக்கு வந்து பாத்திரத்தை எடுக்க, செல்வி ஏங்க நான் கழுவி வச்ச பாத்திரத்தை எடுக்குறீங்க என்று பிடுங்க, ராதிகா அவரை முறைத்து விட்டு மீண்டும் பாத்திரத்தை பிடுங்குகிறார். பிறகு பால் காய்ச்சி பில்டர் காபி போட பில்டரை எடுக்க, ஈஸ்வரி செல்வி என குரல் கொடுத்ததும் அது அம்மாவுக்கு காபி போட பாக்கியா அக்கா டிகாஷன் போட்டு வச்சிருக்காங்க என ராதிகாவிடம் இருந்து வாங்கி செல்வி தூரமாக வைக்கிறார்.

காபி தூள் எங்கே இருக்கு என்று ராதிகா கேட்க செல்வி தெரியாது என சொல்கிறார். கோபமான ராதிகா அங்கிருக்கும் டம்ளரை தூக்கிப்போட்டு உடைக்க, ஈஸ்வரி இது என்ன உன்னுடைய வீடா? இங்க வந்து அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். பிறகு ராதிகா சர்க்கரை எங்கே என்று செல்வி இடம் கேட்க கடையில் இருக்கு என்று நக்கல் அடிக்க, பிறகு ராதிகாவே தேடி எடுத்து காபி போட்டு எடுத்து செல்கிறார்.

ராதிகா காபி போடுவதை பார்த்து கோபிக்கு இன்ஸ்டன்ட் காபி பிடிக்காது இது தெரியாம குடும்பம் நடத்துகிறாளா என்று திட்டுகிறார். மேலே வந்த ராதிகா காபியை கொடுத்து உங்க வீட்ல என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க? என்னை அவ்வளவு கேவலமா நடத்துறாங்க என்று கோவப்பட, கோபி சரி அப்ப நம்ம வீட்டுக்கு போயிடலாம் என சொல்ல, ராதிகா அப்போதும் வர மறுக்கிறார். போயிட்டு உங்க அம்மா கிட்ட என்னை மரியாதையா நடத்த சொல்லுங்க என்று சொல்ல, கோபி அதெல்லாம் என்னால சொல்ல முடியாது என்று ஆபீசுக்கு அவசர அவசரமாக கிளம்பி செல்கிறார்.

இந்த பக்கம் பழனி பாக்யாவிற்கு ஆறுதல் சொல்லி நீங்க எங்கேயும் போகக்கூடாது உங்க வீட்டுக்கு தான் போக வேண்டும். நீங்க நல்லவங்க. நல்ல மனசு உடையவங்க. நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பேச்சும் என நீங்க தில்லா வீட்டுக்கு போங்க நடக்கிறதை பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்கிறார். பிறகு பாக்யா அங்கிருந்து புது தைரியத்தோடு வீட்டுக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications