முக்கியமான நேரத்தில் இனியாவை விட்டுப் போகும் பாக்கியா..கண்கலங்கி அழும் ராமமூர்த்தி..திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா தன்னைவிட இரண்டு மடங்கு சம்பளம் அதிகமாக வாங்குகிறார். இனி என்னை மதிக்க மாட்டார் என்று கோபி மீண்டும் குடிக்கிறார்.
அதே நேரத்தில் இனியாவிற்கு ரிசல்ட் வரும் நேரத்தில் பாக்யா செய்த செயலால் இனியா பீஃல் பண்ணுகிறார்.

அதைத் தொடர்ந்து ராமமூர்த்தியும் தன்னுடைய மனைவியை நினைத்து கண்கலங்கி அழுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 18ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாக்கியா உடன் எழில் மற்றும் இனியா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா நாளைக்கு ஒரு கல்யாண ரிசப்ஷன் ஆர்டர் இருக்கு என்று சொல்ல, இனியா நாளைக்கு எனக்கு ரிசல்ட் வருது அம்மா அப்போ நீ என்கூடவே இருக்கணும் என்று சொல்கிறார்.

அதற்கு பாக்கியா கண்டிப்பா நான் வந்து விடுவேன் என்று ஆறுதல் கூறுகிறார். அதைத் தொடர்ந்து இங்கிலீஷ் வகுப்பில் எக்ஸாம் நடந்ததை பற்றியும் அப்போது பழனிசாமி கேட்டு எழுதியதை பற்றியும் சொல்ல, எழில் பழனிச்சாமி அங்கிள் பார்க்கத்தான் பெரிய ஆளாக இருக்கிறார். ஆனால் அவருடைய செயல் எல்லாமே இப்போதும் சின்ன பிள்ளை போலத்தான் இருக்கிறது என்று சொல்ல பாக்கியாவும் இனியாகவும் சிரிக்கின்றனர்.
அடுத்ததாக பாரில் கோபி தன்னுடைய நண்பரோடு பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகாவுக்கு பிரமோஷன் கிடைத்து விட்டது. சும்மாவே என்னை மதிக்க மாட்டா இப்ப சம்பளமும் என்னை விட ரெண்டு மடங்கு அதிகம் ஆயிடுச்சு, இனிமே நான் அவ்வளவுதான். கல்யாணம் பண்ணினதிலிருந்து எல்லாத்தையும் நான் தான் பாத்துக்குறேன். அவளுக்கு இதுவரைக்கும் ஒரு செலவுமே இல்ல.

நான் கீழ போயிட்டு இருக்கேன். அவ நல்லா முன்னேறி போயிட்டா என்று புலம்பி மீண்டும் குடிக்கிறார். அதே நேரத்தில் ராமமூர்த்தி காசிக்கு போன ஈஸ்வரி போன் எதுவும் பண்ணல, எப்படி இருக்கிறாளோ? என்ன செய்கிறாரோ? மாத்திரை போட்டாளோனு கூட தெரியலையே என்று புலம்பி அழுது கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியாவும் எழிலும் ராமமூர்த்தியை சமாதானப்படுத்துகின்றனர்.
தொடர்ந்து கோபி குடிச்சிட்டு வீட்டிற்கு வர அவரது மாமியார் கதவை திறந்ததோடு கோபிக்கு அட்வைஸ் பண்ணுகிறார். மேலும் ராதிகா தூங்கிட்டா என்று சொல்லி அவளை எழுப்பாதிங்க நான் இங்கேயே படுத்து தூங்குகிறேன் என்று சொல்கிறார். விடிந்ததும் எல்லோரும் இனியாவின் ரிசல்ட் வரப்போவதிற்க்காக சந்தோஷத்தில் காத்திருக்கின்றனர்.

அப்போது பாக்கியா வெளியில் கிளம்ப இனியா சீக்கிரம் வந்துடுமா, ரிசல்ட் வரும்போது நீ என்கூட பக்கத்தில் இருக்கணும் சீக்கிரமா வந்துடுமா என்று சொல்ல, பாக்கியா வந்துடுவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications