பாக்யாவை அவமானப்படுத்த கோபி செய்த சூழ்ச்சி.. எழிலின் அதிரடி..இனி பழனிச்சாமியின் முடிவு..?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை தேடி எழில் பாண்டிச்சேரிக்கு வந்து பாக்கியா படும் கஷ்டங்களை பார்த்து அவருக்கு கால் அமுக்கிவிட்டு பணிவிடை செய்கிறார்.
அதைத்தொடர்ந்து எழிலை பார்த்த கோபி உங்க அம்மா இங்க வந்து இருக்காங்க. ஆனா எதுக்காக பழனிச்சாமியும் கூடவே வரணும். எதெல்லாம் தப்பா இருக்கு.இது அசிங்கமா இல்லையா? என்று கேட்க, கோபிக்கு எழில் பதிலடி கொடுத்து அவமானப்படுத்துகிறார்.
இதனால் பாக்கியவை மாட்டி விட வேண்டும் என்று கோபி கல்யாண வீட்டில் மலேசியா உணவு செய்வதற்கு பாக்கியாவிடமே சொல்லலாம் என்று புது பிரச்சனையை உருவாக்குகிறார்..

பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை ஐந்தாம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா பங்க்ஷனில் இருந்த கோபி மற்றும் ராதிகாவுக்கு காபி கொடுக்க, அதை கோபி பேஸ் பேஸ் என்று ரசித்து குடிக்க அதை பார்த்து ராதிகா கடுப்பாகிறார். அதோடு எல்லோரும் பாக்கியவை சாப்பாடு சூப்பர், காபி சூப்பர் என்று பாராட்டி தள்ள கோபியும் ராதிகாவும் கடுப்பாகிறார்கள்.
அதைத்தொடர்ந்து பழனிச்சாமி பாக்யாவின் சாப்பாட்டை பாராட்டி கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் உங்க சாப்பாடு பத்தி தான் பெருமையா பேசிட்டு இருக்காங்க என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் அங்கே வர பாக்கியா சந்தோஷப்படுகிறார். பிறகு பாக்கியா கால் வலிக்கிறது என்று கஷ்டப்பட, எழில் அமுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது வீட்டில் எதுவும் பிரச்சனை இல்லையே என்று கேட்க, வீட்ல ஒரு பிரச்சனையும் இல்லை. அதான் பிரச்சனை பண்றவங்க எங்கேயோ போயிட்டாங்க என்று சொல்ல, செல்வி எங்கேயும் போகலை. இங்கே தான் அவங்க இருக்காங்க என்று சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார். அதைத் தொடர்ந்து ராதிகாவிற்கு நெக்லஸ் ஒன்று வாங்கி வைத்திருப்பதை கொடுக்க ராதிகா சந்தோசம் அடைகிறார்.
பிறகு எழிலை பழனிச்சாமி சுதாகரிடம் அறிமுகப்படுத்தி அடுத்த படத்திற்கு நீ ப்ரொடியூஸ் பண்ணலாம் என்று சொல்ல, நான் வேற யாரையாவது அறிமுகப்படுத்துகிறேன் என்று சுதாகர் கூறுகிறார். அப்போது எழில் வெளியே பேசிக் கொண்டிருக்கும் போது கோபி பார்த்து எழில் இடம் வந்து பேசுகிறார்.
அப்போது கோபி பாக்கியா மற்றும் பழனிச்சாமியை குறித்து புலம்பிக் கொண்டிருக்க எழில் நீங்க எங்க அம்மாவை மிஸ் பண்றீங்களா? அம்மாவை பார்த்து பொறாமை படுறீங்களா? என்று கேட்டு கோபியை மேலும் கோபமாக்குகிறார். அடுத்ததாக உறவினர்கள் எல்லாரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மாப்பிள்ளை இன்னும் 20 பேர் மலேசியாவில் இருந்து வர்றாங்க அவங்களுக்கு மலேசிய சாப்பாடு ஆர்டர் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது அங்கு இருக்கும் கோபி அது எதற்கு நீங்க ஆர்டர் பண்றிங்க. ஒரு அருமையான சமையல்காரங்க இருக்காங்க அவங்களோட சமையலை நீங்களே ரொம்ப பாராட்டுனீங்கல. அவங்க கிட்ட இன்னும் 20 பேருக்கு சமைக்க சொல்லுங்க. அவங்க செஞ்சுடுவாங்க என்று சொல்ல, அவங்களுக்கு இந்த சமையல் சமைக்க தெரியுமா என்று கேட்க, எல்லாம் தெரியும் என்று கோபி மாட்டி விட்டு பாக்யாவை பலி வாங்கி விட்டதாக சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் சுதாகர் பார்த்து இவர் ரொம்ப பெருசா பிளான் போடுறாரு என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications