பாக்கியாவின் மீது காதலை பற்றி உளறிய கோபி.. வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த ராதிகா..பாக்கியா பதிலடி
கோபி மீண்டும் குடித்துவிட்டு ராதிகாவிடம் பாக்யா தான் பெஸ்ட் என்று கூறி ரகளை செய்கிறார்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் குடித்துவிட்டு கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவிடம் தனது மனதில் இருக்கும் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்து விடுகிறார்.
ராதிகா பேசிய வார்த்தையை கேட்டு ராமமூர்த்தி ராதிகாவை அவமானப்படுத்துகிறார்.
பாக்கியா பழனிச்சாமியுடன் பேசக்கூடாது என்று கோபி ஆர்டர் போட்டு மிரட்ட பாக்யா அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

நடுரோட்டில் புலம்பும் கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 20 ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்யா பழனிசாமி உடன் வண்டியில் போனதாக கேள்விப்பட்ட கோபத்தில் காரில் வரும்போது அதை நினைத்தே டென்ஷன் ஆகி கொண்டு வருகிறார். இரண்டாவது திருமணம் செய்துவிட்டு நான் சந்தோஷமாக இருக்கிறதா தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது பாக்கியா தான். எப்போ விட்டுட்டு போவான்னு காத்துகிட்டு இருந்த மாதிரி இருக்கு. அவ இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கா என்று நடு ரோட்டில் காரை நிறுத்தி புலம்பி கொண்டிருக்க, பின்னாடி வரும் வண்டி ஹாரன் சத்தம் கேட்டு இருங்கடா உங்க வாழ்க்கையிலும் ராதிகா பாக்யா மாதிரி ஆளுங்க வந்தா உங்களுக்கு தெரியும் என்று புலம்பிக்கொண்டே காரை எடுக்கிறார்.

நண்பனிடம் புலம்பும் கோபி
அடுத்த கோபி தன்னுடைய நண்பரோடு சேர்ந்து பாரில் குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய நண்பர் போதும் என்று சொன்னாலும் கேட்காமல் நான் குடிக்க கூடாது என்று சொல்வதற்கு நீ யார் என்று திட்டி விட்டு, பாக்கியா தான் பெஸ்ட் பாக்யா வீட்டில் இருக்கும்போது நிம்மதியா இருந்தேன். ஆனால் ராதிகாவோட சந்தோஷமாக இல்லை. ஒரு ரொமான்ஸும் இல்லை. சின்ன வீட்டில் நிறைய பேரு இருக்கிறோம். எப்ப பார்த்தாலும் எல்லாத்துக்கும் காளி மாதிரி கண்னை உருட்டி உருட்டி பேசற, சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோவப்படுறா. நான் லவ் பண்ணது இப்படிப்பட்ட ராதிகாவே கிடையாது. ராதிகா இப்ப ரொம்ப மாறிட்டா என்று ராதிகாவை பற்றி பேசி வீட்டுக்கு போகவே பயமாக இருக்கு என புலம்புகிறார்.

ஒரே பாக்கியா புராணம் தான்
பாக்கியாவை விட்டுட்டு போனதினால் பீல் பண்றியா? என்று அவருடைய நண்பர் கேட்க கோபி, எனக்கு பாக்கியாவை பிடிக்காது தான். ஆனா அவ என்னை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்டதில்லை. ராதிகா விஷயம் வீட்டுக்கு தெரிஞ்ச பிறகு தான் கேள்வி கேட்டா, ஆனாலும் அதுவும் பெரிய அளவில் இல்லை. அதில் ஒரு நியாயம் இருந்தது.. என்கிட்ட அவ கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் ராதிகா எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டுகிட்டே இருக்கா என்று புலம்பிக் கொண்டு மீண்டும் மீண்டும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.

கோபிக்கு ஆப்பு ரெடி
அடுத்து ராதிகா மற்றும் ராமமூர்த்தி வீட்டில் இருக்கின்றனர். அப்போது கோபி வந்து கதவை தட்ட ராமமூர்த்தி கதவை திறந்ததும், கோபி டாடி என கட்டிப்பிடித்து அழ அவருக்கு நாத்தம் பிடிக்காமல் ராமமூர்த்தி குடிச்சிட்டு வந்திருக்கியா என்ன திட்டி ஷோபாவில் தள்ளி விடுகிறார். அதற்கு கோபி எனக்கு மனசு சரியில்லப்பா அதனால் தான் குடிச்சேன் என பேசுகிறார். பிறகு பாக்யாவை எனக்கு பிடிக்காது ஆனா அவ கூட இருந்த பொது சந்தோஷமா இருந்தேன். ஆனால் ராதிகாவோடு இருக்கும்போது சந்தோசமா இல்லை. எப்ப பாத்தாலும் கோபப்பட்டுக்கிட்டு இருக்கா. நிம்மதியே இல்லை. பாக்கியா தான் பெஸ்ட். நீ வேஸ்ட் என்று ராதிகா முன்னாடியே சொல்ல ராதிகா அழுதபடி ரூமிற்கு சென்று விடுகிறார்.

தலைவலி அதிகமா கோபி
அடுத்த நாள் காலையில் கோபி தலைவலியில் உட்கார்ந்து இருக்க அப்போது ராத்திரி நடந்தது எல்லாம் நினைத்து பார்த்து தனக்குத்தானே இதெல்லாம் தேவையா கோபி எதற்காக இப்படி பண்ணினா என்று பேசிக் கொண்டிருக்கிறார். ராதிகா அதே நேரத்தில் அந்த பக்கம் வர ஹாய் பேபி நான் டெய்லி வாக்கிங் போரேன் என வெளியே கிளம்ப, இப்ப இதுதான் முக்கியம் என ராதிகா திட்டுகிறார். மெதுவாக பேசு அப்பா உடம்பு சரியில்லாதவர். இப்படி கத்தி பேசாத என சொல்ல அங்கு வரும் ராமமூர்த்தி நைட் குடிச்சிட்டு வந்து எல்லாரையும் தூங்கவிடாமல் டார்ச்சர் பண்ண அப்ப தெரியலையா என்று திட்டுகிறார்.

அவமானப்படுத்திய ராமமூர்த்தி
அந்த வீட்டில் இருக்கும்போது குடிக்காம தானே இருக்க இப்ப என்ன புதுசா? என ராமமூர்த்தி கோபப்பட்டு பேச, ராதிகாவிடம் சென்று இனிமே குடிக்க மாட்டேன் என காலில் விழுந்து கோபி மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ராதிகா அந்த பாக்கியா தான் உங்களுக்கு பெஸ்ட்டா போயிட்டா?. அப்போ அவகிட்டயே போக வேண்டியது தானே? நான் ஏற்கனவே குடிகாரன் கிட்ட பட்டது போதாதா? இப்ப நீங்களும் இப்படி குடிச்சிட்டு வந்தால் நானும் இந்த வீட்டில் இருக்க மாட்டேன். நீங்க சொல்லுங்க மாமா உங்க பையன் கிட்ட என்று ராமமூர்த்தியிடம் ராதிகா சொல்ல, நீ என்கிட்ட கேட்டுட்டு தான் இவனை கல்யாணம் முடிச்சியா? நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும் என்று ராமமூர்த்தி ராதிகாவை திட்டிவிட்டு அந்த வீட்டில் இருக்கிற வரைக்கும் குடிக்காமல் தான் இருந்தா இப்ப என்ன பிரச்சனை உனக்கு என்று கோபியையும் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

இந்த அவமானம் தேவையா கோபி
பிறகு ராதிகா கேட்டீங்களா? உங்க அப்பா கூட என்னைதான் குறை சொல்றாங்க. இந்த மாதிரியே நடந்துகிட்டு இருந்தா. நான் கண்டிப்பா வீட்டை விட்டு வெளியே போயிடுவேன் என்று மிரட்டி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கான எபிசொட்டில் பாக்யாவை வழியில் தடுத்து நிறுத்தி அந்த பழனிச்சாமி கூட எல்லாம் பேசக்கூடாது என்று கோபி ஆர்டர் போட, அதை சொல்ல நீங்க யாரு? என பாக்கியா கேட்க, உன்னை அப்படியெல்லாம் விட முடியாது என்று கோபி எச்சரிக்கிறார். அதற்கு பாக்கியா சொடக்கு போட்டு டோன்ட் ஃபாலோமி என இங்கிலீஷில் பேச கோபி அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications