கோபியை கோர்ட்டில் சொன்னதை சொல்லி அவமானப்படுத்திய பாக்யா..மிரட்டும் ராதிகா..அறிவுரை கூறும் பழனிச்சாமி
கோபி நடு ரோட்டில் பாக்கியாவிடம் பழனிச்சாமியுடன் பேசக்கூடாது என்று தகராறு செய்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவிடம் பழனிச்சாமி பற்றி பேச பாக்கியா நடுரோட்டில் அசிங்கப்படுத்துகிறார்.
ராதிகா பாக்யாவிற்கு யூனிஃபார்ம் போட சொல்லி இன்றே கடைசி நாள் என்று பாக்கியவை மிரட்டி கடைசியில் அவமானப்படுகிறார்.
பழனிச்சாமி தனக்கு வரும் பிரச்சனைகளை எல்லாம் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பாக்யாவிற்கு அறிவுரை கூறுகிறார்.

கோபி கேட்ட கேள்வி
விஜய் டிவியல் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாக்கியா தெருவில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வரும்போது பாக்யாவை பார்த்து கோபத்தில் யார் அந்த வளர்ந்த போஸ்ட் மரம் என்று கேட்க பாக்கியாவிற்கு ஒன்றும் தெரியாமல் என்னது என்று கேட்க, நான் உன்னிடம் தான் பேசுகிறேன் என்று மீண்டும் பாக்கியாவை நிறுத்தி வைத்து, யார் அந்த நபர் அவரோடு எதுக்கு நீ பைக்கில் போனா? இனி அவரிடம் நீ பேசக்கூடாது என்று ஆர்டர் போடுகிறார். அதைக் கேட்டு பாக்கியா சிரித்தபடி அதையெல்லாம் சொல்வதற்கு நீங்க யாரு? உங்களுக்கு கோர்ட்டில் சொன்னது எல்லாம் நினைவு இல்லையா என்று கேள்வி கேட்கிறார்.

பாக்கியாவின் பதிலடி
நீ செய்யும் செயலால் நம்முடைய குழந்தைகளுக்கு பிரச்சனை வரும் அவங்களுக்கு தெரிஞ்சா நாளைக்கு கேவலம் இந்த மாதிரி நீ கண்டவங்க கூட பைக்ல சுத்திகிட்டு இருக்கிறது வீட்டில் தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா என பாக்கியாவை மிரட்ட, அதை நீங்க செய்யும்போது குழந்தைகளுக்கு பிரச்சனை இல்லையா? அப்போ அவங்களுக்கு கேவலம் இல்லையா? அப்பவெல்லாம் உங்களுக்கு குழந்தைகள் ஞாபகம் இல்லாமல் போய்விட்டதா என்று பாக்கியா அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு கோபியை வாயடைக்க வைக்கிறார்.

கோபிக்கு அதிர்ச்சி தான்
கோபி அதுவெல்லாம் முன்னாடி நடந்தது அதைப்பற்றி இப்ப பேச வேண்டாம். இப்போ நடக்கிறது மட்டும் பேசுவோம் இனி நீ அந்த நபர் கூட பேசக்கூடாது என்று மீண்டும் சொல்ல, அதை சொல்றதுக்கு நீங்க யாரு சார் என்று பாக்கியா கேட்க என்னது சார் என்று எல்லாம் நீ பேசுற என்று கோபி கேட்க ஆமா எனக்கு எதிர்த்த வீட்டில் இருக்கிறவங்க கிட்ட நான் எப்படி பேசுவேனோ அதுபோல உங்ககிட்டயும் பேசுறேன் என்று பாக்கியா கூறுகிறார். பிறகு உங்க வேலையை மட்டும் பாத்துட்டு போங்க சார் என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்ப கோபி அதிர்ச்சியில் நிற்கிறார்.

ராதிகாவின் வார்னிங்
அடுத்ததாக பாக்கியா கேட்டரிங்கில் சமையல் எல்லாம் முடிந்ததா? எல்லோருக்கும் சாப்பாடு போய்விட்டதா என்று செல்வி இடம் பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் ராதிகா நான் உங்ககிட்ட சொன்னது என்ன ஆச்சு உங்களுக்கு யூனிஃபார்ம் போட சொல்லி நாளையோட கடைசி நாள். நீங்கள் என்னும் எதுவும் செய்யலையா நான் உங்க ஆர்டரை கேன்சல் செஞ்சுட்டு புதுசா டெண்டர் விடட்டுமா என்று மிரட்டுகிறார். அதற்கும் பாக்கியா இன்னும் ஒரு நாள் இருக்குல்ல என்று சொல்ல இதுவரைக்கும் பிறந்ததிலிருந்து புடவையிலே இருந்த நீங்க இனி சுடிதார் போட போறீங்களா? என்று அவமானம் படுத்த நீங்க மட்டும் பிறக்கும் போதே புடவையோடு தான் பிறந்தீங்களா? என்று செல்வி ராதிகாவை கிண்டல் செய்கிறார்.

பழனிச்சாமியின் அறிவுரை
பிறகு ராதிகா நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட பாக்கியா அடுத்ததாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு செல்கிறார். அங்கே வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. பிறகு இடைவெளி நேரத்தில் பாத்தியா மற்றும் அங்கிருக்கும் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிச்சாமியிடம் நீங்கள் என்ன பிசினஸ் செய்றீங்க என்று கேட்க? அப்போது மூன்று விசிட்டிங் கார்டை கொடுத்து தான் செய்யும் பிசினஸை அவர்களிடம் பழனிச்சாமி காட்டுகிறார். அதை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா இவ்வளவு வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்களா? என்று கேட்க, ஆமாம் நமக்கு வரும் பிரச்சனைகளை எல்லாம் வாய்ப்பா பயன்படுத்திட்டு நாம முன்னேறி போய்கிட்டே இருக்கணும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications