செழியனுக்கு கோபி சொன்ன அட்வைஸ்.. பாக்யாவுக்கு துணையாக ராதிகா.. எழில் கேட்ட கேள்வியால் அடுத்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடு ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் செழியன் மீது தப்பு இருக்கும்போது எப்படி எல்லாரும் பாக்கியாவை திட்டலாம் என பாக்யாவுக்கு ஆதரவாக ராதிகா கேள்வி கேட்கிறார்.

அதே நேரத்தில் கோபி செழியனுக்கு ஆதரவாக பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணி ராதிகா வீட்டில் உள்ள அனைவரோடும் சண்டை போடுகிறார். அதோடு தப்பு செய்தது செழியன். ஆனால் அவனை விட்டுவிட்டு பாக்கியாவை கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார். உடனே கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு ரூமுக்கு வருகிறார். அங்கு ராதிகா கோபியிடம் என்ன கோபி எல்லாத்தையும் சரியா பேசுறீங்கன்னு நினைப்பா என்று கேட்க, அதற்கு கோபி இது எங்க குடும்பத்தோட பிரச்சினை இதுல நீ தலையிடாதே என கோபி ராதிகாவை பார்த்து சொல்கிறார்.

அதற்கு ராதிகா அப்போ நான் யார் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு கோபி நான் வாய் தவறி சொல்லிட்டேன் தயவு செய்து இதை வச்சு ஒரு சண்டை போட வேண்டாம் என்று கூறிவிட்டு கீழே வருகிறார். அப்போது அங்கே பாக்கியாவை ஈஸ்வரி திட்டிக் கொண்டிருக்கிறார். நீ முன்னாடியே சொல்லி இருந்தா ஏதாவது செஞ்சு இருக்கலாம். நீ சொல்லாமல் மறைத்தது தான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு எழில் தப்பு செஞ்சவன் செழியன் நீங்க திட்டனும்னா அவனை திட்டுங்க. அம்மாவை ஏன் திட்டுறீங்க என்று எதிர்த்து பேசுகிறார். மறுபக்கம் கோபி செழியன் ரூமிற்கு சென்று நடந்தது பற்றி விசாரித்து செழியனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். கூடவே நானும் உங்க அம்மாவ பிரிஞ்சதுக்கு காரணம் எங்க ரெண்டு பேருக்கு எதுவும் ஒத்து வரல அதனாலதான். நான் வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டியது ஆயிடுச்சு.

ஆனா உனக்கு அப்படியா? சரி கவலைப்படாத ஜெனி கட்டாயம் திரும்ப வருவா என்று கூறுகிறார். அடுத்து ஜெனியின் அம்மா தன்னுடைய கணவருக்கு போன் பண்ணி நடந்த விஷயம் எல்லாவற்றையும் சொல்கிறார். அடுத்து ஜெனியிடம் பாக்கியாவுக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கு. ஆனால் அவர்கள் எதுவுமே சொல்லாம மறைச்சு வச்சிருக்காங்க.
இனிமேல் நீ அங்க போகவே கூடாது என்று அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் வீட்டில் பாக்கியாவிடம் இனியாவும் எழிலும் சென்று பேசுகின்றனர். அப்போது எழில் நீ இதை எல்லாரும் முன்னாடியும் சொல்லி இருக்கலாம். இனியாவது ஏதும் பிரச்சனை என்றால் சொல்லிவிடு என்று சொல்ல பாக்கியா அப்போது கணேசன் விஷயத்தையும் எப்படியாவது எழிலிடம் சொல்லி விட வேண்டும் என்று யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications