மாலினியால் பாக்யாவிடம் மாட்டிக் கொள்ளும் செழியன்.. ஈஸ்வரி கேட்ட கேள்வி.. இனி நடக்கப் போவது இது தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் செழியன் வீட்டில் தங்காமல் வெளியே சுற்றிக் கொண்டிருப்பது பற்றி பாக்கியா கேள்வி கேட்க செழியன் அதிர்ச்சி ஆகிறார்.

அதே நேரத்தில் கோபி பாக்யாவின் லைசன்ஸ் திருடிட்டு போனது பற்றி எதுவும் சொல்லாமல் எழில் மறைக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா வீட்டிற்கு வந்ததும் எல்லோரும் டூர் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியா டூரில் நடந்த பிரச்சனைகள் பற்றி சொல்லி கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்திலும் அம்மா எல்லாத்தையுமே அசால்டாக தாண்டி வந்துட்டாங்க. அதைவிட பாட்டி இனி எப்போது திரும்ப காலேஜில் அசைன்மென்ட் தருவாங்க அடுத்து நாம எப்போ டூருக்கு போகலாம் என்று கேட்கிறார்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி இடம் எப்படி லைசென்ஸ் போனது என்று தான் தெரியல என்று பாக்யா சொல்ல, அதற்கு எழில் கண்டதையும் பற்றி யோசிக்காமல் போய் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி அனுப்பி வைக்க முயற்சி செய்கிறார். அப்போது பாக்கியா செழியன் வீட்டிற்கு சரியாக வந்தானா என்று கேட்க, அதற்கு அமிர்தா செழியன் முன்பு மாதிரி வீட்டிற்கு வருவதில்லை இப்பவாவது தான் வருகிறார். வந்தாலும் வீட்டில் சாப்பிடுவதில்லை என்று சொல்ல பாக்கியா சந்தேகப்படுகிறார்.
அதற்கு ஈஸ்வரி அவன் வேலைக்கு தான போயிருக்கான் விடு, எதுக்காக சந்தேகப்படுறா என்று சமாளிக்கிறார். அது தொடர்ந்து செழியன் மாலினி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மாலினி இன்னைக்கு நீங்க என்கூடவே தங்கினால் நல்லா இருக்கும் என்று சொல்லி இங்கேயே இருக்கீங்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது இல்ல நான் இன்னைக்கு வீட்டுக்கு போகணும் ஜெனி கூட கொஞ்ச நேரம் இருந்து பேசணும் என்று சொல்ல, அதற்கு மாலினி இல்ல ப்ளீஸ் இன்னைக்கு இங்கேயே இருங்களேன் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.அந்த நேரத்தில் பாக்கியா செழியனுக்கு போன் செய்கிறார். அப்போது செழியன் பாக்கியாவிடம் அம்மா எப்போ ஊருக்கு வர என்று கேட்க, நான் வீட்லதான் இருக்கேன் நீ சீக்கிரமா வீட்டுக்கு வா நீ வந்த பிறகு தான் நான் தூங்குவேன் என்று பாக்கியா சொல்கிறார்.
அதை தொடர்ந்து செழியன் வீட்டிற்கு வருகிறார். அப்போது பாக்கியா உன்னுடைய செயல்பாடுகள் எதுவும் எனக்கு சரின்னு தோணல. நீ என்ன தப்பு பண்ணாலும் அம்மாவுக்கு தெரிய வந்துடும். அதனால பார்த்து நடந்துக்கோ என்று வார்னிங் கொடுத்து அனுப்பி வைக்கிறார். அதைத்தொடர்ந்து காலையில் பாக்யா டூரில் இருக்கும்போது கோபி அடிக்கடி ஃபோன் செய்து தொல்லை பண்ணிய விஷயத்தைப் பற்றி ராமமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications