பாக்கியலட்சுமியில் செம டுவிஸ்ட்.. மீண்டும் உயிரோடு வந்த அமிர்தாவின் முதல் கணவர்.. இனி எழில் நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 4ஆம் தேதியில் இருந்து ஒன்பதாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது
அதில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அமிர்தாவின் முதல் கணவர் கணேசன் மீண்டும் உயிரோடு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சில வாரங்களாகவே கதை பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. எப்போதும் போல பாக்யா தன்னுடைய திறமையை நிரூபிக்கிறேன் என்று எடுக்கும் முயற்சிகளும் அதில் வரும் பிரச்சனைகளை நோக்கியே கதை போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பப் பெண் ஒருவர் தன்னுடைய சுய கௌரவத்தையும் தனக்கான அடையாளத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் கதையைப் பற்றி தான் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. கோபி தன்னை வேண்டாம் என்று ராதிகாவை திருமணம் செய்து பிறகு பாக்கியா அடுத்தடுத்து ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி பெற்று கொண்டே இருக்கிறார்.
அதுபோல எழில் திருமண விஷயத்தில் மொத்த குடும்பத்தையும் எதிர்த்து எழில் காதலித்த அமிர்தாவையே எழிலுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அமிர்தா கேரக்டரில் நடித்து வந்த ரித்திகா திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். அதை தொடர்ந்து இனி சீரியலில் கதை வித்தியாசமாக போகப்போகிறது அமிர்தா நெகட்டிவ் கேரக்டராக மாறப் போகிறார் என்ற தகவல்கள் வலம் வந்தது.
அதுபோல இன்றைய எபிசோடில் அமிர்தாவில் முதல் கணவர் கணேசன் நினைவு நாள் என்று அதை நினைத்து அமிர்தாவின் அத்தையும் மாமாவும் சோகமாக இருப்பதாக அமிர்தா கூறி இருப்பார். எழில் அவர்களிடம் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் அமிர்தாவின் அத்தையும் மாமாவும் அமிர்தாவின் கணவர் கணேசனின் புகைப்படத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறார்கள்.

நீ இப்படி எங்கள கடைசி காலத்துல அழ வைத்துவிட்டு போயிட்டியே கணேசா என்று கணேசனின் அம்மா அழுது கொண்டிருக்க, இப்படி கடைசி காலத்துல பிள்ளைய நினைச்சு தவிக்கணும்னு விதி இருந்தா நாம என்ன பண்ண முடியும் என்று கணேஷ் எனின் அப்பா சொல்லி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து சாமி கும்பிடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேசன் வீட்டு கதவை வந்து தட்டுகிறார். அதை பார்த்ததும் அவருடைய அம்மா அதிர்ச்சி அடைகின்றார்.
பிறகு ஐயோ நீ இறந்து போயிட்டியானு நினைச்சுட்டேன்டா என்று கதறி அழுது கொண்டு இருக்க, அப்போது கணேசன் அமிர்தா எங்க அம்மா என்று அமிர்தாவை அங்கும் இங்கும் தேடுகிறார் இப்படியாக பிரமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் இனி எழிலின் நிலைமை என்ன? அமிர்தா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்று யூகிக்க முடியாத வகையில் இந்த பிரமோ இருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications