பாக்கியலட்சுமி: ராதிகாவிடம் சவால் விட்ட பாக்யா.. ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சி.. சரியான முடிவுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதிக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரியை கணவர் இறந்த பிறகு பொட்டு வைக்க கூடாது என்று ராதிகாவின் அம்மா திட்டி இருந்த நிலையில் பாக்யா ராதிகா வீட்டிற்கே சென்று மிரட்டி இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. காரணம் இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து தூணாக இருந்த ராமமூர்த்தியின் கேரக்டர் சில வாரங்களுக்கு முன்பு இறந்து போவது போன்று காட்டிவிட்டனர். இனி எதை வைத்து கதை ஓட்ட போகிறார்கள் என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

television baakiyalakshmi serial vijay tv

ஏற்கனவே எழில் வீட்டை விட்டு போயிருக்கிறார். அவர் சாதிப்பது போன்று கதை நகரும் என்று பார்த்தால் மீண்டும் இனியாவும், செழியனும் கோபி பக்கம் மாறி இருக்கின்றனர். இதற்கு இல்லையா சார் எண்ட் என்று சொல்வது போல இனியா இந்த முறையும் மனம் மாறி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்வதற்கு பாக்கியா மறுத்தால் உடனே கோபி வீட்டுக்கு இனியா செல்வது வழக்கமாக இருக்கிறது.

கோபி வீட்டிற்கு சென்று ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்வது, அதற்குப் பிறகு பாக்கியா இனியாவை காப்பாற்றுவதும் அதற்குப் பிறகு இனிய அழுது கூப்பாடு போட்டு அம்மா உன்ன நான் புரிஞ்சுகிட்டேன் என்னை மன்னிச்சிரு என்று மன்னிப்பு கேட்பது பலமுறை நடந்துவிட்டது. இப்போது மீண்டும் அதுபோலவே கதை போய்க்கொண்டிருக்கிறது. செழியனும் மனம் மாறி குடும்பத்திற்காக யோசித்துக் கொண்டிருந்தார் ஆனால் இப்போது அவரும் கோபியின் புகழ் பாடத் தொடங்கிவிட்டார்.

television baakiyalakshmi serial vijay tv

இதனால் இதை பார்க்கும் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது. அதில் வெளியே போயிருந்த ஈஸ்வரி கோபமாக வீட்டிற்கு வந்து நான் பாக்யா பேச்சை கேட்டு பொட்டு வச்சு வெளியே போனது தப்பு என்று நெற்றியில் வைத்திருந்த பொட்டை எடுத்து தூக்கி எறிகிறார்.

உங்க மாமா இறந்த பிறகு நான் இதையெல்லாம் வச்சிருக்கவே கூடாது என்று கோபப்படுவதை பார்த்து அத்தையை யார் அப்படி சொன்னாங்கன்னு தெரியலையே என்ற பாக்யா சொல்லிக் கொண்டிருக்கும் போது ராதிகா ஆன்ட்டியோட அம்மா தான் அப்படி சொன்னாங்க என்று இனியா சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அதோடு காலேஜுக்கு ஈஸ்வரி இனியாவை கூட்டிட்டு போகும் போது ஆட்டோவில் ஏறிய ஈஸ்வரியிடம் ஏங்க அவருக்கு சாவுக்கு போட்ட மாலை கூட இன்னும் காயல அதுக்குள்ள ஊர் சுத்த கிளம்பியாச்சு. அந்த மனுசனோட ஆத்மா நல்ல சாந்தி அடைஞ்ச மாதிரி தான் என்று சொல்லி இருக்கிறார். உடனே பாக்கியா கோபமாக ராதிகா வீட்டிற்கு சென்று உங்கள் அம்மாக்கு வேற வேலையே இல்லையா? என் மாமியார் என்ன செய்யணும்னு சொல்றதுக்கு உங்க அம்மாவுக்கு என்ன உரிமை இருக்கு? இனிமே இப்படி ஏதாவது நடந்தால் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் தொலைத்திடுவேன் என்று மிரட்டுகிறார். என்ன நடந்தது என்று தெரியாத ராதிகா அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக காட்சிகள் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+