எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கோபி கேரக்டரில் நடித்த நடிகர் சதீஷ் தற்போது மீண்டும் பேசுபொருளாகி உள்ளார். சமீபத்தில் நடிகர் சதீஷ் வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

உருக்கமாக பேசிய நடிகர் சதீஷ்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் நடிகர் சதீஷ் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். கடந்த மாதம் தான் ஒரு புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளதாகவும், மீண்டும் விஜய் டிவி மூலம் ரசிகர்களை சந்திக்க வருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது அந்த வாய்ப்பு தன்னிடம் இருந்து விலகிவிட்டதாக நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். "நான் கமிட் ஆன அந்த சீரியல் சில காரணங்களால் இப்போது எனக்கு கிடைக்கவில்லை. அது நம்மை விட்டு போய்விட்டது" என்று நடிகர் சதீஷ் நேரடியாக கூறியுள்ளார்.
மேலும், "சில விஷயங்கள் நம்மை விட்டு போகும் போது அது கஷ்டமாக இருக்கும். ஆனால் பின்னர் அது நமக்கு நன்மையாக மாறும். இப்போ கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது, ஆனாலும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்" என்றும் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். இறுதியாக "எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க" என்ற நடிகர் சதீஷின் வார்த்தைகள் ரசிகர்களை மிகவும் உருக்கிவிட்டது.
ரசிகர்களின் ஆதரவு நடிகர் சதீஷ்க்கு
இந்த வீடியோ வெளியானதும் நடிகர் சதீஷ்க்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "நீங்கள் கண்டிப்பாக திரும்ப வருவீர்கள்", "கோபி கதாபாத்திரத்தை நீங்கள் மட்டுமே அந்த அளவுக்கு செய்து காட்ட முடியும்" என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் சதீஷின் அடையாளம்
பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷ் நடித்த கோபி கதாபாத்திரம் ஆரம்பத்தில் கொடுமையான கணவராக இருந்தாலும், பின்னர் பாவமான மனிதராக மாறியது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
ஆரம்பத்தில் நடிகர் சதீஷை திட்டிய ரசிகர்களே, பின்னர் அவரது நடிப்பை பாராட்டும் நிலை ஏற்பட்டது. பலரும் "இந்த சீரியலின் முதுகெலும்பு நடிகர் சதீஷ் நடித்த கோபிதான்" என்று கூறும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நடிகர் சதீஷின் பயணம்
சதீஷ் 90களிலிருந்தே தமிழ் தொலைக்காட்சி உலகில் தனது பயணத்தை தொடங்கியவர். பல சீரியல்களில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானது பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக தான்.
தொடக்கத்தில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த சதீஷ். பின்னர் முக்கிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இயல்பான நடிப்பால் தனித்துவம் பெற்றார். அவரது நடிப்பு வாழ்க்கை நெருக்கமாக இருப்பதால் பெண்கள் முதல் இளைஞர்கள் வரை நடிகர் சதீஷ்க்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
விருது கிடைக்காத வருத்தம்
பாக்கியலட்சுமி சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், நடிகர் சதீஷ்க்கு அந்த சீரியலுக்காக பெரிய விருதுகள் கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. இதையும் பலர் சமூக வலைதளங்களில் முன்பு பதிவு செய்திருந்தனர்.
மீண்டும் வருவாரா நடிகர் சதீஷ்?
நடிகர் சதீஷ் தானே கூறியபடி, விஜய் டிவிக்கும் தன்னிடம் நம்பிக்கை இருப்பதாகவும், தன்னுக்கும் அந்த சேனல் மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் ஒரு புதிய சீரியல் மூலம் நடிகர் சதீஷ் மீண்டும் ரசிகர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒரு வாய்ப்பு கைவிட்டாலும், இன்னொரு பெரிய வாய்ப்புடன் நடிகர் சதீஷ் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதுபோல விஜய் டிவியில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆதலால் காதல் செய்வீர் என்ற சீரியலில் தான் நடிகர் சதீஷ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்த சுசித்ரா இருவரும் சேர்ந்த நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதால் அவருக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்விகளும் எழுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications