கடைசியில் எல்லோருக்கும் இதுதான்.. ஆட்டம் போடாதீங்க.. உருக்கமாக பேசும் கோபி.. சீரியலை விட்டு விலகலா?
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் தான் தன்னுடைய காரை விட்டுவிட்டு சைக்கிள் வாங்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சதீஷ் கோபி என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.
கோபி வில்லனாகவும் கதாநாயகனாகவும் பாக்கியலட்சுமி சீரியலில் பலர் உடைய கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் புது சூட்டிங்கில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நிஜப் பெயர் மறந்து போச்சு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான பெண் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகின்றனர். விஜய் டிவியில் டிஆர்பியிலும் முதலிடத்தில் இந்த சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறது இவருடைய நிஜப் பெயர் சதீஷ் என்பதை விடவும் கோபி என்று அழைத்தால் தான் இவரை பலருக்கும் தெரிந்து விடும்.

ராதிகாவால் படும் கஷ்டம்
அப்பா அம்மா பார்த்து திருமணம் செய்து வைத்த பாக்கியாவை விட்டுவிட்டு தான் தான் சிறுவயதில் காதலித்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து தற்பொழுது ராதிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறிய கோபி, ராதிகா செய்யும் செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். பாக்யா வீட்டில் இருக்கும் போது தான் என்னதான் மிரட்டி கொண்டு இருந்தாலும் பாக்யா எதிர்த்து பேசாமல் கோபிக்கு அதிக அளவில் செலவு வைக்காமல் இருந்த நிலையில், இப்போது ராதிகா கோபியை கடன் வாங்கும் நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும் தனக்கு பிடித்த பெண் என்பதால் கோபி அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருக்கிறார். இந்த கேரக்டரில் தத்ரூபமாக நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் சதீஷ்

புது கமிட்மெண்ட்
இந்த நிலையில் தற்போது சீரியல் நடிகர் ரஞ்சித், பழனிச்சாமி என்கிற கேரக்டரில் அறிமுகம் ஆகினார். ஏற்கனவே ரஞ்சித் அறிமுகமதால் கோபியின் கேரக்டர் அதிகமாக இனி காட்டப்படாது என்று கோபியே கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விட்டு கோபி புதியதாக கேரளாவில் சூட்டிங்கில் இருந்து வருகிறார். முதல் நாள் சூட்டிங் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த கோபி நடிகர் சதீஷ் இதற்கான காரணத்தை பற்றி விரைவில் கூறுவேன் என்று கூறியிருக்கிறார்.

புது புகைப்படங்கள்
இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் போகிற போக்க பார்த்தா இனி காரை விற்றுவிட்டு சைக்கிள் வாங்கிவிட்டு நாமே ஊர் சுத்த கிளம்பி விட வேண்டியதுதான் போல என்று கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து இன்னொரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் இவர் புல்லட் பைக்கில் கெத்தாக போஸ் கொடுத்து இருக்கிறார். பாக்கியலட்சுமிக்கு சீரியலின் கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட்டாக புது சூட்டிங் புகைப்படம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அடுத்ததாக ஒரு தத்துவம் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
அதில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் சரி பிரபலமாக இருந்தாலும் சரி அவர்களுக்கு கடைசியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல் தான். அதனால் யாரையும் கஷ்டப்படுத்தாமல் அதிகமாக ஆசைப்படாமல் இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து இவர் கேரளாவில் இருந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால் இனி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? இல்லையா? என்று கேள்விகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே நான் இந்த சீரியலை விட்டு விலகவில்லை என்று சதீஷ் விளக்கம் கொடுத்திருந்தாலும், தற்போது இவர் புதிய ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகி இருப்பதால் என்ன மாதிரி முடிவு எடுக்கப் போகிறார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications