விவாகரத்தை நோக்கி பாக்கியலட்சுமி சீரியல்.. எழிலுக்கா? செழியனுக்கா? ரகசியத்தை உடைத்த பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நடிகர் சதீஷ் சில தகவல்களை கூறி இருக்கிறார்.
ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் இனி கதை விவாகரத்து நோக்கி பயணிக்க போகிறது என்று நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதுவும் கோபி பாக்கியாவை விட்டு பிரிந்து போன பிறகு பாக்யா அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும் அதில் சாதிக்கும் அவருடைய திறமையும் பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த நிலையில் எதிர்பார்க்காத விதமாக தான் இப்போது பாக்கியலட்சுமி சீரியலின் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் செழியன் மாலினி இடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஸ்கூல் படிக்கும்போது இருந்து காதலித்து வீட்டு எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்து கொண்ட ஜெனியை விட்டுவிட்டு செழியன் மாலினியோடு நெருக்கம் காட்டிக்கொண்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் அமிர்தாவில் முதல் கணவர் இறந்துவிட்டார் என்று கருதி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் உயிரோடு வந்து அமிர்தாவை தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது வெளியான ப்ரோமோவில் கூட அமிர்தாவுக்கு இரண்டாவது திருமணம் ஆனது அவருக்கு தெரியவந்து அதிர்ச்சியில் இருக்கிறார். இந்த நிலையில் இனி பாக்கியலட்சுமி சீரியலின் கதை எப்படி பயணிக்க போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இனி அடுத்ததாக விவாகரத்து காட்சிகள் தான் வேகமாக வர இருக்கிறது என்று கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார். ஏற்கனவே மாலினி செழியனுக்கு குழந்தை பிறந்திருக்கும் நேரத்திலும் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி செழியனை பிளாக்மெயில் செய்து கொண்டிருக்கிறார். செழியன் நடவடிக்கையும் பாக்யா மற்றும் ராமமூர்த்திக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஜெனியை வீட்டிற்கு வேகமாக கூட்டிட்டு வந்து விட வேண்டும் என்று பாக்கியா பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுவரைக்கும் பாக்கியா செழியன் மீது ஜெனிக்கு எந்த சந்தேகமும் வராமல் இருக்கிறது. ஏற்கனவே கோபி விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததும் உங்க அப்பா மாதிரி நீ பண்ணுனா நான் பாக்கியா ஆன்ட்டி மாதிரி பார்த்துகிட்டு இருக்க மாட்டேன் என்று மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் இனி சீக்கிரமாக ஜெனிக்கு செழியனின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்து மாலினி பற்றிய ரகசியங்கள் வெளியே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முதலில் செழியன் மற்றும் ஜெனிக்கு விவாகரத்து காட்சிகள் தான் இனி வேகமாக வர இருக்கிறது என்று தெரிகிறது.
அதைத் தொடர்ந்து அமிர்தாவிற்கு அடுத்த பிரச்சனை வரும் அப்போது ஏற்கனவே இப்போது எழில் மற்றும் அமிர்தா இருவருமே இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கணேசனின் செய்தி தெரிய வரும்போது என்ன மாதிரி பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications