பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்.. அட! இவருக்கு இத்தனை வயசா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளை வித்யாசமாக கொண்டாடி இருக்கிறார். இவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு சில நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் தனி அங்கீகாரம் பெற்று விடுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திவ்யா கணேஷ். இவர் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் தான் மகாநதி சீரியலில் இருந்து விலகி இருந்தார். பாக்கியலட்சுமி சீரியல் தான் இவரை புகழும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

அதிலும் ஜெனி கேரக்டர் இவருக்கே அமைந்தது போல சிறப்பாக இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பித்ததில் இருந்து இந்த சீரியலில் திவ்யா கணேஷ் ஜெனியாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ஜெனிக்கு ஜோடியாக செழியன் கேரக்டரில் நடிகர் ஆரியன் நடித்து வந்தார். அவர் விலகிய பிறகு இப்போது புது நடிகர் நடித்து வருகிறார். ஆனால் ஜெனி ஆக திவ்யா கணேஷ் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அதுபோல திவ்யா கணேஷ் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது செல்லம்மா சீரியலிலும் நடித்திருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது திவ்யா கணேஷ் நடித்த செல்லம்மா சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு சீரியலில் நடித்தாலும் கெத்தானதாக இளைஞர்களின் மனதை கவரும் வகையில் ஜெனியாக பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து கொண்டிருக்கும் திவ்ய கணேஷ் நேற்று தன்னுடைய 30ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

அப்போது விதவிதமான பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து இருக்கிறார். அதிலும் தன்னுடைய பிறந்தநாளுக்கு தானே வாழ்த்துக்கள் சொன்னது போல இவர் வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகமான லைக் சொல்லி குவித்து வருகிறது. ஆரம்பத்திலிருந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் தாண்டி திவ்யா கணேஷ் சினிமா துறையில் தொடர்ந்து கொண்டிருந்தாலும் தான் சந்திக்கும் பிரச்சனைகளை சில நேரங்களில் திவ்யா ஓபன் ஆகவும் பேசி இருக்கிறார்.

அதிலும் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா கணேஷ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதனால் தான் தன்னால் மகாநதி சீரியலில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் சீரியல் தரப்பினர்கள் புது நடிகையை தேடி இருக்கிறார்கள் என்று விளக்கமும் கொடுத்து இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இப்போது அவர் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு மாறி சந்தோஷமாக புகைப்படங்கள் வெளியிட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் தினமும் இதுபோல புகைப்படங்கள் போடுங்க என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டு வாரங்களாக ராமமூர்த்தி தாத்தாவின் இறப்பு வைத்து அவர்களும் அழுது பார்க்கும் ரசிகர்களையும் அழ வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் சீரியல் வேறு நிஜ வாழ்க்கை வேறு என்று ஜாலியாக திவ்யா கணேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொண்டாடி இருக்கிறார். அவருக்கு நம்முடைய சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications