புது கார் வாங்கி நிஜ வாழ்க்கையிலும் சாதித்த "பாக்கியா”.. ஆனால் என்ன சொல்லி இருக்காங்க பாத்தீங்களா..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுசித்ரா புதியதாக கார் வாங்கி இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதோடு தன்னுடைய நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் மோட்டிவேஷன் கொடுக்கும் விதமாகவும் சில கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அது குறித்து பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த அதே விறுவிறுப்பு இப்போதும் இந்த சீரியலுக்கு இருந்து கொண்டு வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் கதாநாயகி பாக்யா கோபியிடம் அடிக்கடி அவமானப்பட்டு கொண்டிருக்கும் போது பலர் உச்சி கொட்டி இவருக்காக பீல் பண்ணி இருந்தனர்.
பல வீடுகளில் குடும்பத்தில் இருக்கும் தலைவிகளுக்கு இந்த மாதிரி தான் நிலைமை இருக்கிறது என்று பாக்கியாவை பார்த்து பல பேர் எங்களுடைய நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது என்று கூறிக் கொண்டிருந்த நிலையில், கோபி பாக்கியாவை விட்டு விலகி சென்ற பிறகு தன்னுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக பாக்கியா எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இதனாலேயே பாக்கியாவை இப்போது அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பெண்களுக்கு ரோல் மாடலாகவும் பாக்கியா கேரக்டர் மாறிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா இதற்கு முன்பு பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக "சைவம்" திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பலருடைய பாராட்டைப் பெற்றிருந்தாலும் பெரிய அளவில் வெள்ளிக்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. அந்த நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இவருக்கு இவருடைய வயதிலேயே உள்ள பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்திருந்தாலும் அதற்கும் சரி என்று சொன்ன காரணத்தினால் தான் தற்போது அதிக ரசிகர்களை பாக்யாவாக சுசித்ரா கவர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சுசித்ரா பென்ஸ் காரில் புதிய மாடல் ஒன்றை வாங்கி இருக்கிறார். கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த காரின் பக்கத்தில நின்ற படியும் காரை ஓட்டியப்படியும் சுசித்ரா சில புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
அதோடு சுசித்ரா தான் வெளியிட்ட பதிவுகள் கேப்ஷன் ஆக," உங்களுடன் கைகோர்க்கும் தருணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறைவனின் கையை தொட்டால் போதும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று அதிகமான ரசிகர்கள் பாக்கியாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications