பாக்கியலட்சுமி: கர்ப்பமாகும் ராதிகா.. கோபி செய்த கோமாளி வேலை.. கோபத்தில் ஈஸ்வரி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 18ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் எழில் மற்றும் அமிர்தா இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி பிரச்சனை செய்து கொண்டிருக்க ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் உறுதி ஆகி இருக்கிறது. அதே நேரத்தில் இனி ராதிகாவின் கர்ப்பத்தை வைத்து வீட்டில் என்ன பிரச்சனை நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எழில் குழந்தையை பற்றி இனி பேசாதீங்க என்று ஈஸ்வரியிடம் சொல்ல, அதற்கு ஈஸ்வரி நீங்க குழந்தை பெத்துக்குற வரைக்கும் நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தான் இருப்பேன் என்று சொல்கிறார். அதற்கு எழில் குழந்தை பெத்துக்க வேண்டிய விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நான் தான். நான் இன்னும் லைஃபில் செட்டில் ஆக வேண்டியது இருக்கு என்று சொல்ல,

ஈஸ்வரி அதான் நீ ஒரு படம் பண்ணிட்டியே சின்ன வயசுல குழந்தை பெத்துக்கணும் இல்லன்னா அதுக்கப்புறம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று அட்வைஸ் செய்கிறார். அதோடு பெரியவங்க நாங்க சொல்றதை மட்டும் நீ கேட்டா போதும். எனக்கு இந்த வீட்டுல கூடிய சீக்கிரம் வாந்தி எடுக்கிற சத்தம் கேட்கணும் என்று கோபப்படுகிறார். அந்த நேரத்தில் ராதிகா வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
கோபி என்ன ஆச்சு என்று கேட்க, தெரியல ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது சேரலைன்னு நினைக்கிறேன் என்று பலவிதமாக யோசிக்கிறார். அடுத்ததாக எழில், செழியன் ஹாலில் இருந்து பேசிக் கொண்டிருக்கும்போது பாக்யா தூங்க போக சொல்ல செழியன் எனக்கு ரூமுக்கு போகவே பயமாயிருக்கு என்று சொல்கிறார். அதோடு ஜெனி நடந்து கொள்வதை பற்றி சொல்ல அதற்கு பாக்கியா நீ திரும்பவும் தப்பு பண்ண மாட்ட என்ற நம்பிக்கை வரவரைக்கும் ஜெனி இப்படித்தான் இருப்பா.
அவளுக்கு நீ தான் நம்பிக்கை கொடுக்கணும் என்று அட்வைஸ் செய்கிறார். பிறகு நைட்லாம் ராதிகா வாந்தி எடுத்து மறுநாள் காலையில் கோபியை எழுப்பி மெடிக்கல் ஷாப் போகணும் என்று சொல்ல, கோபி ஹாஸ்பிடல் போகலாம் என்று சொல்கிறார்.
சன் டிவி ப்ரைம் டைம் சீரியலில் ரீ என்ட்ரி ஆகும் கதாநாயகன்.. வேற மாதிரி கலக்கல்.. இனி அசத்தல்தான்
அதற்கு ராதிகா முதலில் மெடிக்கல் ஷாப் போகலாம் என்று சொல்கிறார். பிறகு இருவரும் மெடிக்கல் ஷாப் கிளம்பி போக, கோபி ஈஸ்வரி இடம் ராதிகா வாந்தி எடுக்கும் விஷயத்தை சொல்லிட்டு நாங்க மெடிக்கல் ஷாப் போயிட்டு வரோம் என்று கிளம்பி போகிறார். ஆனால் எல்லா மெடிக்கல் ஷாப் மூடி இருக்க அதனால் ராதிகா கோபியை திறந்திருக்கும் மெடிக்கல் ஷாப்புக்கு போங்க என்று திட்டுகிறார்.
இப்படியாக எபிசோடு முடிவடைந்திருக்கும் நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் ராதிகா கர்ப்பம் என்பது கன்பார்ம் ஆக கோபியிடம் சொன்னதும் முதலில் சந்தோஷப்படும் கோபி பிறகு அதிர்ச்சி அடைகிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications