சன் டிவி ப்ரைம் டைம் சீரியலில் ரீ என்ட்ரி ஆகும் கதாநாயகன்.. வேற மாதிரி கலக்கல்.. இனி அசத்தல்தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் சீரியல் நடிகர் ஜெய் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார். சுந்தரி சீரியல் கதாநாயகி சுந்தரியின் நண்பராக நடித்திருக்கிறார்.
ஆனால் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிவடைந்த பிறகு இரண்டாவது பாகத்தில் அதிகமாக ஜெய் வரவில்லை. காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மீனா என்ற சீரியலில் கதாநாயகனாக ஜெய் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சுந்தரி சீரியலில் தான் மீண்டும் வருவதாக ஜெய் அப்டேட் கொடுத்திருக்கிறார். சுந்தரி சீரியலின் முதல் பாகத்தில்
சுந்தரியின் நண்பராக சித்து கேரக்டரில் ஜெய் நடித்திருந்தார் இந்த சீரியல் மூலமாக ஜெய்க்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர். இவருடைய நிஜ பெயர ஜெய் என்பதை விடவும் இவருக்கு சித்து என்ற பெயரில் தன் அதிகமான ஃபேன்ஸ் பாலோவர்ஸ் கிடைத்தனர்.
அதிலும் கேர்ள்ஸ் பாலோவர்ஸ் அதிகமாகவே கிடைத்தனர். இந்த நிலையில் இவருக்கு அந்த சீரியலில் திருமணம் நடப்பது போன்று காட்சிகள் இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் இவருடைய காட்சிகள் சீரியலில் இல்லை. அதற்கு காரணம் ஜெய் சன் டிவியில் மீனா சீரியலில் கதாநாயகனாக அறிமுகமானதால் சுந்தரி சீரியலில் இருந்து விலகிவிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் ஆரம்பத்திலேயே தனக்கு எந்த வாய்ப்பு வந்தாலும் தான் சுந்தரி சீரியலில் இருந்து விலக மாட்டேன் என்று ஜெய் விளக்கம் கொடுத்திருந்தார். அதற்கு காரணம் சுந்தரி சீரியல் தான் எனக்கு பெரிய அளவில் பிரபலத்தை தந்தது அதனால் இந்த சீரியலில் இருந்து நான் விலக மாட்டேன் என்று ஜெய் கூறி இருந்த நிலையில் பல நாட்கள் கழித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேடி கெட்டப்பில் புடவை கட்டிக்கொண்டு தான் ரெடியாவது போல ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த வீடியோவிற்கு, "எப்படித்தான் இந்த பொண்ணுங்க இந்த புடவையை கட்டி ரெடியாகறாங்களோ தெரியல... உங்களுக்கெல்லாம் ஹாட்ஸ் அப்" என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வந்த நிலையில் இவரிடம் மீண்டும் சுந்தரி சீரியலில் வருவீர்களா என்று கேட்டபோது ஆமாம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த முறை இவருடைய என்ட்ரி வேற மாதிரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தரி சீரியலில் சுந்தரி கலெக்டராக மாறியதற்கு பிறகு கதை பெரிய அளவில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் சித்து இந்த சீரியலில் களம் இறங்குவதால் கலகலப்பான காட்சிகள் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications