பாக்கியலட்சுமி: ராதிகா கர்ப்பம்.. கோபியை அவமானப்படுத்திய செழியன்.. ஈஸ்வரியை கதறவிட்ட பாக்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா கர்ப்பமாக இருப்பதை கோபி வீட்டில் எழில் மற்றும் செழியனிடம் சொல்லப்போக இருவரும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் ராதிகாவின் நடவடிக்கையை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தேகம் வருகிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகாவிடம் அவருடைய அம்மா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்ல சொல்லிட்டீங்களா? என்று கேட்க, அதற்கு ராதிகா இல்ல கோபி சொல்லுறதா சொல்லி இருக்காரு என்று சொல்ல, அதற்கு அம்மா அவர் சொல்ற ஐடியாவுல இருக்காரா? இல்ல நான் வந்து சொல்லவா? என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது மயூ ஓடிவந்து ராதிகாவை பிடித்துக் கொள்கிறார்.

Baakiyalakshmi Serial April 26th promo and episode full update

பிறகு ராதிகாவின் அம்மா கமலா நைசாக மயூ விடம் ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொல்ல மயூ ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஒரு குட்டி பாப்பா வந்தா எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்று சொல்ல ராதிகாவும் சந்தோஷப்படுகிறார். அடுத்த கட்டத்தில் பாக்யா ஊறுகாய் செய்து கொண்டிருக்க ராதிகா டிபன் கேரியரோடு வீட்டிற்குள் வருகிறார். டிபனை பார்த்தது ஈஸ்வரி என்ன ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வரியா என்று கேட்க அதற்கு இல்லை எங்க அம்மா சமைச்சு கொடுத்தாங்க என்று சொல்லியபடி ஊறுகாயை பார்த்ததும் ராதிகாவுக்கு எச்சில் ஊறுகிறது.

இது ஊறுகாய் தானே என்று கேட்டு நான் கொஞ்சம் எடுத்துக்கவா என்று வாங்கி சாப்பிடுகிறார். அப்போது ஈஸ்வரி இவளுக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வந்து இருக்கா, அப்போ கோபி என்ன சாப்பிடுவான்? என்று புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு பாக்யாவிடம் ராதிகா வாந்தியை காரணம் காட்டி சமைக்க மாட்டேங்குறா. நீ கோபிக்கும் சேர்த்து சமைக்கிறியா என்று சொல்ல, பாக்யா நான் அவருக்காக சமைச்சு கொடுக்க மாட்டேன்.

உங்களுக்காக தான் அவரை இந்த வீட்டில் இருக்கவே சம்மதித்தேன் என்று கோபப்படுகிறார். அதற்கு ஈஸ்வரி சரி சரி ஒன்னும் சமைக்க வேண்டாம் இந்த வீட்ல இனி பிரச்சனை வேண்டாம் என்று எழுந்து ஓடுகிறார். அப்போது பாக்கியா என்னை பார்த்தா என்ன இளிச்சவாயன் மாதிரி இருக்கா என்று எழிலிடம் கோபப்படுகிறார். பிறகு செழியன் மற்றும் எழில் இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் போது கோபி அங்கு வந்து என்னடா சரக்கா என்று கேட்க ஜூஸ் என்று சொல்லியும் நம்பாமல் எடுத்து குடித்து டேஸ்ட் செய்கிறார்.

பிறகு ராதிகா கர்ப்பமாக இருப்பதை சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்த கோபி தன்னுடைய நண்பனுக்கு காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கு. இப்போ இன்னொரு குழந்தை பிறந்திருக்கு என்று சொல்ல அதற்கு எழில் இதுல என்ன இருக்கு என்று சொல்ல கோபி அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறார். ஆனால் செழியன் இது கேட்கவே கன்றாவியா இருக்கு என்று பல்பு கொடுக்கிறார்.

இதனால் கோபி தன்னுடைய விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறார். பிறகு ராதிகா கோபியிடம் மயூ கிட்ட விஷயத்தை சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டா என்று சொல்ல, கோபி பசங்க கிட்ட மறைமுகமா சொல்ல முயற்சி பண்ணினேன் அதற்கு எழில் இதுல என்ன இருக்குன்னு சந்தோஷப்பட்டான். செழியன் கேட்கவே கண்றாவியா இருக்கு என்று சொல்லிட்டான்.

அதனால எப்படி சொல்றதுன்னு தெரியல என்று கோபி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ராதிகா நீங்க வீட்டில சீக்கிரமா சொல்லுங்க. இல்லன்னா நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம். அப்படி இல்லன்னா கொஞ்சம் தூரமா போயிடலாம் என்று சொல்ல, கோபி இதுவும் நல்ல ஐடியா தான் என்று கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+