ஈஸ்வரியால் புது பிரச்சனை.. குழப்பத்தில் பாக்கியா.. எழில் கொடுத்த ஏமாற்றம்.. கோபி நிலைமை அவ்வளவுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் பாக்கியா எல்லா பிரச்சனைகளையும் முடித்திருக்கும் நிலையில் ஈஸ்வரி அமிர்தாவிடம் கணேஷ் பற்றி பேசி புது பிரச்சனையை உருவாக்குகிறார்.
அதே நேரத்தில் கோபி தன்னுடைய பிசினஸ் அமோகமாக லாபம் கிடைத்து இருப்பதாக சந்தோஷப்பட்டு பாக்யாவை அவமானப்படுத்துகிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா, எழில், அமிர்தா, ஹோட்டல் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் லாபம் வரவில்லை போட்ட காசு எடுக்க முடியாமல் போய்விட்டது என்று பாக்கியா பேசிக் கொண்டிருக்கும்போது அந்த நேரத்தில் தண்ணீர் எடுக்க வந்த கோபி இதையெல்லாம் கேட்டு சந்தோஷப்படுகிறார். அதற்கு எழில் பார்க்கிங் பிரச்சனை சரியானதும் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது கோபி கிச்சனுக்குள் வந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு பாக்கியாவை நக்கல் அடித்து விட்டு போகிறார். மேலும் தன்னுடைய பிசினஸ் ஆரம்பிச்ச முதல் நாளிலிருந்து லாபம் பிச்சிக்கிட்டு போகுது என்று பெருமையாக பேசிக் கொண்டு போகிறார். அதற்கு எழில் ஒருநாள் அவருடைய செஃப் லீவு போட்டு விட்டால் அப்போ அவரோட நிலைமை என்னவென்று தெரியும் என பதிலடி கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து செழியன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கே வரும் ஜெனி யாருகிட்ட பேசுன? அந்த கிளையண்ட் நீ போய் பார்த்து தான் ஆகணுமா? அவங்க ஆம்பளையா பொம்பளையா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதோடு பழைய கிளைண்ட் கூட இன்னமும் காண்டாக்ட்ல தான் இருக்கிறியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு செழியன் ஜெனியை சமாதானப்படுத்துகிறார். அதற்கு ஃபோன் பாஸ்வேர்ட் என்னவென்று கேட்டு செக் பண்ணுகிறார்.
அடுத்த கட்டத்தில் ஜெனி இடம் ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கும்போது அமிர்தா அங்கு வர பாக்யாவிடம் ஈஸ்வரி, நீ எதுக்கு அமிர்தாவை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறா? வீட்டை யார் பார்த்துக்குவா? எழிலை யார் பாத்துக்குவா? நீயும் சீக்கிரமா ஒரு குழந்தையை பெத்துக்கோ என்று ஈஸ்வரி சொல்ல அமிர்தாவின் முகம் மாறுகிறது. அதோடு இனி அந்த கணேஷ் திரும்பி வந்து பிரச்சனை பண்ணுனா என்ன பண்றது என்று பேசிக்கொண்டே இருப்பதால் அமிர்தா அழுது கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.
அதை பார்த்து ஜெனி ஈஸ்வரி இடம் எதுக்காக இப்படி பேசினீங்க என்று கேட்கிற அதுபோல பாக்யாவும் உங்க ஆசையை சொல்றது தப்பு இல்ல, ஆனால் அவங்கள கட்டாயப்படுத்துவது தப்பு என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நான் பேசுனது நியாயம் இருக்கு என்று சொல்லிவிடுகிறார். அதைத் தொடர்ந்து அமிர்தா ரூமில் டல்லாக இருப்பதை பார்த்த எழில் என்ன ஆச்சு என்று கேட்க ஈஸ்வரி சொன்னதைப் பற்றி அமிர்தா சொல்கிறார்.

அதற்கு எழில் அதுதான் நமக்கு நிலா பாப்பா இருக்காளே என்று சொல்ல, அது உங்க குழந்தை இல்லையே என்று அமிர்தா சொல்ல, அதைக் கேட்டு எழில் இன்னொரு முறை இந்த வார்த்தையை சொல்லாத என்று கோபப்படுகிறார். ஆனாலும் அமிர்தா நாம இன்னொரு குழந்தை பெத்துக்கலாம் என்று திரும்பவும் சொல்ல முதல்ல நான் என்னோட கேரியர்ல ஜெயிக்கணும். அதுக்கப்புறம் நமக்கு தோணும் போது பெத்துக் கொள்ளலாம் என்று எழில் சொல்கிறார். பிறகு வீக்கெண்டில் வெளியே போகலாம் என்று அமிர்தாவை சமாதானப்படுத்தி சிரிக்க வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications