டாப் நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் "பாக்யா".. சரண்யாவுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை சுசித்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒரு கலக்கு கலக்கும் பிரபல நடிகர் ஒருவருக்கு அம்மாவாக நடிக்க பாக்யலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை பார்க்கும் போது தற்போது் அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணனுக்கே டஃப் கொடுப்பார் போலயே என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டின் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் 3 குழந்தைகளுக்கு தாய் படும்பாடுகள் குறித்தும் எப்போதுமே சாந்தமாக இருக்கும் நாயகி ஒரு கட்டத்தில் கணவர் கோபியை இன்னொரு பெண் பங்கு போட்டுள்ளார் என தெரியவந்ததும் சீறி பாய்கிறார்.

சீரியல்

சீரியல்

இந்த சீரியல் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்கிறது. இதில் பாக்யா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. 3 குழந்தைகளுக்கு தாய், மிரட்டும் மாமியார், கடுகடுக்கும் கணவர், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு என பாக்யா படும் கஷ்டங்கள் யதார்த்தமாக சில குடும்பங்களில் நடப்பது என்பதால் அந்த நாயகிக்கும் சீரியலுக்கும் மவுசு ஜாஸ்தி.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

இப்படி சீரியலில் அம்மா கேரக்டரில் அசத்திய "பாக்கியலட்சுமி" சுசித்ராவுக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் பிரபுதேவா, சுசித்ரா மடியில் படுத்திருப்பது போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன.

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

நடிகை சரண்யா பொன்வண்ணன் அண்மைக்காலமாக அம்மா கதாபாத்திரத்தில் ஒரு ரவுண்டு வந்துவிட்டார். தனுஷ், சூர்யா, சசிகுமார், பரத், உதயநிதி உள்ளிட்டோருக்கு அம்மா அதிலும் லூட்டி அடிக்கும் ரோல்களிலும் சென்டிமென்ட் ரோல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த எம்டன் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கியிருப்பார்.

நடிகை சுசித்ரா

நடிகை சுசித்ரா

அந்த வகையில் சரண்யா பொன்வண்ணனை போல் சுசித்ராவுக்கும் அம்மா கேரக்டர் பக்காவாக பொருந்தியிருப்பதால் வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி சீரியல் மொத்த டீமுமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+