பாக்கியலட்சுமி: எழிலிடம் அமிர்தா சொன்ன வார்த்தை.. ஈஸ்வரிக்கு ராமமூர்த்தி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அமிர்தாவிடம் குழந்தை பற்றி ஈஸ்வரி பேசியதால் அமிர்தா வீட்டை விட்டு போக முடிவெடுத்திருக்கும் நிலையில் இதை கேள்விப்பட்ட எழில் வீட்டில் பிரச்சனை ஏற்படுத்துகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி அமிர்தாவை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கோபமாக பேசி காயப்படுத்துகிறார். அதோடு மீண்டும் உன் முதல் புருஷன் கணேஷன் வந்து வீட்டில் பிரச்சனை செய்தால் நீ இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்றால் என்றால் இந்த வீட்டில் உனக்கு ஒரு பிடிப்பு இருந்தால்தானே நீ எங்கே இருக்க முடியும் என்று திட்டிக் கொண்டிருக்க அதை கேட்டு அமிர்தா அழுது கொண்டிருக்கிறார்.

அப்போது ராமமூர்த்தி நீ இப்படியே பேசிட்டு இருந்தா அவ்வளவுதான்.. எவ்வளவு நேரம் தான் அந்த பொண்ணை நீ காயப்படுத்துவ என்று திட்டுகிறார். அதோடு பாக்கியா அமிர்தாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அப்போது அங்கிருந்து அழுது கொண்டு அமிர்தா சென்று ரூமில் அழுது கொண்டிருக்கிறார். பிறகு பாக்யா வந்து ஆறுதல் சொல்ல பாக்யாவிடம் அமிர்தா வருத்தப்பட்டு அழுகிறார்.
நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன். நான் இந்த வீட்டில் இருக்கிறது தான் எழிலுக்கு பிரச்சனையா இருக்கு என்னால அவர் கஷ்டப்பட வேண்டாம் என்று அமிர்தா சொல்ல, அதற்கு பாக்கியா அமிர்தாவுக்கு ஆறுதலாக பேசுகிறார். உனக்காக நாங்க ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறோம் நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்கிறார். அடுத்த கட்டத்தில் கோவிலில் அமிர்தா ஈஸ்வரி சொல்லியதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் எழில் அங்கு வருகிறார் எழிலிடம் நான் என்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன் என்று சொல்ல, அப்படி எல்லாம் இதுவரைக்கும் சொல்ல மாட்டியே என்ன பிரச்சனை பாட்டி ஏதாவது சொன்னாங்களா? என்று கேட்க, அமிர்தா தன்னைக்கும் மீறி அழுது அப்பா ஈஸ்வரி சொன்னதைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார். இதனால் கோபமான எழில் அமிர்தாவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார்.
மறுபக்கத்தில் பாக்யாவும் செல்வியும் ஈஸ்வரி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு பேசுகின்றனர். நான் அத்தையிடம் இது பற்றி பேச வேண்டும், ஏற்கனவே அமிர்தா மற்றும் ஜெனி இருவருக்கும் சின்ன பிரச்சனை இருந்தது இப்போதுதான் சரியா இருக்கிறது இதில் ஜெனி இரண்டாவது கர்ப்பமாக இருப்பதை வைத்து அமிர்தாவை திட்டுவது எந்த வகையில் நியாயம்? நான் அத்தை இடம் இது பற்றி பேசணும் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கும்போது எழில் வீட்டிற்குள் கோபமாக வந்து பாட்டியை கூப்பிடுகிறார்.

அமிர்தா எவ்வளவோ தடுத்து பார்க்கிறார் ஆனாலும் வீட்டிற்குள் வந்ததும் எழில் பாட்டி பாட்டி என்று கூப்பிட்டு, அமிர்தா கிட்ட நீங்க என்ன சொன்னீங்க என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி அதுக்குள்ள எல்லாத்தையும் பற்ற வைத்துவிட்டாளா? என்று அமிர்தாவை எழில் முன்பும் திட்டுகின்றனர். அதோடு தன்னிடம் எல்லாரும் பேரனுக்கு இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்பதால் தான் நானும் அப்படி கேட்டேன் என்று சொல்கிறார்.
அதற்கு எழில், அவங்க அப்படி உங்களிடம் கேட்டா அவங்களிடம் உங்க வீட்டு விஷயத்தை மட்டும் நீங்கள் முதலில் பாருங்கள் என்று பதில் சொல்லுங்க, என்று சொல்ல ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் நடக்க ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டுகிறார். அப்போது பாக்கியா நான் பாட்டியிடம் பேசுகிறேன் நீ மேலே போ என்று எழிலிடம் சொல்ல ஈஸ்வரி பாக்யாவிடம் கோபத்தை காட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications