அமிர்தா கேட்ட கேள்வி.. கதறி அழுத பாக்யா.. கோபியிடம் எழில் சொன்ன வார்த்தை.. கோபப்பட்ட ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் எழில் ஹோட்டலில் இருப்பதை தெரிந்து கொண்ட கோபி அங்கு சென்று எழிலிடம் பாக்யா பற்றி தவறாக பேச அதனால் எழில் கோபப்படுகிறார். ஆனால் அமிர்தா பாக்யாவிடம் சில கேள்விகளை கேட்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி எழில் ரூமிற்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது எழிலை மீண்டும் வீட்டிற்கு போகுமாறு சொல்கிறார். ஆனால் எழில் எனக்கு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்க என்று சொல்லிவிடுகிறார். ஆனால் கோபி பாக்கியாவை வழக்கம் போல திட்ட அதற்கு எழில் அம்மா எது பண்ணினாலும் சரியாதான் இருக்கும் என்று பதிலடி கொடுக்கிறார்.

பிறகு தான் கிளம்பும்போது செலவுக்கு பணம் கொடுக்க அதை எழில் வாங்க மறுக்கிறார். இனி புது வீடு வாடகைக்கு பார்க்க வேண்டும் அதற்காக இந்த பணத்தை வைத்துக்கொள் என்று எவ்வளவோ வற்புறுத்தி கோபி சொன்னாலும் எழில் வாங்கவில்லை. மறுபக்கத்தில் பாக்யா வீட்டில் எல்லாரும் சோகமாக இருக்க செழியன் மற்றும் இனியாவிற்கு பாக்கியா ஆறுதல் செல்கிறார்.

பிறகு தாத்தாவின் பிறந்த நாள் இரண்டு நாளில் வரப்போகிறது என்றும் எண்பதாவது பிறந்தநாளை பெருசா கொண்டாடனும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் இந்த ஃபங்சனுக்கு வருவானா என்று கேட்க அதற்கு பாக்கியா கண்டிப்பா அவன் வருவான். எழிலுக்கு தாத்தா மேல அதிகமான பாசமும் மரியாதையும் இருக்கு என்று சொல்கிறார். பிறகு எழில் ரூமிற்கு சென்ற பாக்கியா அங்கு எழில், நிலா, அமிர்தா என எல்லாரையும் நினைத்து அழுது கொண்டிருக்கிறார்.

எழில் எழுதிய கதை பேப்பர்களை கட்டிப்பிடித்துக் கொண்டும் நிலாவின் பொம்மைகளை வைத்துக்கொண்டு பாக்கியா அழுது கொண்டிருக்கிறார். பிறகு அமிர்தவரிடம் போன் பேசலாம் என்று தயங்கி போன் பண்ணுகிறார். அப்போது அமிர்தா நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா எங்களை எதற்காக வீட்டை விட்டு போக சொன்னீங்க? என்று கேட்க, அதற்கு பாக்கியா நீங்க சந்தோஷமா இருக்கணும், யாரும் உங்களை தரகுறைவா நினைக்க கூடாது என்று தான் நான் இந்த முடிவு எடுத்தேன்.
கண்டிப்பா இது எல்லாம் ஒரு நாள் மாறும் நீங்க மீண்டும் சந்தோஷமாகவும், மரியாதையாகவும் இந்த வீட்டில் வாழுவீங்க என்று பாக்யா ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் கோபி சோகமாக வீட்டிற்கு வருகிறார். அப்போது ராதிகாவும் மயூவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மயூவிற்கு ராதிகா பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி வீட்டிற்கு வருகிறார். கோபி வந்ததும் ராதிகா எழுந்து போய் விடுகிறார்.

பிறகு மயூவிடன் கோபி பேசிக் கொண்டிருக்க ராதிகா லேப்டாப்பை தூக்கிக்கொண்டு வந்து வேலை பார்ப்பது போல இருக்க கோபி ராதிகாவிடம் நான் உன்னிடம் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல, அதற்கு ராதிகா அந்த வீட்டு விஷயத்தை பற்றி பேசுறதா இருந்தா என்கிட்ட பேசாதீங்க என்று சொல்கிறார். ஆனாலும் கோபி எழில் வீட்டை விட்டு போயிட்டான் என்று சொல்ல, ராதிகா கோபமாக எழுந்து போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications