பாக்கியலட்சுமி: இனியா கேட்ட கேள்வி! பாக்யா கொடுத்த அதிர்ச்சி! சந்தோஷத்தில் ஜெனி.. செழியன் மாறிட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராமமூர்த்தியின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இனியா கேட்ட கேள்விக்கு பாக்யா அதிர்ச்சியான பதில் கொடுத்து இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஈஸ்வரி எழிலுக்கு போன் போட்டு தாத்தாவின் பிறந்தநாளுக்கு கூப்பிட, எழில் நாங்க அங்க வந்தா உங்களுக்கு பிடிக்குமா? என்று கேட்டதும் கோபமான ஈஸ்வரி நீ வராத என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். பிறகு ஈஸ்வரி எழில் பேசியதை நினைத்து அழுது கொண்டு இருக்க, அங்கு வந்த ராமமூர்த்தி எதுக்கு இப்போ அழுது கொண்டிருக்கிறா? நீ யாரு கிட்ட பேசுன என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி எழில் இடம் தான் பேசினேன். அவன் வருவேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல. நான் வந்தா உங்களுக்கு கஷ்டமா இருக்குமானு கேக்குறான். அதனால அவனை வர வேண்டான்னு சொல்லிட்டேன் என்று அழுது கொண்டிருக்க ராமமூர்த்தி ஈஸ்வரியை சமாதானம் செய்கிறார். மறுபக்கத்தில் அமிர்தா எழிலை பங்க்ஷன்க்கு போக சொல்லி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் இந்த நிலைமையில் போனா அங்க ஏதாவது பிரச்சனை வரும் என்று எழில் சொல்ல அதற்கு அமிர்தா நான் வந்தால் தான் பிரச்சனை வரும்.

நான் வரல நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்று சொல்ல, அதற்கு எழில் மறுத்து விடுகிறார். பிறகு செழியன் ஃபங்ஷன் வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார். மண்டபத்துக்குகாரங்க முதல் போட்டோகிராபர் வரை ஒவ்வொருவருக்காக போன் பேசிக்கொண்டிருக்க அதை பார்த்து ஜெனி நான் ஆசைப்பட்டது இப்போதுதான் நடந்திருக்கு, நீ இப்படி மாறனும்னு தான் நான் ஆசைப்பட்டேன் அது நடந்துடுச்சு என்று சொல்கிறார்.

அதற்கு செழியன், எழில் இருந்த வரைக்கும் என்னை ஒரு வேலை பார்க்க விடமாட்டான். அவனே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான். அவன் இல்லாமல் முதல் முறையாக இந்த வீட்டில் ஒரு பங்க்ஷன் நடக்கிறது என்று வருத்தமாக பேசுகிறார். மறுபக்கத்தில் இனியா பாக்யாவிடம் எழில் அண்ணா நாளைக்கு வருமா? எனக்கு அமிர்தா அக்கா, நிலா பாப்பா எல்லாரையும் பாக்கணும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல அதற்கு பாக்கியா அவனுக்கு நாளைக்கு தாத்தாவோட பிறந்தநாள் என்று தெரியும் என்று சொல்கிறார்.
அதற்கு இனியா நீ கூப்டியா என்று கேட்க, நான் கூப்பிடல.. வீட்ல யாராவது சொல்லி இருப்பாங்க என்று சொல்கிறார். நானும் செழியன் அண்ணாவும் உன்னை எத்தனையோ முறை அழ வைத்திருக்கோம். ஆனா நீ எங்களை வெளியே அனுப்பியது இல்ல. பாசமா இருந்த எழில் அண்ணாவை மட்டும் ஏன் அனுப்புன என்று கேட்க, அதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு என்று பாக்கியா சொல்கிறார். பிறகு நான் இதுக்கு மேல ஏதாவது தப்பு பண்ணுனா என்னையும் வெளியே அனுப்பிடுவியா? என்று இனியா கேட்க அனுப்புறதுக்கான காரணமாக இருந்தால் கண்டிப்பா அனுப்பிடுவேன் என்று பாக்யா ஷாக் கொடுக்கிறார்.

பிறகு ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் தங்களுடைய ரூமில் படுத்து இருக்கின்றனர். ராமமூர்த்தி தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்கொண்டே இருக்க, ஈஸ்வரி 12 மணிக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கிறார். பிறகு 12 மணிக்கு ராமமூர்த்தியை எழுப்பி அவருக்கு வாழ்த்து சொல்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications