சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் கோபி.. பாக்யா சொன்ன வார்த்தைக்கு ராதிகா வைத்த செக்.. மாறிய கதைக்களம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் பாக்யா ஜெயிக்கவே மாட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்த கோபிக்கு பொருள் காட்சி கேட்டரிங் மூலமாக பாக்கியா பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டுக்குள்ளேயே ருசியான சாப்பாடு கிடைக்காமல் கோபி அல்லல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் காண்டாக்ட் மாற்றி கேட்டு வந்தவரிடம் கொடுத்து விடும்படி ஈஸ்வரி சொல்ல, அதற்கு பாக்யா வெளியில் வந்து நான் காண்ட்ராக்ட் தரமாட்டேன். நான் தான் நடத்துவேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இதனால் அதிர்ச்சியான ஈஸ்வரி உனக்கு புத்தி இல்ல, சொல்றதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குற என்று திட்டுகிறார்.
அதை அடுத்து ராமமூர்த்தி, எழில், அமிர்தா என எல்லோரும் பொருள்காட்சி இருக்கும் இடத்திற்கு கேண்டினை பார்க்க ஆர்வத்தோடு வருகின்றனர். அங்கு பிரம்மாண்டமாக பாக்கியா கடையை வைத்திருக்க அதை பார்த்து ராமமூர்த்தி பாக்யாவின் வளர்ச்சியை கண்டு ஆச்சரியப்பட்டு போகிறார். இதை எடுத்து ஈஸ்வரி புட்ஸ் என்ற போர்டை எழில் அங்கு மாட்டுகிறார்.
அதை தொடர்ந்து வீட்டுக்கு வரும் பாக்கியா தன்னுடைய டீம் உடன் சேர்ந்து ஸ்நாக்ஸ் சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது எல்லோரும் செல்வியை கலாய்த்து கொண்டு ஜாலியாக இருக்கின்றனர். அதை எடுத்து இயற்கை உணவுகள் செய்யலாம் என பாக்கியா ஐடியா கொடுக்க, அதற்கு அமிர்தாவும் உதவி செய்கிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் வீட்டிற்கு வருகின்றனர். இரவு சாப்பாட்டுக்கு எல்லோருக்கும் உட்கார்ந்து சாப்பிட பாக்கியா சிக்கன், சப்பாத்தி செய்து வைத்திருக்கிறார்.
அதை பார்த்த கோபிக்கு எச்சில் ஊறுகிறது. ராதிகாவிடம் சமைச்சிட்டியா? எதுவும் ஆர்டர் செய்யட்டுமா என்று கேட்க அதற்கு எவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் சமைக்காமல் இருப்பனா? உங்க ஃபேவரைட் உணவு தான் செஞ்சு வச்சிருக்கிறேன் என்று ராதிகா சொல்ல அதற்கு கோபி ஆச்சரியப்படுகிறார். ஆனால் அங்கு ராதிகா ஓட்ஸ் செய்து வைத்து இருக்கிறேன் என்று சொல்ல கோபிக்கு சப் என்று ஆகிவிடுகிறது.
இதைத்தொடர்ந்து கோபியிடம் சாப்பிடலையா என்று இனியா கேட்க அதற்கு கோபி ஒட்ஸ் செஞ்சி இருக்கா சாப்பிடணும் என்று சொல்ல, அதை கேட்டு இனியா ஐயோ என்று கத்த ஏன் என்னாச்சு என்று எல்லோரும் கேட்க, அதற்கு இனியா நல்லாவே இருக்காது நான் அங்க வீட்டில் இருக்கும்போது அதை சாப்பிட்டு இருக்கேன் என்று சொல்ல எல்லோரும் பரிதாபமாக கோபியை பார்க்கின்றனர். அப்போது ஈஸ்வரி சிக்கனை ஒதுக்கி கோபிக்கு கொடுக்க பார்க்க அதற்கு ராமமூர்த்தி தடுத்து வருகிறார்.
பிறகு பாக்கியா எல்லோரையும் காண்டினுக்கு நாளைக்கு வரவேண்டும் என்று அழைக்கிறார். அதோடு ஜெனி இடமும் சொல்லிவிட்டதாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா எல்லோரும்னா நானுமா என்று கேட்க அதற்கு பாக்கியா எல்லோரும் என்றால் எல்லோரும் தான். நீங்களும் தான்.. என்று சொல்ல இதைப் பார்த்து ஈஸ்வரி, கோபி அதிர்ச்சி அடைகின்றனர்.
அதைத் தொடர்ந்து கோபி ராதிகாவிடம் ஏன் பாக்கியா கிட்ட பேசுற என்று கேட்க அதற்கு ராதிகா நான் இந்த வீட்டில் இருந்தா பேச தான் செய்வேன். நான் பேசக்கூடாது என்றால் வாங்க நம்ம வீட்டுக்கு போவோம் என்று சொல்ல இதற்கு கோபி பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications