ராதிகாவை தேடி அலையும் கோபி.. ஆனால் அவங்க எப்படி இருக்காங்க பாருங்க! வாவ் சொல்லும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா பசுப்லேட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் இது நம்ம ராதிகாவா என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்த சீரியலில் கோபி ராதிகாவை தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் லைக்குகளை பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு பாக்கியாவின் கணவர் கோபி அவருடைய தோழியான ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ராதிகாவும் பாக்கியாவும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

ஆனால் கோபி தன்னுடைய குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள், தனக்கு மனைவி சரி இல்லை, தன்னை மதிப்பதில்லை என்று ஏமாற்றி ராதிகாவை காதலித்து வந்தார். ஆனால் ராதிகாவுக்கு பாக்கியா தான் கோபிக்கு மனைவி என்பது தெரிய வந்தபோது நான் அவரை திருமணம் செய்யவில்லை என்று மறுத்திருந்தார்.

ஆனாலும் ராதிகாவின் குடும்பத்தினர் தான் கட்டாயப்படுத்தி கோபியை திருமணம் செய்ய சொல்லி இருந்தனர். அதற்கு பிறகு கோபிக்காக ராதிகா பாக்யாவை எதிர்த்திருந்தார். அதுபோல பாக்கியா வளரக்கூடாது என்று பல நேரங்களில் முயற்சி செய்திருந்தார். இப்படியான நிலையில் இப்போது கோபியும் பாக்யாவை புரிந்து இருக்கிறார், ராதிகாவும் பாக்கியாவை புரிந்து விட்டார்.

அதனால் இனி எனக்கு கோபி வேண்டாம் என்று ராதிகா கோபியை பாக்யா வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விட்டார். ஆனால் ராதிகா போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபி தவிக்கிறார். ராதிகா இருந்த வீட்டை காலி செய்துவிட்டு கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் ராதிகா எங்கே போனார் என்று பாக்கியாவும், கோபியும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் ராதிகா ஒரு குடிசை வீட்டு முன்பு அமர்ந்திருக்கிறார். அதுவும் அந்த வீட்டு முன்பு விதவிதமான புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அதை பார்த்ததும் "கோபி அங்க உங்களை காணாமல் ஒவ்வொரு வீடா கதவை தட்டிக்கிட்டு அலையுறாரு.. நீங்க இங்க வந்து ஹாயா படுத்திருக்கீங்களா?" என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து இப்போது மார்டன் உடையில் சில புகைப்படங்களை ரேஷ்மா பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்ததும் கோபியை வேண்டாம் என்று டைவர்ஸ் செய்ததும் ராதிகா ஆளே டோட்டலாக மாறிவிட்டாரே? இது கூட நல்லாத்தான் இருக்கு.. என்று ரசிகர்கள் வாவ் சொல்லி கொண்டாடி வருகிறார்கள்.

ரேஷ்மா பசுப்லேட்டி விஜய் டிவியில் மட்டுமல்லாமல் ஜீ தமிழிலும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய கேரக்டர் இப்போது பலராலும் பாராட்டப்படுகிறது.

இந்த சீரியலில் பாக்கியாவை விடவும் ராதிகாவுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக தொடங்கிவிட்டனர். அதுபோல பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோவுக்கு கீழே பேசாமல் பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகா தான் இனி ஹீரோயினி என்று மாற்றி விடுங்கள். அப்போதுதான் இந்த கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications