கணேசால் கதறும் அம்மா.. தேவையில்லாத பிரச்சனையில் சிக்கும் பாக்கியா.. அமிர்தா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அமிர்தா மற்றும் நிலாவை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணேஷ் சில அதிரடியான செயல்களை செய்ய அதனால் பாக்கியா பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்.
அதே நேரத்தில் கணேஷ் விஷயத்தில் அவர் போட்ட நாடகத்தை அமிர்தாவிடம் சொல்லக்கூடாது என்று ஈஸ்வரி கட்டளையிடுகிறார் .ஆனால் அதை வழக்கம் போல பாக்கியா கேட்காமல் புது பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கணேசன் அம்மாவிடமிருந்து பாக்யாவுக்கு போன் வர அதை பார்த்து பாக்கியா குழம்பி போய் இருக்கிறார். பிறகு வேறு வழியில்லாமல் போனை எடுக்கிறார். அப்போது கணேசனுடைய அப்பாவுக்கு உடம்பு முடியல இன்னைக்கோ நாளைக்கோனே இருக்காரு. அதனால அமிர்தாவையும் நிலாவையும் பார்க்கணும்னு ஆசைப்படுறாரு.
ஒரே ஒருமுறை அவளை கூட்டிட்டு வாங்க என்று கதறி அழ அதற்கு பாக்கியா ஏன் என்ன ஆச்சு நல்லாத்தானே இருந்தார் என்று கேட்க அதற்கு கணேஷ் என் அம்மா எல்லாம் கவலைதான் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் அமிர்தாவையும் நிலாவையும் கூட்டிட்டு வாங்க என்று அவர் சொல்ல அதற்கு பாக்கியா இப்ப இருக்குற சூழ்நிலையில் அதெல்லாம் முடியுமான்னு தெரியல.
ஆனா வீட்டுல பேசி பார்க்கிறேன். ஆனால் முடியும் என்று என்னால எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது என்று போனை வைத்துவிடுகிறார். பிறகு வீட்டில் இருப்பவர்களை அழைத்து இந்த விஷயத்தை பற்றி சொல்ல எல்லோரும் இது ஏதோ பிளான் மாதிரி இருக்கு. அதனால அமிர்தா அங்கு போகக்கூடாது என்று சொல்லிவிடுகின்றனர். அதோடு ஈஸ்வரி இந்த விஷயத்தை அமிர்தா மற்றும் எழிலிடம் சொல்ல வேண்டாம் என்று கண்டிஷன் போடுகிறார்.
ஆனால் மனசு கேட்காத பாக்யா கதவை தட்டி கணேஷின் அம்மா போன் பண்ண விஷயத்தையும், வீட்ல எல்லாரும் அங்க போக கூடாதுன்னு சொன்ன விஷயத்தை போட்டுக் கொடுக்க அதற்கு அமிர்தா ஏன் இப்படி எல்லாம் தப்பா நடக்குது என்று அழுது கொண்டிருக்கிறார். அதற்கு எழில் உனக்கு அங்க போகணும்னு ஆசையா இருக்கா என்று கேட்க அதற்கு அமிர்தா அதெல்லாம் இப்போ சரியா இருக்காது வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் கணேஷின் அம்மாவிடமிருந்து பாக்யாவுக்கு போன் வருகிறது. அப்போது அவர் டாக்டர் என்னுடைய கணவர் பிழைக்க மாட்டார் என்று சொல்லிட்டாங்க. அதனால ஒருமுறை அமிர்தாவையும் நிலாவையும் கூட்டிட்டு வந்து பத்து நிமிஷம் இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க கணேஷால் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்ல அதற்கு பாக்கியா என்ன சொல்வது என்று தெரியாமல் போனை வைத்து விடுகிறார்.
அதைத் தொடர்ந்து கணேஷுடைய அம்மா போனை வைத்ததுமே கணேஷை பிடித்து பாவி அவருக்கு உடம்பு சரியில்லை என்று இப்படி பொய் சொல்ல வைத்துவிட்டாயே என்று அழுது கொண்டிருக்க அதற்கு கணேஷ் அமிர்தாவையும் நிலாவையும் இங்கு வர வைக்க எனக்கு வேற வழி தெரியல என்று வில்லத்தனத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் பாக்கியா மீண்டும் தனக்கு போன் வந்த விஷயத்தை அமிர்தாவிடம் சொல்ல அமிர்தா அதைக் கேட்டு அழுது கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா நான் வீட்ல பேசுறேன் என்று சொல்ல அதற்கு அமிர்தா வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications