பாக்கியலட்சுமி: இனியா சொன்ன ரகசியம்.. செல்வி எடுத்த விபரீத முடிவு! எழில் சொன்ன வார்த்தை.. கோபத்தில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 10ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் காதலை தெரிந்து கொண்டதும் பாக்கியா இனியாவிடம் சில கேள்விகளை கேட்கிறார். அதே நேரத்தில் செல்வி பாக்யா தன்னிடம் பேசாததால் ஆகாஷை போட்டு அடிக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செல்வி ஆகாஷை போட்டு அடித்து இனியாவை பார்க்க தான் ரெஸ்டாரண்டுக்கு வந்தியா? எப்போ பார்த்தாலும் நீ போனில் இனியா கிட்ட தான் பேசிட்டு இருக்கியா? நான் எங்கேயும் இப்படி அசிங்கப்பட்டது இல்ல நான் இனி பாக்கியா அக்கா முகத்தில் எப்படிடா முழிப்பேன்? உன் மேல நம்பிக்கை வச்சது தப்பா?

கதறி அழுத செல்வி
இந்த குடும்பத்தை முன்னேற்றி கொண்டுட்டு வந்துரனும்னு நம்பினேன் என்று அழுது கொண்டிருக்கிறார். எனக்கு புருஷனும் சரியில்லை என்று பார்த்தால் பெத்ததும் சரியில்லாமல் இருக்கு, பேசாம நான் செத்து போயிடவா? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றேன்னு சொல்றாங்க என்று தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார்.
அவங்க தகுதி தகுதின்னு சொல்றாங்க அப்போ இதுதான் நம்மளோட தகுதியா? இந்த தகுதியை விட்டு மேல போகணும்னு நீ நினைக்கவே இல்லையா. என்று அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்யா வீட்டில் எல்லோரும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் போது ராமமூர்த்தியின் போட்டோவை பார்த்து ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார்.
ஈஸ்வரி அழுகை
இந்த கொடுமை எல்லாம் பார்ப்பதற்காக தான் என்னை தனியா விட்டுட்டு போனீங்களா? என்னையும் சேர்த்து கூட்டிட்டு போயிடுங்க என்று அழுது கொண்டிருக்கும் போது கோபியும் செழியனும் இப்படி எல்லாம் பேசாதீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் எழில் இனியாவை உள்ளே போக சொல்ல இனியா முதலில் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்.

பிறகு போனை எடுத்துக் கொண்டு போகப் போகும்போது கோபி இனி நீ போனை தொடக்கூடாது, உன்னை நாங்க தான் காலேஜில் கொண்டு விடுவோம் என்று மிரட்டுகிறார். அப்போது இனியா அழுது கொண்டே இருக்க, ஈஸ்வரி இனி அழுது நடிக்க வேண்டாம் என்று திட்டுகிறார். அதற்கு எழில் இனியாவுக்கு சப்போர்ட் செய்து பேச செழியனும் கோபியும் எழில் மீது கோபப்படுகிறார்கள்.
செழியன் கோபம்
பிறகு செழியன் இனியாவிடம் அப்பா சொன்னது போல நடந்துக்க இல்லன்னா நடக்குறதே வேற என்று மிரட்டி விட்டு போகிறார். அப்போது பாக்கியா வாசலில் எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டிருக்க, இனியா வந்து நீ ஏதாவது பேசுமா, திட்ட வாச்சும் செய்யுமா, நான் பண்ணுனது தப்புதான்.

என்னால ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. ஆகாஷ் எனக்கு புடிச்சிருக்குமா நாங்க பிரண்டா தான் பேசுனோம் ஆனா அவன் எனக்கு ரொம்ப கம்பர்டபுள் கொடுத்தான். நான் தான் அவனை புடிச்சிருக்குன்னு முதலில் சொன்னேன். ஆனா ஆகாஷ் உங்க அம்மா என்னை படிக்க வைக்கிறாங்க அவங்களுக்கு என்னால துரோகம் பண்ண முடியாதுன்னு சொன்னான். அவனை நான் தான் கன்வின்ஸ் பண்ணுனேன் என்று சொல்லி அழுகிறார்.

பாக்கியாவின் கேள்வி
அப்போது கோபமான பாக்கியம் இனியாவே அடித்துவிட்டு உன்னால எப்போதும் நான் அசிங்கப்பட்டுட்டே இருக்கணுமா? மாசத்துக்கு ரெண்டு முறை உன்னால பிரச்சனை வந்துடுது. உன்னை நான் எங்கெல்லாம் நம்பி விடுறேனோ அங்க எல்லாம் என் மூக்கு உடைந்துக்கொண்டே இருக்கிறது. உன்னால எனக்கு எப்போதும் பிரச்சனை மட்டும்தான் இருக்கு. இந்த வயசுல உனக்கு கல்யாணம் வேணுமா? என்று திட்டி அனுப்புகிறார்.
வெள்ளி திரையில் அறிமுகமான சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணி.. அதுவும் இந்த டாப் நடிகர்களின் படத்தில் தான்
பிறகு எழில் பாக்கியாவை சமாதானப்படுத்துகிறார். அதைத் தொடர்ந்து செல்வி போன் செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் பாக்கியா எடுக்காமல் இருக்கிறார். பாக்யா ஃபோனை எடுக்காததால் செல்வி அழுது கொண்டே போன் செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications