வெள்ளி திரையில் அறிமுகமான சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணி.. அதுவும் இந்த டாப் நடிகர்களின் படத்தில் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சல்மா அருண் சினிமாவில் நடித்த திரைப்பட போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் எந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

ஆரம்பத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகள் தான் அங்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகு சின்னத்திரை பக்கம் திரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்போது பல நடிகைகள், நடிகர்கள் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். சின்னத்திரையில் தினமும் அவர்களை ரசிகர்கள் பார்த்து ரசிப்பதால் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைத்து விடுகிறது.

Siragadikka aasai serial vijay tv

பிரபலம் கொடுத்த சீரியல்

அதன் மூலமாக அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்கிறது. இதற்காகவே பல நடிகைகள் சின்னத்திரையில் அடி எடுத்து வைக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது நடிகை சல்மா அருண் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார். சல்மா அருண் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.

Siragadikka aasai serial vijay tv

திட்டும் ரசிகர்கள்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவி ரசிகர்கள் பலரும் ரோகிணி எப்போது குடும்பத்திடம் மாட்டுவார் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அதோடு ரோகிணியை திட்டாதவர்களும் இல்லை‌.

நிறம் மாறும் உலகில் திரைப்படம்

ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக இப்போது இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது நடிகர் ரியோ, நட்டி நடராஜன் மற்றும் இயக்குனர் பாரதிராஜா வடிவுக்கரசி போன்ற பல பிரபலங்கள் நடித்த நிறம் மாறும் உலகில் திரைப்படத்தில் தான் சல்மா அருணும் நடித்திருக்கிறார். அப்போது பாரதிராஜா மற்றும் வடிவுக்கரசியோடு எடுத்த புகைப்படங்களை சல்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அம்மாவின் அருமை

அம்மா பாசத்தை மையப்படுத்தி நிறம் மாறும் உலகில் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தியேட்டரில் இன்று (மார்ச் 7) வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் பாசிட்டிவான கமெண்ட்களை பெற்று வருகிறது. பலருக்கு அம்மாவின் பாசம் அவர் இருக்கும் போது தெரிவதில்லை. அவர்களுடைய மறைவுக்கு பிறகு தான் அவர்களைப் பற்றி பலர் புரிந்து கொள்கிறார்கள்.

குவியும் பாராட்டு

அதுபோல அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் பல சின்னத்திரை பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். இதுகுறித்து பகிர்ந்த சல்மாவிற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+