பாக்கியலட்சுமி: கவுன்சிலர் சொன்ன வார்த்தை.. பாக்யாவை எதிர்த்த ஜெனி.. இனி தான் தரமான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 26 ஆம் தேதிக்கான எபிசோடில் செழியனை ஜெயில் இருந்து வெளியே கொண்டு வர வைக்க வேண்டும் என்பதற்காக பாக்கியா முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் இதுவரைக்கும் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக இருந்த ஜெனி இப்போது பாக்கியாவை எதிர்த்து நிற்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா கவுன்சிலரை சந்தித்து செழியன் மீது கொடுத்து கேஸை வாபஸ் வாங்குமாறு கேட்டு அதற்கு அவர் முடியாது உன் பையன் ஜெயிலுக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது என்று பாக்கியாவை அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் ஒருவரும் வந்து அந்த கவுன்சிலரிடம் சண்டை போட்டு விட்டுப் போக இந்த ஆள் ஊரில் எல்லாரிடமும் வம்பு இழுத்து வச்சிருப்பான் போல என்று செல்வி சொல்கிறார்.

ஜெனியின் மாற்றம்
பிறகு பாக்கியாவும் செல்வியும் ஜெனி வீட்டிற்கு போகின்றனர். அப்போது ஜெனி சோகமாக இருக்க அதற்கு அவருடைய அப்பா நீ இப்படியே சோகமா இருந்தா எப்படி நான் எப்படியாவது செழியனை வெளியே கொண்டு வர முயற்சி செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த பாக்கியா ஜெனியிடம் ஆறுதலாக பேசுகிறார். ஆனால் ஜெனி நீங்க பேசாதீங்க, ஆன்ட்டி நீங்க இப்ப எல்லாம் வரவர யார் பேச்சையும் கேட்க மாட்டீங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதை நீங்களே செல்பிஷா முடிவெடுக்கிறீங்க என்று கோபப்படுகிறார்.
கோபத்தில் திட்டிய ஜெனி
பாக்கியா ஜெனியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் ஜெனி கோபமாக பேசிக்கொண்டே இருக்கிறார். முன்னாடி எல்லாம் இப்படி இல்ல, நீங்க இப்போ ரொம்ப மாறிட்டீங்க. உங்களுக்காக நான் நிறைய சப்போர்ட் பண்ணி இருக்கேன். ஆனால் இப்போ என்னுடைய வாழ்க்கை இந்த நிலைமைக்கு வந்து நிற்க காரணம் நீங்கதான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜெனியின் அப்பாவும் நீங்க இப்படி ஒரு பிசினஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஜெனியின் அப்பா அட்வைஸ்
இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து பெருசா பண்ணியிருக்கலாம் ஏற்கனவே கவுன்சிலரால் பிரச்சனை என்றால் அதை வீட்டில் சொல்லி இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா என் பையன் என்ன புரிஞ்சிக்காத போது நீ என்கூட இருந்திருக்க, ஆனால் இன்றைக்கு என்னால் உனக்கு ஒரு பிரச்சனை வந்திருக்கு என்னை மன்னிச்சிடு ஜெனி இன்னைக்கு நைட்டுக்குள்ள செழியன் வீட்டுக்கு வந்துருவான் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பாக்கியாவின் புது பிளான்
மறுபக்கம் பாக்கியா செல்வி இருவரும் பைக்கில் வரும்போது போஸ்டரில் கவுன்சிலர் போட்டோ மினிஸ்டர் உடன் இருப்பதை பார்த்து நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கவுன்சிலர் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்த நபர் இந்த போஸ்டரை பார்த்து கோபமாக பேசிவிட்டு காரில் சென்று விடுகிறார். உடனே பாக்யாவிற்கு ஒரு யோசனை வந்ததும் பைக்கை எடுத்துக்கொண்டு அந்த நபரை பின்தொடர்கிறார். அந்த நபர் மினிஸ்டர் வீட்டிற்கு போகிறார்.
வாக்குவாதம்
அதனால் பாக்கியாவும் அவரை பார்த்து பேச வேண்டும் என்று வீட்டிற்குள் போக முயற்சி செய்கிறார். ஆனால் அங்கு இருந்த நபர் பாக்யாவை உள்ள விடாமல் தடுக்கிறார்கள். அதனால் பாக்கியா வெளியில் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கவுன்சிலர் அந்த வீட்டிற்கு வருகிறார் கவுன்சிலர் பாக்கியாவை பார்த்ததும் என்ன இங்க வந்து இருக்கீங்க என்று மிரட்டுகிறார்.
பாக்கியா கேட்ட கேள்வி
அதற்கு பாக்கியா என் பையன் மீது தப்பு கிடையாது நீங்கதான் உங்க பதவியை தப்பா யூஸ் பண்ணிட்டு இருக்கிறீங்க என்று சண்டை போடுகிறார். இதையெல்லாம் ஏற்கனவே கவுன்சிலருடன் சண்டை போட்ட நபரும் வந்து பார்க்கிறார். உடனே கவுன்சிலர் போனதும் என்ன பிரச்சனை என்று அவர் விசாரிக்க, நான் உங்களை தான் பார்க்க வந்தேன். இந்த நபர் அவருடைய பதவியை தப்பா யூஸ் பண்ணிட்டு இருக்காரு என்று நடந்த பிரச்சனையை சொல்கிறார். உடனே அந்த நபர் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி பாக்யாவை அனுப்பி வைக்கிறார். அவர் போன பிறகு இனி கவுன்சிலரின் பதவியே அவனுக்கு இல்லை என்று கவுன்சிலிரிடம் சண்டை போட்ட நபர் கோபமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications