பாக்கியலட்சுமி:ரெஸ்டாரன்ட் பற்றி இனியா கேட்ட கேள்வி..செல்வி சொன்ன பதிலடி.. பாக்யாவுக்கு புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோடில் வெளிநாட்டிற்கு சென்ற இனியா பாக்யாவிற்கு ஃபோன் செய்து பேசுகிறார் அப்போது செல்வி இனியாவிடம் கேட்ட கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய முதல் ரெஸ்டாரண்டில் வேலை பார்ப்பவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா ஃபோன் செய்கின்றார். இனியாவை வீடியோ காலில் பார்த்ததும் பாக்யா சந்தோஷப்படுகிறார். பிறகு இனியாவிடம் நலம் விசாரித்து விட்டு நித்திஷ் உன்னை நல்லா பாத்துக்கிறாரா? அவருடைய குடும்பத்தினர் ஏதாவது சொன்னார்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இனியா பேசிய வார்த்தை
அப்போது இனியா இப்போ எங்க இருக்கிற, பேக்ரவுண்ட் காட்டுமா என்று கேட்க, பாக்கியா வீடியோ காலில் பேக்ரவுண்ட் காட்டுகிறார். அதனால் இனியா இது முதல் ரெஸ்டாரண்ட் தானே? இந்த நேரத்தில் இங்கே இருக்கிறே என்றால் புது ரெஸ்டாரண்டுக்கு எப்ப போவ? என்று கேட்க பாக்யா பதில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். பிறகு என் கல்யாணத்தின் போது புது ரெஸ்டாரண்டில் ஒரு பிரச்சனை வந்துச்சே அது சரியாயிடுச்சா என்று கேட்க, பாக்கியா அதே பற்றி பேசாமல் இனியா பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
செல்வி கேட்ட கேள்வி
அந்த நேரத்தில் செல்வி அங்கு வந்து இனியா பேசுவதை பார்த்ததும் இனியாவிடம் நலம் விசாரிக்கிறார். அதோடு உங்க கல்யாணத்துக்கு வர முடியாமல் போயிடுச்சு. அதுக்கு வருத்தப்பட்டேன். நீங்க நான் தூக்கி வளர்த்த குழந்தை உங்க மேல எனக்கு எப்பவும் பாசம் உண்டு, கோபம் கிடையாது என்று சொன்னதும் இனியாவால் பதில் எதுவும் சொல்ல முடியாமல் போனை வைத்து வைக்கிறேன் என்று வைத்து விடுகிறார்.

ஈஸ்வரி சொன்ன வார்த்தை
பிறகு பாக்யாவிடம் செல்வி ரெஸ்டாரண்ட் பற்றி இனியாவுக்கு எதுவும் தெரியாதா? என்று கேட்க, இனியா பேசுவதை பார்த்தால் எதுவும் தெரியாது என்று தான் நினைக்கிறேன் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரி எழில் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா வீட்டிற்கு வர ஈஸ்வரி உட்கார வைத்து வழக்கம் போல சம்மந்தி அவர் என்ன பண்ணுனாலும் நீ அமைதியா இருக்கணும் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
எழில் சொன்ன செய்தி
இதனால் பாக்கியா கோபமாகி போகிறார். பிறகு பின்னாடியே எழில் வந்ததும் நீயும் ஏதாவது சொல்லப் போறியா என்று பாக்கியா கோபப்பட, அதற்கு எழில் எனக்கு புது பட வாய்ப்பு வந்திருக்கிறது தாய்லாந்துக்கும் மூன்று மாதம் சூட்டிங் போகணும் என்று சொல்ல பாக்கியா சந்தோஷமா போயிட்டு வா என்று சொல்கிறார். மறுநாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது ரெஸ்டாரண்ட் ஓனர் அங்கு வருகிறார்.

ஓனர் கொடுத்த அதிர்ச்சி
பாக்யா அவரை வரவேற்று அவரிடம் பேசும் போது அவர் தான் பிசினஸில் கஷ்டப்பட்டு விட்டதாகவும் அதனால் இந்த இடத்தை நான் விற்க போகிறேன் இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் இங்கு இருந்து காலி பண்ணிடுங்க என்று சொல்கிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார். ஒரு வாரத்திற்குள் முடியாது சார் என்று பாக்யா எவ்வளவோ கெஞ்சியும் முடியாது என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விடுகிறார்.
செழியன் கேட்ட கேள்வி
பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்து இதையே நினைத்துக் கொண்டிருக்கும் போது எழில் ஓனரிடம் நீ ஏதாவது பேசுனியா என்று கேட்க, நான் பேசி பார்த்தேன் ஆனால் அவர் முடியாதுன்னு சொல்றாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, செழியன் வந்து அக்ரிமெண்ட் முடிய போகுதுனா, அதை ரெனிவல் பண்ணி இருக்கலாமே ஏன் இப்படி இருந்த என்று கேட்க, அந்த நேரத்தில் தான் வீட்டில் பிரச்சனை நடந்தது அதனால் நான் இதை மறந்துவிட்டேன் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications