பாக்கியலட்சுமி: ஈஸ்வரி கேட்ட கேள்வி.. பாக்யா எடுத்த புது முடிவு, துணை நிற்கும் கோபி.. ஆரம்பமே அமர்க்களம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவிடம் ஈஸ்வரி இனி பிசினஸ் செய்ய வேண்டாம் என்று அட்வைஸ் செய்ய, அதற்கு பாக்கியா, சரி என்று சொல்லி இருக்கிறார். ஆனால் வேறு விதமான முடிவெடுத்திருக்கிறார். அதற்கு கோபியும் சப்போர்ட் செய்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா வீட்டில் இருப்பதை பார்த்ததும் செழியன் பாக்கியாவுடன் நீ இப்படி வீட்ல இருந்து எவ்வளவு நாளாச்சுமா. இப்பதான் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு நீ ரெஸ்டாரண்டில் கஷ்டப்பட்டதெல்லாம் போதுமா. இனி நீ வீட்டில் இரு வீட்டு கஷ்டம் செலவு எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னதும் எழில் நீ மட்டும் தான் பண்ணுவியா? அப்போ நான் என்ன பண்ணுவேன் நானும் சேர்ந்து இந்த வீட்டை பார்த்துக்கிறேன் என்று சொன்னதும் ஈஸ்வரி இது மாதிரி பசங்க யாருக்கு கிடைப்பாங்க.

செழியன் சொன்ன வார்த்தை
இதுவரைக்கும் காலில் சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு இருந்த ஆனா இனிமே வீட்டை நீ பத்திரமா பாரு. வீட்டில் எல்லாருக்கும் சமைச்சு போட்டமா கோவில் குளத்துக்கு போனமான்னு இரு என்று சொன்னதும் பாக்கியா சரி என தலையாட்ட ஈஸ்வரிக்கு சந்தேகம் வருகிறது. நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதிர்த்து பேசுவியே இப்போ எப்படி நீ சரின்னு சொல்லுற? அப்போ ஏதோ விஷயம் இருக்கு என்று சந்தேகப்பட, பாக்கியா ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
தெருக்காரர்களின் தொல்லை
மறுநாள் பாக்யா வாக்கிங் போகும்போது எல்லோருமே ரெஸ்டாரண்ட் பற்றி கேட்கிறார்கள் அதோடு ஒருவர் என்னதான் பொண்ணுங்க மேல பறந்தாலும் அவங்களால சக்சஸ் ஆக முடியாது.
ஊர் குருவி பருந்தாகாது என்றெல்லாம் டயலாக் பேசுகிறார்கள். அப்போது பாக்கியா அவர்களிடம் ஓகே தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு திரும்புகிறார். மறுபக்கத்தில் நியூஸ் பேப்பரில் சில அட்வர்டைஸ்மெண்டை போட்டோ எடுத்து விட்டு செல்விக்கு போன் செய்து நாளைக்கு நாம ஒரு இடத்துக்கு போகணும் வரியா என்று கேட்கிறார்.
பாக்யா எடுத்த முடிவு
செல்வி எங்க போறோம் என்று முதலில் கேட்கிறார் ஆனால் பாக்கியராஜ் நீ வரியா இல்லையா என்று கேட்க, சரி என்று சொல்கிறார். அடுத்த நாள் பாக்யா வெளியே கிளம்பும்போது ஈஸ்வரி நீ நேற்றுதானே எங்கேயும் போகலன்னு சொன்னா இன்னைக்கு வெளியே எங்க போற என்று கேள்வி கேட்க, அதற்கு பாக்கியா எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வரேன் என்று சொன்னதும், கோயிலுக்கு போறியா அப்போ நானும் வரேன் என்று சொல்ல, நான் கோயிலுக்கு போகல ஆனா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்புகிறார்.
கோபப்பட்ட ஈஸ்வரி
கோபி பாக்யாவுக்கு சப்போர்ட்டாக ஈஸ்வரியிடம் பேசுகிறார். விடுங்கம்மா அவ வெளியே போயிட்டு வரட்டும் எனக்கு பிசினஸ் லாஸ் ஆன நேரத்தில் என்னால் வீட்டில் கூட இருக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். அது போல பாக்கியாவும் அதே மனநிலையில் தான் இருப்பா அதனால அவ வெளியே போயிட்டு வரட்டும் என்று சொல்ல, இவ வெளியே எங்க போறதா இருந்தாலும் அந்த செல்வியை கூட்டிட்டு தான் போவா.
கோபி சப்போர்ட்
இரண்டு பேரும் சேர்ந்து தான் எங்கேயோ போறதுக்கு பிளான் பண்ணி இருக்காங்க என்று ஈஸ்வரி வழக்கம்போல திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபி பாக்யாவிற்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பாக்கியா பேப்பரில் அட்வர்டைஸ்மென்ட் கொடுத்திருந்த கடைகளுக்கு போய் வாடகைக்கு கேட்டு பார்க்கிறார். ஒரு சிலர் அதிகமாக பணம் கேட்கிறார்கள்.
கோபத்தில் பாக்யா
ஒரு சிலர் கடையில் உங்க கணவர் என்ன வேலை பாக்குறாரு அவங்க கணவருக்காக நீங்க கடையை பார்க்க வந்தீங்களா என்று கேட்க, இல்லை எனக்கும் அவருக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு, நான் தான் இந்த பிசினஸை தொடர்ந்து நடத்த போறேன். ஏற்கனவே எனக்கு இந்த பிசினஸ் நடத்தி ஏழு வருஷம் அனுபவம் இருக்கு என்று சொன்னதும், அந்த நபர் உங்களுக்கும் உங்க கணவருக்கும் எதுக்காக டைவர்ஸ் ஆச்சு என்று கேட்க, பாக்யா கோவப்பட்டு நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications