பாக்கியலட்சுமி: கோபியிடம் கொத்தாக சிக்கிய இனியா- ஆகாஷ்.. பாக்யா கொடுத்த அதிர்ச்சி.. கோபத்தில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவும் ஆகாஷும் கோபியிடம் சிக்கி இருக்கிறார்கள். குடும்பத்தினரை இனியா ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயம் கோபிக்கு தெரிய வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஈஸ்வரியின் ரூமுக்கு போன கோபி எழில் அமிர்தாவிடம் இப்போதைக்கு குழந்தை விஷயத்தை பற்றி பேச வேண்டாம் என்று கோபி சொல்ல, அதற்கு ஈஸ்வரி அதெல்லாம் முடியாது இது நீயும் பாக்கியாவும் கேட்க வேண்டிய கேள்வி. அவ பேசவே மாட்டேங்குறா நீயும் கேட்க மாட்டே, அதனாலதான் நான் இந்த விஷயத்தை பற்றி பேசுகிறேன்.

புலம்பும் கோபி
இதைப்பற்றி அவங்க கிட்ட கேட்காம இருக்கவே மாட்டேன். அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பேன் அவங்களுடைய மனசை மாத்தி குழந்தை பெத்துக்க வைக்க போறேன் என்று சொன்னதும் கோபி என்ன சொல்ல என்பது தெரியாமல் ரூமை விட்டு வெளியே வருகிறார். பிறகு தனியாக நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார். எழில் இனி இதை பற்றி பேசக்கூடாதுன்னு சொல்லுறான் ஆனா என் அம்மா இனி இதைப்பற்றி தான் பேசிக்கொண்டே இருப்பேன் என்று சொல்லுறாங்க பாக்யா சொன்னது தான் சரியா இருக்கு என்று கோபி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
ஏமாற்றும் இனியா
மறுபக்கத்தில் இனியா ரூமில் ஆகாஷிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்யாவை பார்த்ததும் பிரண்டுடன் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீ எப்போ பார்த்தாலும் போனில் பேசிக்கிட்டே இருக்கிற என்று கேட்க, அதற்கு இனியா நான் என்னுடைய பிரண்டிடம் தான் பேசுறேன் என்று சமாளிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் நிஜ மனைவி இந்த பிரபலம் தானா? வதந்திகளுக்கு பதிலடி பதிவு
அசைன்மென்ட் எல்லாம் செஞ்சிட்டியா என்று பாக்கியா கேட்க இல்லை என்று இனியா சொல்கிறார். முதலில் வேலையை முடி அப்புறமா பேசலாம் என்று அட்வைஸ் பாக்கியா அட்வைஸ் செய்கிறார். அதற்கு இனியா நான் அசைன்மென்ட், ப்ராஜெக்ட், கல்ச்சர் ப்ரோக்ராம் எல்லாம் இருக்கிறது அதை பற்றி தான் பேசிக்கொண்டே இருக்கிறேன் என்று சமாளிக்கிறார்.

ஆனாலும் பாக்கியா நீ அடிக்கடி போனில் பேசுவதை குறைத்துக்கொள் என்று அட்வைஸ் செய்கிறார். அதற்கு இனியா கோபப்படுகிறார். மறுநாள் காலையில் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அப்போது வாக்கிங் போயிட்டு வரும்போது பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
ரசிக்கும் கோபி
அப்போது ஈஸ்வரி இன்னைக்கு சீக்கிரமா எழுந்துட்டியா கோபி என்று கேட்க, ஆமா அஞ்சு மணிக்கு முழிப்பு வந்துடுச்சு அதனால எழுந்து வாக்கிங் போயிட்டேன். நான் கீழே இறங்கி வரும்போது பாக்யா அப்பவே கிச்சனில் வேலை பார்த்துட்டு இருக்குறா என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி இப்போ வீட்டில் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் அவள் அப்பவே சமைச்சா தான் சரியா இருக்கும் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் இனியா வந்து எனக்கு சாப்பாடு ரெடி ஆயிட்டா நான் சீக்கிரமா போகணும் என்று கேட்க, அதற்கு பாக்கியா இன்னும் பத்து நிமிஷம் ஆகும் நீ சீக்கிரமா போறதை பற்றி என்னிடம் சொல்லவே இல்லையே? இது முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல என்று கேட்கிறார். நீ ரெடியாயிட்டு வா அதுக்குள்ள சாப்பாடு செஞ்சுருவேன் என்று அனுப்பி வைக்கிறார்.
பாக்கியா பாவம்
அப்போது ஜெனி காய்ச்சிய பால் இருக்கிறதா என்று கேட்க அதை எல்லாம் டீ போட்டுட்டேன். உனக்கு அஞ்சு நிமிஷத்தில் காய்ச்சி பால் எடுத்துட்டு வரேன் என்று ஜெனியை அனுப்பி வைக்கிறார். இப்படி கிச்சனில் பரபரப்பாக பாக்கியா வேலை செய்து கொண்டு இருப்பதை பொறுமையாக கோபி கவனித்துக் கொண்டிருக்கிறார். பிறகு சமையல் வேலைகளை முடித்ததும் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு கிளம்புகிறார்.
அப்போது டிபன் எல்லாம் செஞ்சு வச்சுட்டேன் மதியத்துக்கு சாப்பாடு ரெஸ்டாரண்டில் இருந்து அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல, லஞ்சுக்கு சமைக்க முடியாதா என்று ஈஸ்வரி கேட்க, நேற்றே நான் ரெஸ்டாரண்டுக்கு போகல இன்னைக்கும் இங்கே சமைச்சா லேட் ஆகிறோம் என்று பாக்யா சொல்கிறார். ஆனால் எனக்கு ஹோட்டல் சாப்பாடு வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்க, கோபி விடுங்க அம்மா வேற ஹோட்டலில் வாங்கலையே அதுவும் நம் ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் இருந்து தானே வருகிறது.
ஈஸ்வரியின் திமிர்
அங்கேயும் பாக்கியா தான சமைக்கிறா? பாக்யா ரெஸ்டாரண்ட் போகணும் அனுப்பி வைங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் டைனிங் டேபிளில் இனியாவின் போன் இருக்கிறது. அதில் எட்டு மணிக்கு மீட் பண்ணனும் சரியா வந்துரு என்று ஒரு மெசேஜ் வருகிறது. அதை கோபி கவனித்து விடுகிறார்.
ஏமாற்றும் இனியா
பிறகு இனியாவிடம் நீ எப்படி போற என்று கேட்க நான் காலேஜ் பஸ்ஸில் போறேன் என்று இனியா சொல்கிறார். ஸ்பெஷல் கிளாஸ் அன்னைக்கு உனக்கு காலேஜ் பஸ் அனுப்பி வைக்கிறாங்களா? என்று கேட்க, பிரண்ட்ஸ்ங்க எல்லாரும் வருவாங்க அவங்க கூட சேர்ந்து போய்டுவேன் என்று சமாளிக்கிறார். ஆனால் எனக்கு ஒரு வேலை இருக்கு வா நானே அனுப்பி வைக்கிறேன் என்று கோபி இனியாவை கூட்டிக்கொண்டு போகிறார்.
எழில் சந்தேகம்
கோபியின் மாற்றத்தை பார்த்து எழில் இவர் நல்லவரா திருந்திட்டாரே என்று சொல்ல, அதற்கு செல்வி இவர் நல்லவரா இருந்தாலும் சரி கெட்டவரா இருந்தாலும் சரி கஷ்டம் அக்காவுக்கு தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியாவை காரில் கோபி கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது இனியா ஆகாஷுக்கு மெசேஜ் செய்து வருகிறார்.
சந்தேகப்படும் கோபி
அதை கோபி கவனிக்கிறார். ஆனாலும் யார்கிட்ட பேசுற உன் பிரெண்ட்ஸ் கிட்டேயா என்று கேட்க, ஆமாம் டாடி என்று ஒரு இடத்தில் வந்ததும் நான் இங்கே இறங்குகிறேன் என்று இனியா சொல்ல, நீ காலேஜுக்கு தானே போகணும் நானே அங்கே விடுறேன் என்று சொல்ல, இல்லை இங்கே ஸ்டேஷனரி திங்க்ஸ் வாங்கணும் நான் வாங்கிட்டு போறேன் என்று இனியா இறங்கி விடுகிறார்.

மாட்டிய இனியா
பிறகு கோபி கொஞ்சம் தள்ளி காரை விட்டுவிட்டு மீண்டும் அதே இடத்திற்கு வந்து இங்கே ஸ்டேஷனரி கடையே இல்லையே இனியா எங்கே போனா என்று ஒரு கடைக்குள் போக அங்கு இனியா ஆகாஷ் உடன் ஹோட்டலில் இருக்கிறார். அதை பார்த்து கோபி அதிர்ச்சியாகிறார். கோபியை அந்த இடத்தில் பார்த்ததும் ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் அதிர்ச்சி அடைந்து எழுந்து நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications