பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் நிஜ மனைவி இந்த பிரபலம் தானா? வதந்திகளுக்கு பதிலடி பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஸ்டாலின் முத்து தன்னுடைய மனைவி மற்றும் மகன்களோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு சில நடிகர்களை பார்க்கும்போது இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்ற ஒரு நினைவு வரும். அதுபோல பலருக்கும் பரீட்சையமானவர்தான் ஸ்டாலின் முத்து. இவர் ஆரம்பித்தில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். அதற்கு பிறகு பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அதிலும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெக்கத்தி பொண்ணு, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, அதுபோல 7C, சன் டிவியில் பாசமலர் சீரியலிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர், மாப்பிள்ளை, பாண்டியன் முதல் பாகத்திலும் தற்போதைய இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் பாகத்தில் மூர்த்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மூர்த்தியை சுற்றி தான் கதை நகர்ந்து கொண்டிருந்தது. மூர்த்தி தன்னுடைய தம்பிமார்களை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து பிறகு அவர்களுடைய வாழ்க்கை ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தான் பாண்டியன் ஸ்டோரில் முதல் பாகம் இருந்தது. ஆனால் முதல் பாகம் முடிவுக்கு வந்ததும் அதை தொடர்ந்து இரண்டாவது பாகம் அடுத்த வாரமே வெளிவந்துவிட்டது.

ஆனால் முதல் பாகத்தில் அண்ணனாக நடித்த நிலையில் இப்போது அப்பாவாக மாறி இருக்கிறார். அதுபோல ஸ்டாலின் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் முத்துக்கு முத்தாக, செங்காத்து, பூமியிலே கொம்பன் போன்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
ஆனாலும் சீரியலில் தான் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தில் மூர்த்தி கேரக்டரில் நடித்திருந்தார். அண்ணன் தம்பி கதையை மையப்படுத்தி இந்த கதையை இருந்தாலும் இதில் குடும்ப தலைவனாக ஸ்டாலின் தான் இருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகர் சுஜாதா நடித்திருந்தார். இவர்களுடைய காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு அடுத்த வாரத்திலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் அண்ணனாக இருந்த ஸ்டாலின் இரண்டாவது சீசனில் அப்பாவாக நடித்திருக்கிறார். அதுவும் பாண்டியன் என்று கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை: அவமானப்படுத்திய விஜயா, அதிர்ச்சி கொடுத்த முத்து.. ரோகிணியின் மாற்றம்! மீனா பதிலடி
இது ஒரு பக்கம் இருந்தாலும் சமீபத்தில் இவர் பற்றிய வதந்தி ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியலில் இவரோடு நடித்த நடிகை ஒருவரோடு இவர் எடுத்த புகைப்படத்தை ஒருவர் இவர்களின் திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே என்று ஒரு பதிவு போட்டு இருக்கிறார். இதை உண்மை என்று நம்பி போன சில ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதை பார்த்து வருத்தப்பட்ட ஸ்டாலின் உருக்கமாக பேசியிருந்தார். அதில் அந்த நடிகை என்னுடன் சேர்ந்து நடிப்பவர்தான். ஆனால் எதற்காக இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த போட்டோ போட்டது எங்க ஊர் பக்கத்தில் உள்ள ஒரு youtuber தான். அவர் வேண்டுமென்று என்னை அசிங்கப்படுத்த இப்படி செய்து இருக்கிறார்.

இதற்காக நான் சைபர் கிரைமில் புகார் கொடுத்து இருக்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று வருத்தத்தோடு பேசுகின்றார். இந்த நிலையில் இந்த வதந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களோடு எடுத்த புகைப்படத்தை ஸ்டாலின் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்று இருக்கும்போது அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
-
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications