சிறகடிக்க ஆசை: அவமானப்படுத்திய விஜயா, அதிர்ச்சி கொடுத்த முத்து.. ரோகிணியின் மாற்றம்! மீனா பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து விஜயா மற்றும் மனோஜ்க்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதே நேரத்தில் முத்து சொன்ன வார்த்தையை கேட்டு ரோகிணி கோபத்தில் முக்கிய முடிவு எடுக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் மனோஜை ஹாஸ்பிடலில் இருந்து கூட்டிட்டு வருகின்றனர். அப்போது விஜயா மீனாவை ஆரத்தி கரைச்சிட்டு வர சொல்லி கத்துகிறார். ஆனால் அதற்கு முன்பே மீனா எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டா என்று சொல்லி அண்ணாமலை திட்டுகிறார். பிறகு மீனா ஆரத்தி தட்டை கொண்டு வர அதை வாங்கி விஜயா ஆரத்தி எடுத்து போட்டு வைத்து மனோஜை வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வருகிறார்.

அசிங்கப்படுத்திய முத்து
அப்போது கதிரை இனிமே பார்த்தா துரத்திகிட்டு ஓடிக்கிட்டு இருக்காத, நீ அப்பாவே அவன் எங்க போறான் என்று அமைதியா அவனை பின் தொடர்ந்து இருந்தா அவனை பிடிச்சு இருக்கலாம். இல்லனா எனக்கு போன் பண்ணி சொல்லி இருக்கலாம் நீ தேவையில்லாம அவன் பின்னாடி ஓடிப்போய் நீ தான் ஹாஸ்பிடலில் சேர்ந்து இருக்க என்று முத்து திட்டிக் கொண்டிருக்க, அதற்கு ரோகிணி அவர் உடம்பு சரியில்லாத போது தான் இப்படித்தான் பேசுவீங்களா என்று கேட்கிறார்.
அதற்கு முத்து அவன் ஹீரோவாகலாம்னு பார்த்து இருக்கான். ஆனா கடைசியில் காமெடியாக ஆயிடுச்சு என்று கிண்டல் அடிக்கிறார். உடனே விஜயா நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு எங்கேயும் போக வேண்டாம் ரெஸ்ட் எடுங்க என்று சொல்ல, ரோகிணி நான் எங்கேயும் போக மாட்டேன் மனோஜ் கூட இருந்தே பாத்துக்கிறேன் என்று சொல்கிறார்.
விஜயா வேண்டுதல்
அப்போது விஜயா நான் கோவிலில் அங்கபிரதேஷனம் செய்வதாக வேண்டிருக்கிறேன் என்று சொல்ல, ரோகிணி எதுக்காக ஆன்ட்டி இவ்வளவு கஷ்டப்படுறீங்க என்று கேட்க, அதற்கு மனோஜ் அம்மா எனக்காக தானே வேண்டிக்கிட்டாங்க, சரிமா வேண்டினது போல நீங்க செஞ்சுருங்க இல்லனா தெய்வகுத்தம் வந்துரும் என்று சொல்ல, நான் செய்யுறதா வேண்டல நீங்க ரெண்டு பேரும் அங்கபிரதேஷனம் செய்வதாக தான் வேண்டி இருக்கிறேன் என்று விஜயா அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஸ்ருதியின் கெத்து
விஜயா சொன்னதை கேட்டதும் நானே இப்பதான் உடம்பு சரி இல்லாம இருக்கேன் இப்போ இதை செய்யணுமா? என்று கேட்க, அதற்கு விஜயா அது சக்தி வாய்ந்த கடவுள் எல்லாத்தையும் பாத்துக்கும் கண்டிப்பா நீ பண்ணியே ஆகணும் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதி ஹோட்டலில் ஆர்டர் எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஒரு நபர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க, எதுக்கு இங்க வேலை பாக்குறீங்க இப்பவே வாங்க எங்க ஆபீஸ்ல உங்களை சேர்த்துகிறேன் என்று சொல்ல, நீத்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி இங்கே தான் என் ஹஸ்பண்ட் வேலை பாக்குறாரு அவர்கிட்ட கேட்டு சொல்லவா? என்று சொல்ல, அதற்கு அந்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.
ஸ்ருதியின் அம்மா சண்டை
பிறகு ஸ்ருதியின் அம்மா அங்கே இருக்க ஸ்ருதி அவரை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அப்போது ஸ்ருதி அம்மா ஸ்ருதியை திட்டி விட்டு ரவியையும் கூப்பிட்டு அசிங்கப்படுத்தி திட்டுகிறார். அதனால் ரவி நீ இங்கே வேலை பார்க்க வேண்டாம் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி முடியாது இது நான் விருப்பப்பட்டு பார்க்கிறேன் எனக்கு இங்கே வேலை பார்க்கிறதில் எந்த வருத்தமும் கேவலமும் இல்லை என்று சொல்லிவிடுகிறார்.
மனோஜ் வாக்குவாதம்
அதைத்தொடர்ந்து முத்து ஹாஸ்பிடலில் தான் கட்டிய பில் பணத்தை மனோஜிடம் கேட்க அதற்கு மனோஜ் அதிர்ச்சி ஆகுகிறார். இப்படித்தான் கட்டிட்டு பில்லு கேப்பீங்களா என்று கேட்க, அண்ணாமலை அந்த நேரத்தில் உங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு வெளியே கடன் எல்லாம் வாங்கி கட்டி இருக்கான். இப்பதான் நீ நல்லாகி வந்துட்டல்ல, கொடுத்துடுங்க அவன் கடனை கொடுக்கணும் என்று சொல்ல அதற்கு முதலில் மனோஜ் முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ரோகிணியின் மனமாற்றம்
அதனால் ரோகிணி அந்த பணத்தை எவ்வளவு என்று கணக்கு பார்த்து நான் கொடுத்திருந்தேன் என்று சொல்கிறார். பிறகு விஜயா மீனாவிடம் நீதான் இவனை ஏத்தி விடுவியா? உன்னால தான் இவன் இப்படி எல்லாம் பேசிகிட்டு திரிகிறான். என் பையன் கஷ்டப்பட்டது உங்களுக்கெல்லாம் கொண்டாட்டம். ஆனா ரோகிணி உங்களுக்கு பணத்தை தந்துடுவா அதற்குப் பிறகு இப்படி பேசிக்கிட்டு திரியாதீங்க என்று திட்டி விட்டுப் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications