பாக்கியலட்சுமி: நிதிஷை கொன்றது இவர்தான்! ஆதாரத்தை கண்டுபிடித்த பாக்கியா! அதிர்ச்சியில் சந்திரிகா! செம முடிவு
சென்னை: ஆகஸ்ட் 1, 2025: விஜய் டிவியின் பிரபலமான சீரியலான 'பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடு, பல எதிர்பாராத திருப்பங்களுடன், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது. நிதிஷின் கொலைக்கான உண்மைக் காரணம் மற்றும் கொலையாளி யார் என்பது பாக்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் முயற்சியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆகாஷின் கண்டுபிடிப்பு
இன்றைய எபிசோடில், ஆகாஷ், "கண்டிப்பா இனியா தள்ளிவிட்டு நிதிஷ் செத்து இருக்க மாட்டான், சுதாகர் தான் கொலை பண்ணி இருப்பான்," என்று சந்தேகம் கொள்கிறார். பிறகு பாக்யா இனியாவிடம், "நீ வேலை பார்க்குற இடத்துல நிதிஷ் ஃபேமிலி பற்றி விசாரிச்சு சொல்லு," என்று கேட்க, இனியாவும் விசாரிக்கிறார்.

விசாரணையில், நித்திஷின் அம்மா சந்திரிகா ஏற்கனவே ஒரு பணக்காரருடன் திருமணம் ஆனவர் என்பதும், நிதிஷ் அவர்களுக்குப் பிறந்த குழந்தை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சுதாகர் நிதிஷின் அம்மா கம்பெனியில் வேலை பார்த்த நபர் என்றும், அவர் சந்திரிகாவை திருமணம் செய்துகொண்டு மொத்த ப்ராப்பர்ட்டியையும் தனது பெயரில் வாங்கிக் கொண்டதால், அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வரும் என்றும் தெரியவந்துள்ளது.
பாக்யாவின் துணிச்சல்
இந்த விஷயங்கள் குறித்து இனியா குடும்பத்தினரிடம் சொன்னவுடன், "கண்டிப்பா இதை சுதாகர் தான் செஞ்சிருப்பார்," என்று ஒரு அளவுக்கு முடிவெடுத்துவிட்டு, "சரி நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்," என்று சொல்கிறார்கள். ஆனால் பாக்யா, "வேண்டாம். நம்ம நிதிஷ் அம்மா கிட்ட பேசினா இதுக்கான உண்மை தெரியும்னு எனக்குத் தோணுது," என்று கூற, எழில், "அங்கே எதுக்கு போகணும்? நம்மகிட்ட தான் தேவையான ஆதாரம் இருக்கு," என்று வாதிடுகிறார். ஆனால் பாக்யா, "அங்கே போறது நல்லதுன்னு தோணுது," என்று சொல்லிவிட்டு, நால்வரும் சுதாகர் வீட்டு முன் வந்து நிற்கின்றனர்.
சுதாகரை வெளிவரச் செய்த திட்டம்
சுதாகர் வீட்டில் இருப்பதால் அவரை எப்படி வெளியே அனுப்புவது என்று யோசித்துக் கொண்டு வெளியில் நிற்கின்றனர். அப்போது ஆகாஷ், "நீங்க சுதாகரோட நம்பரை என்கிட்ட குடுங்க," என்று சொல்லி வாங்கி, சுதாகருக்கு ஃபோன் போட்டு, "நீ நிதிஷை கொலை பண்ண விஷயம் எனக்குத் தெரியும். ஆதாரம் என்கிட்ட தான் இருக்கு," என்று சொல்ல, சுதாகர் அதிர்ச்சி அடைகிறார். "என்ன சொல்ற? யார் நீ?" என்று கேட்க, "அதெல்லாம் உனக்குத் தேவையில்லை. நான் சொல்லும் இடத்திற்கு வந்தால் அந்த ஆதாரத்தைக் காட்டுகிறேன்," என்று சொல்ல, சுதாகர் பதறியடித்துக்கொண்டு காரில் கிளம்புகிறார்.
சுதாகர் கிளம்பியதும், எழில், "எனக்கு ஒரு வேலை இருக்குமா, நான் கிளம்புறேன். நீங்க போய் உள்ள பேசுங்க," என்று சொல்ல, செழியன் மற்றும் பாக்யா இருவரும் சந்திரிகாவைச் சந்தித்து பேசுகின்றனர். இவர்களைப் பார்த்தவுடன் டென்ஷனான சந்திரிகா, "டைவர்ஸ் கேட்டீங்களா? வாங்கித் தொலைச்சிட்டுப் போக வேண்டியதுதானே? என் புள்ளையை அநியாயமா கொன்னுட்டீங்களே? எனக்கு இருப்பது ஒரே பையன். நான் உங்களைச் சும்மா விடமாட்டேன். பழி வாங்குவேன்," என்று கோபப்பட்டுப் பேச, "நாங்க சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்கள்," என்று பாக்யா சொல்கிறார்.
அதிர்ச்சியில் உறைந்த சந்திரிகா
"ஒண்ணும் கேட்க வேண்டாம் வெளியே போங்க," என்று பாக்யாவை பிடித்துத் தள்ள, உடனே பாக்யா கோபப்பட்டு, "உங்க பையன கொலை பண்ணது நாங்க இல்லை. சுதாகர் தான்," என்று சொல்கிறார். உடனே சந்திரிகா அதிர்ச்சியாகி, "என் புருஷன் மேலே பழி போடுறீங்களா? அவர் எதுக்கு அவர் பையனை கொலை பண்ணனும்?" என்று கேட்கிறார். "நீங்க என் புருஷன் மேல பழி போடாதீங்க," என்று கோபப்பட, "நித்திஷ் அவரோட பையன் இல்லைன்றது எங்களுக்குத் தெரியும்," என்று பாக்யா சொல்கிறார்.
"எங்களுடைய குடும்ப விஷயத்தை தெரிஞ்சுகிட்டு வந்து எங்களை மிரட்ட பார்க்கிறீர்களா?" என்று சந்திரிகா கேட்க, "அப்படி எல்லாம் இல்லை," என்று பாக்யா சிசிடிவி கேமரா வீடியோவை காட்டுகிறார். "அவர் அந்த இடத்தில் போனால் அவர் கொலை பண்ணுனதா அர்த்தமா?" என்று சந்திரிகா கேட்க, பிறகு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, சுதாகர் நித்திஷிடம், "இந்த பொருளை விற்க ஆரம்பிச்சிட்டியா? என் மானத்தை போகாமல் விடமாட்டியா? உன்னை கொலை பண்ணிடுவேன்," என்று மிரட்டியதை நினைத்துப் பார்க்கிறார். உடனே, "அப்போ நீங்கதான் அவனை கொலை பண்ணிட்டீங்களா? என் புள்ளையை நான் தடுத்து நிறுத்தி இருக்கணும். என் பிள்ளைகிட்ட பேசி இருக்கணும். நான் தப்பு பண்ணிட்டேன்," என்று கதறி அழுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications