Baakiyalakshmi: இன்று தான் செம சம்பவம்.. பாக்கியா குடும்பத்தில் நடந்த நல்ல விஷயம்! முடிவு சூப்பர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடில், எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கோபிக்கு இனியா ஆறுதல் சொல்வதிலிருந்து தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாக்கியா தனது ரெஸ்டாரன்ட்களைத் திரும்பப் பெறுவது, அமிர்தா கர்ப்பமாக இருப்பது, மற்றும் ஆகாஷ் கலெக்டராகி இருப்பது போன்ற மகிழ்ச்சியான செய்திகள் இந்த எபிசோடில் இடம்பெற்றன.

கோபிக்கு ஆறுதல் சொன்ன இனியா
கோபியிடம் இனியா, "சாரி டாடி, என்னை மன்னிச்சுடுங்க. என்னாலதான் உங்களுக்கு இப்படி ஆகிடுச்சு," என்று வருத்தத்துடன் சொல்கிறாள். அதற்கு கோபி, "உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைமா. நான் தான் தப்பு பண்ணிட்டேன். என்னால தான் உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு," என்று சொல்லி, அவளுக்கு ஆறுதல் கூறுகிறார்.
பாக்கியாவின் வெற்றிகரமான மறுபிரவேசம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாக்கியா தனது இரண்டு ரெஸ்டாரன்ட்களையும் திரும்பப் பெற்று, பூஜை செய்து வேலைகளை மீண்டும் தொடங்குகிறார். இனியா, "இப்போதுதான் அம்மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ இழந்த இரண்டு ரெஸ்டாரன்ட்டும் உனக்கு வந்துடுச்சு," என்று கூற, பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். "இப்போது எனக்கு ஓடிக்கொண்டிருப்பதில்தான் சந்தோஷம்," என்று அவர் கூறுகிறார். பின்னர் ஊழியர்களுடன் இணைந்து மெனுவை மாற்றுவது குறித்துப் பேசுகிறார்.
அமிர்தா கர்ப்பம்
ஈஸ்வரி, எழில், கோபி மற்றும் இனியா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும்போது, அமிர்தா கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகிறது. அமிர்தா வாந்தி எடுத்துவிட்டு வருவதைப் பார்த்த ஈஸ்வரி, "மூணு மாசம்தானே ஆகுது அத்தை," என்று சொல்ல, அமிர்தா கர்ப்பமாக இருக்கிறார் என்பது உறுதியாகிறது. "ஆம்பளப் புள்ளதான் பிறக்கும்," என்று ஈஸ்வரி கூற, எழில் "எந்தக் குழந்தையா இருந்தாலும் என்ன பாட்டி," என்று சொல்கிறார்.
ஆகாஷ் கலெக்டர் ஆனார்
ஜெனி சமைத்த உணவை அனைவரும் பயத்துடன் சாப்பிடும்போது, வீட்டிற்கு வரும் பாக்கியா, "ஆகாஷ் காஞ்சிபுரத்துக்கு சப் கலெக்டரா அப்பாயிண்ட்மெண்ட் ஆகி இருக்கான்," என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார். இதைக் கேட்டு குடும்பத்தினர் சந்தோஷமடைகின்றனர். இனியாவிடம், "என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?" என்று கேட்க, "எனக்கு முன்னாடியே தெரியும்மா. அவன் எனக்கு டெக்ஸ்ட் பண்ணிட்டான்," என்று அவள் கூறுகிறாள்.
ஈஸ்வரி, "நம்ம ஆகாஷுக்கு இனியாவைக் கல்யாணம் பண்ணி வச்சிடலாமா?" என்று கேட்க, "அதெல்லாம் சரிப்பட்டு வராது," என்று பாக்கியா சொல்கிறார். "இப்போதைக்கு அவங்க ஃப்ரண்ட்ஸா தான் பழகிட்டு இருக்காங்க. அவங்க அவங்களுக்கு அந்த நேரத்துல அவங்க வாழ்க்கை துணையத் தேர்ந்தெடுத்துப்பாங்க," என்று கூறி, இப்போதைக்கு இந்த விஷயத்தைப் பேச வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.
மறுநாள் காலையில், செல்வி மற்றும் ஆகாஷ் இனிப்புடன் பாக்கியா வீட்டிற்கு வர, குடும்பத்தினர் என்ன பேசுகிறார்கள் என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications