பாக்கியலட்சுமி: கோபியை காப்பாற்றிய பாக்யா.. காரணம் இதுதானா? ஈஸ்வரிக்கு அதிர்ச்சி.. ராதிகா மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி மீது கொடுத்த வழக்கை பாக்கியா வாபஸ் வாங்குகிறார். அதோடு பாக்கியா மீது ஈஸ்வரி வீண் பழிபோட பாக்கியாவிற்காக கோபியும் ராதிகாவும் சப்போர்ட் செய்கிறார்கள்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா கொடுத்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அப்போது பாக்கியா கோபி மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதாக தெரிவிக்கிறார். அதனால் கோபப்பட்டு நீதிபதி வாபஸ் வாங்குவது என்றால் எதற்காக கேஸ் கொடுத்தீங்க என்று பாக்கியாவை சரமாரியாக திட்டுகிறார்.

ஆனால் அதற்கு பாக்கியா என்னுடைய குடும்பப் பிரச்சனை நாங்களே பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்ல, குடும்ப பிரச்சனை என்றால் எதற்காக கோர்ட்டுக்கு வந்தீங்க என்று திட்டுகிறார். அதோடு குடும்ப பிரச்சனைக்காக பிரியாணியில் கெட்டுப்போன இறைச்சியை போட்டு அடுத்தவங்க உயிரில் விளையாடலாமா? என்று கேள்வி கேட்க, பதில் எதுவும் சொல்ல முடியாமல் பாக்கியா நிற்கிறார்.
அதற்கு பிறகு எழிலிடம் பேசியதை நினைத்து பார்க்கிறார். அப்போது எழிலிடம் நான் கோபி மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க போகிறேன் என்று சொன்னதும் எழில் எதற்காக என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா அவர் செஞ்ச தப்புக்கு அவருக்கு ஏற்கனவே தண்டனை கிடைச்சிடுச்சு இப்போ நான் கேசை வாபஸ் வாங்குவதற்கு காரணம் இனியாவும் அத்தையும் தான். அவங்க ரெண்டு பேருடைய மன நிம்மதி முக்கியம்.

அதுபோல ஏற்கனவே தண்டனை அனுபவிச்சவருக்கு இன்னும் தண்டனை வாங்கி கொடுப்பது மனசுக்கு நெருடலா இருக்கு என்று சொல்கிறார். இறுதியில் கோபியை கேஸில் இருந்து விடுவித்து வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம். இதனால் கோபி நீதிமன்றத்தை விட எனக்கு பெரிய தண்டனை கொடுத்துட்டா என்று பாக்கியாவிடன் மனம் வருந்தி பேசுகிறார்.
பாக்யா செய்த செயலை எதிர்பார்க்காத ராதிகாவும் இன்ப அதிர்ச்சி அடைகிறார். பிறகு வீட்டிற்கு வந்த கோபி பாக்கியா கேஸை வாபஸ் வாங்கிய விஷயத்தை சொல்கிறார். அப்போது ஈஸ்வரி இதை ஆரம்பத்திலேயே செஞ்சி இருக்கலாம் தானே? என் மகனை இவ்வளவு கஷ்டப்படுத்துவது தான் உனக்கு சந்தோஷமா? என்று பாக்கியா திட்டுகிறார்.

ஆனால் கோபி இதுவே வேற யாராவது இருந்தா என்ன களி பொங்க வச்சிருப்பாங்க. பாக்கியா மேல எந்த தப்பும் இல்லை என்று பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். அதை தொடர்ந்து பாக்கியா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு ராதிகா போகிறார். அவரையும் உட்கார சொல்லி சாப்பிட சொல்கிறார்.
ஈஸ்வரி அத்தை உங்களை திட்டுறாங்க அதற்கு நீங்கள் ஏன் பதில் கொடுக்கவில்லை என்று கேட்கிறார். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை வெளியில் நின்று ஈஸ்வரி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பாக்கியா நான் பேச வேண்டிய நேரங்களில் தான் பேசுகிறேன் அத்தைக்கு இன்னும் ஒரு அன்பான முகம் இருக்கு அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கு ஆதரவா நிறைய விஷயங்கள் செஞ்சிருக்காங்க என்று சொல்கிறார்.
அடுத்ததாக பாக்யா கிளம்பி போனதும் ராதிகாவிடம் சென்று ஈஸ்வரி இதுதான் உன்னுடைய பிளானா? குடும்பத்தை பிரிக்க பார்க்கிறாயா? பாக்கியாவிடம் எதற்காக அப்படி சொன்ன என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ராதிகா நான் பாக்யா மாதிரி கிடையாது என்கிட்ட அதிகமா பேசாதீங்க என்று மிரட்டி விட்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications