பாக்கியலட்சுமி: ராதிகா கேட்ட கேள்வி.. பாக்யாவுக்கு வந்த புது பிரச்சனை.. கோபியின் மனமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜனவரி 21ஆம் தேதிக்கான எபிசோடில் சமையல் ஆர்டர் ரெடி பண்ணி கொண்டிருக்கும் பாக்கியத்திற்கு புது பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் பாக்யா செய்யும் செயலை பார்த்து கோபி ஆச்சரியப்படுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ராதிகாவிடம் நான் இந்த ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் கோபியிடம் ஹெல்ப் கேட்பேன். அதற்குப் பிறகு வரும் ஆர்டர் எல்லாவற்றையும் நானே ரெடி பண்ணிடுவேன் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா அதெல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால் நான் ஹெல்ப் பண்றேன்னு சொன்னதை ஏன் வேணாம்னு சொன்னீங்க என்று கேட்கிறார்.

அதற்கு பாக்கியா தெரியாதவங்க கிட்ட கூட ஹெல்ப் கேட்கலாம் ஆனா சொந்தக்காரங்க கிட்டயும், பிரண்ட்ஸ் கிட்டையும் எனக்கு ஹெல்ப் கேட்ட விருப்பமில்லை அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல என்று சொல்கிறார். மறுநாள் காலையில் ஈஸ்வரி கிச்சனில் சாப்பாடு வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு பூஜை செய்து ஆரம்பித்து வைக்கிறார்.
அடுத்ததாக பாக்யா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி வேஸ்டி சட்டையில் வந்து நிற்கிறார். கோபியை பார்த்ததும் ஈஸ்வரி ஆச்சரியப்படுகிறார். அப்போது கோபி எனக்கு ஆர்டரை யோசித்து தூக்கம் வரலமா அதனாலதான் நானும் வந்தேன் என்று சொல்கிறார்.
பிறகு வேலை தொடங்கி எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பாக்யா எல்லா இடத்திலும் சுற்றி சுற்றி வேலை பார்த்துக் கொண்டிருக்க, இதை பார்த்த கோபி ஈஸ்வரியிடம் பாக்யா இப்படி பம்பரமா வேலை செய்வதை நான் பார்த்ததே இல்லம்மா என்று பெருமையாக சொல்கிறார்.
அதற்கு ஈஸ்வரி பாக்யா எப்பவுமே இப்படித்தான் வேலைன்னு வந்துட்டா ரொம்ப சுறுசுறுப்பாகிடுவா என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல எழில் அமிர்தா இருவரும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த பாக்கியா நீங்க இருவரும் வெளியே வாங்க என்று கூப்பிட அதற்கு எழில் வர மறுக்கிறார்.
அப்போது பாக்கியா எழிலிடம் நீ டைரக்டர் டா என்று சொல்ல அதற்கு எழில் நான் வெளியே தான் டைரக்டர். எங்க அம்மாவுக்கு எப்பவும் பையன் தானே என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ராஜசேகர் மேனேஜர் ஃபோன் பண்ணி கோலா உருண்டை வேண்டும் என்று சொல்கிறார்.
அதனால் பாக்கியா என்ன செய்ய என்று தெரியாமல் யோசிக்கிறார். அப்போது மட்டன் கோலா உருண்டை செய்ய வேண்டும் என்றால் மட்டன் அவ்வளவு இப்போ கிடைக்காது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அமிர்தா வாழைப்பூ கோலா உருண்டை செய்யலாமா என்று சொல்கிறார்.

ஆனால் வாழைப்பூ உரிக்க ரொம்ப லேட் ஆகும் அதுவும் செய்ய முடியாது என்று சொல்லிய பாக்கியா சோயா கோலா உருண்டை செய்துவிடலாம் என்று முடிவெடுத்து சோயா வாங்க போகிறார். அப்போது இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கோபி எனக்கு இந்த மாதிரி ஒரு பிரஷர் வந்தா நான் அரை மணி நேரம் இல்ல அரை நாள் கூட ஆயிடும். ஆனா பாக்கி எவ்வளவு ஸ்மார்ட்டா யோசிச்சு முடிவு பண்ணிட்டா பாருங்க என்று ஈஸ்வரி இடம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக கொஞ்ச நேரத்தில் வாழை இலை கட்டு வருகிறது. அதை பிரித்துப் பார்த்தால் எல்லா இலையும் கிழிந்து போயிருக்கிறது. உடனே செல்வி என்ன இப்படி இருக்கு என்று கேட்கிறார். அதற்கு ஒன்று இரண்டு தான் பிரிஞ்சி இருக்கும் என்று பாக்யா சொல்ல, எல்லா இலையும் இப்படித்தான் இருக்கு என்று சொன்னதும் பாக்யா கிழிஞ்ச இலை எல்லாம் எங்க தலையில கட்ட பாக்குறீங்களா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது கோபி 50 தலைவாழை இலையை எடுத்து கொண்டு வாங்க என்று போன் பண்ணி சொல்லி விடுகிறார். அடுத்ததாக கோபி கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த பாக்கியா நீங்க வேலை எல்லாம் செய்ய வேண்டாம் உட்காருங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications