கோபி கையில் சூடு வைத்த ராதிகா.. பாக்யா செய்த செயல்.. திடீர் திருப்பம்.. ஈஸ்வரிக்கு தெரிந்தால்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜனவரி எட்டாம் தேதி முதல் 13ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரகளை செய்ய அதனால் கோபமான ராதிகா கோபி கையில் சூடு வைத்திருக்கிறார்.
ஏற்கனவே கோபி நடத்தி வந்த கம்பெனியில் கிளைண்டுகள் எல்லாம் அவரை விட்டுப் போனதால் கம்பெனியை இழுத்து மூடி இருக்கிறார். அதே நேரத்தில் கம்பெனியில் இருக்கும் ஊழியர்களும் கோபிக்கு நெருக்கடி கொடுத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு மாத சம்பளமும் கொடுக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் கம்பெனியை மூடிய விஷயத்தை கோபி ராதிகாவிடம் மறைத்திருக்கிறார். அதனால் இனி என்னவெல்லாம் பிரச்சனை வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதே நேரத்தில் இன்று என்ன நடக்கின்றது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் இன்று வெளியான எபிசோட்டில் கோபி தன்னுடைய கம்பெனிக்கு போயிருக்கும் நிலையில் அங்கு இதற்கு மேலும் இந்த கம்பெனியை நடத்து முடியாது என்று தான் கம்பெனியை மூட போவதாக அங்க இருக்க ஊழியர்களிடம் சொல்ல அவர்கள் அதிர்ச்சியாகி என்ன இப்படி நீங்க திடீர்னு வந்து சொன்னா எங்க நிலைமை என்ன ஆகிறது என்று கேள்வி கேட்கின்றனர்.
அதோடு எங்களுக்கு இரண்டு மாத சம்பளமும் தரவில்லையே என்று பிரச்சனை செய்ய அதற்கு கோபி நான் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் பண்ணிவிடுகிறேன் என்று டைம் கேட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து தன்னுடைய நண்பனிடம் தன்னுடைய கஷ்டத்தை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் வீட்டில் ஏற்கனவே செழியனுக்கு விவாகரத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது.
அமிர்தா வாழ்க்கையிலும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. அமிர்தா என்னோடு தான் வரவேண்டும் என்று போலீஸோடு கணேஷ் வந்திருந்த நிலையில் அமிர்தா நான் கணேஷோடு போக மாட்டேன் என்று சொல்ல அதனால் போலீஸ் இனி கணேஷ் வந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று அவரை மிரட்டி இருந்தார். அது மட்டும் இல்லாமல் கணேஷ் இனி வீட்டில் வந்து பிரச்சனை செய்தால் எனக்கு போன் பண்ணி கூப்பிடுங்கள் என்றும் அந்த போலீஸ் சொன்னதால் கணேஷ் கோபத்தில் இருக்கிறார்.
இப்படியான நிலையில் இனி வரும் எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோபி கிச்சனில் தான் காபி போட போகிறேன் என்று சொல்லிவிட்டு டீ பாத்திரத்தை எடுத்து கேஸ் அடுப்பில் தீ எரியாத இடத்தில் வைத்து இன்னும் பாத்திரம் சூடாகவில்லையே என்று கையை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா கையை இதில் வச்சு பாருங்க என்று எரிந்து கொண்டிருக்கும் அடுப்பில் கையை வைத்து சூடு வைக்கிறார்.
இதை எல்லாம் பாக்கியா அங்கு நின்றபடி பார்த்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கோபியை கூட்டிட்டு வந்த ராதிகா கோபி இடம் ஏன் திரும்பத் திரும்ப குடிச்சிட்டு வரீங்க என்று பிரச்சனை செய்ய அதற்கு கோபி என் நிலமை உனக்கு தெரியாது என் நிலைமையை சொன்னா.... என்று சொல்ல வர பிறகு சொல்லாமல் மூடி விடுகிறார்.

அதற்கு கோபமாக ராதிகா கோபியை பிடித்து தள்ளிவிட்டு போக கொஞ்சம் சரக்கு குடிச்சதுக்கே இவ இப்படி பண்ணுறாலே நான் கம்பெனியை இழுத்து மூடிட்டாங்கன்னு சொன்னா என் நிலைமை அவ்வளவுதானா என்று தனியாக புலம்பி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் எழில் செழியன் பிரச்சனையை தொடர்ந்து இப்போது கோபிக்கு அடுத்த பிரச்சனை வந்திருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications