பாக்கியலட்சுமி: சுதாகருக்கு எதிராக கோபி போட்ட பிளான்.. எழில் கண்டுபிடித்த உண்மை! பாக்யா எடுத்த அவதாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 18-ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவை ஏமாற்றுவதற்காக சுதாகர் அனுப்பிய ஆள் போலீசிடம் சிக்கி விடுகிறார். அதோடு இந்த சூழ்ச்சியில் சுதாகர் தான் இருக்கிறார் என்று உண்மை கோபி மற்றும் எழிலுக்கு தெரிய வருகிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி போலீஸிடம் இந்த ஆள் நடிக்கிறான் என்று சொல்கிறார். பாக்கியா அந்த ஆளை பார்த்து உங்க பொண்ணுக்கு உண்மையாகவே நாளைக்கு கல்யாணமா? என்று கேட்க, ஆமாம் என்று சொன்னதும் அப்போ பத்திரிக்கை இருக்கா என்று பாக்கியா கேட்க, அதற்கு அந்த ஆள் பத்திரிக்கை அடிக்கல என்று சொன்னதும் நீங்க பத்திரிக்கை அடிக்கல நாளும் போனில் எல்லாரையும் கூப்பிட்டு இருப்பீங்க இல்ல அதை காட்டுங்கள் என்று கோபி கேட்கிறார். நாங்க கொஞ்ச பேரை கூப்பிட்டு கல்யாணம் நடத்துகிறோம் என்று அந்த ஆள் சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

செல்வி கேட்ட கேள்வி

அதற்கு செல்வி இந்த ஆளுக்கு பொண்ணு இருக்கா என்பதே சந்தேகமா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா நீங்க என்னிடம் ஆயிரம் பேருக்கு சமைக்கனும்னு சொன்னீங்க ஆயிரம் பேரும் உங்களுடைய நெருங்கிய உறவினர்களா? அவங்களை எல்லாம் நீங்கள் லெட்டர் அடிக்காமலா கூப்பிட்டீங்க என்று கேட்க, அதற்கு அந்த ஆள் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.

போலீஸ் கொடுத்த அடி

அப்போது எழில் உங்க பொண்ணு கல்யாண எந்த மண்டபத்தில் நடக்கிறது என்று கேட்க, அதற்கு அவர் ஒரு மண்டபத்தின் பெயரை சொல்கிறார். அதை செழியன் செக் பண்ணி பார்த்துவிட்டு இவர் சொன்ன இடத்தில் அப்படி ஒரு மண்டபமே இல்லை, எல்லாமே நடிப்பு சார் என்று சொன்னதும் போலீஸ் அந்த ஆளுக்கு ஒரு அடி கொடுக்க, போலீஸ் அடித்ததும் அந்த ஆள் உண்மைகளை சொல்கிறார். பிறகு போலீஸ் இவரை ஜீப்பில் ஏத்துங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கிருந்து தப்பிச்சு ஒருவர் பைக்கில் ஓடுகிறார்.

புரோக்கர்

அவரைப் பிடிக்கப் போவதற்காக எழிலும் செழியனும் கிளம்ப கோபி இனி போலீஸ் பாத்துக்குவாங்க என்று தடுக்கிறார். பிறகு வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி பாக்யாவிடம் உனக்கு எதிரிகளுக்கு பஞ்சமே இல்லை, இப்ப புதுசா ஒரு ஆளு சேர்ந்து இருக்கிறான். ஏற்கனவே குடும்பத்தில் இத்தனை பிரச்சனை போயிட்டு இருக்கு இதில் இவங்க வேற தொல்லை பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எதிர்பார்த்த விஷயம்

அப்போது இனியா பாக்கியாவிடம் நல்லவேளை நீ காசு வாங்காம வேலை பண்ணல என்று சொல்கிறார். பிறகு கோபியும் எழிலும் காரில் போய்க்கொண்டிருக்கின்றனர். கோபி எழிலிடம் நீ நல்லாவே கார் ஓட்டுகிறாய் என்று சொல்லிவிட்டு, உன்னுடைய வேலை எப்படி போகிறது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு இனியாவை நல்லபடியா பாத்துக்கோ என்று சொல்கிறார்.

கோபி கொடுத்த அட்வைஸ்

அந்த நேரத்தில் பாக்யாவிடம் ஆர்டர் கொடுக்கிறேன் என்று ஏமாற்றிய ஆள் சுதாகரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் எழில் கோபப்படுகிறார். அப்போது கோபி இப்போதைக்கு நீ கோபப்படாத, போலீஸ் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க. இனியாவுக்காக கொஞ்சம் அமைதியாக இரு என்று சொல்கிறார். பிறகு எழில் வீட்டிற்கு வந்து இத்தனை பிரச்சனைக்கு காரணம் சுதாகர் தான், இந்த பிளான பண்ணுனது என்று சொல்கிறார். அதைக் கேட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+