கொலை பழியோடு ஜெயிலுக்கு போகும் ஈஸ்வரி.. கோபிக்கு விழுந்த அடி.. ராமமூர்த்தி இப்படி சொல்லிட்டாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 4 ஆம் தேதியிலிருந்து 6ம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. இதில் கமலா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஈஸ்வரியை போலீஸ் அரெஸ்ட் செய்து கூட்டிட்டு போகின்றனர். இதைப் பார்த்த கோபிக்கு நடு தெருவில் அவமானம் நடக்கிறது அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ராதிகா தவறி கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு அவருடைய கரு கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று கமலாவும் ராதிகாவும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இவர்களின் பேச்சை நம்பிய கோபி வீட்டை விட்டு ஈஸ்வரியை துரத்தி விட்டதால் ஈஸ்வரி மனக்குழப்பத்தில் இருந்தார்.

இதனால் பாக்கியா கோபியின் வீட்டிற்கு வந்து கோபியிடம் உங்க அம்மாவை பற்றி நீங்களே இவ்வளவுதான் புரிஞ்சி வச்சிருக்கீங்களா? அவங்க அப்படியெல்லாம் செய்யுற ஆளா? என்று பல்வேறு கேள்விகளை கேட்டு இருந்த நிலையில் கோபி தன்னுடைய அம்மாவை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். இந்த நிலையில் பாக்கியா ஈஸ்வரியை கோவிலுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார்.
அங்கு அவருடைய பழைய தோழியை பார்த்ததும் ஈஸ்வரி தன்னுடைய கவலை எல்லாம் மறந்து சந்தோஷமாக மாறியிருந்தார். இந்த நிலையில் வீட்டில் கமலா ஈஸ்வரியை பற்றி மீண்டும் மீண்டும் கொலைக்காரி என்று சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத கோபி கமலாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி இருந்தார்.

அதோடு மாமியார் என்றும் பார்க்காமல் அடிக்க கை ஓங்கி இருந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த கமலா போலீஸ் ஸ்டேஷனில் ராதிகா குழந்தை அபார்ஷன் ஆனதற்கு காரணம் ஈஸ்வரி தான். ராதிகாவை கொலை செய்ய முயற்சி செய்தார் என்று அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் போலீஸ் வீட்டில் ஈஸ்வரியை தேடி வந்திருந்த போது ஈஸ்வரி ஊரில் இல்லை என்பதால் நாளைக்கு நாங்களே கூட்டிட்டு வருகிறோம் என்று எழில் மற்றும் செழியன் போலீசை அனுப்பி வைத்திருந்தனர் இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் ஈஸ்வரி ஊருக்கு வந்திருக்கும் நேரத்தில் போலீஸ் ஈஸ்வரியை தேடி பாக்யா வீட்டிற்கு வருகின்றனர்.

ராதிகாவை கொலை செய்ய நீங்க செய்த முயற்சியில் அவங்களோட குழந்தையை நீங்க கொன்னுட்டீங்கன்னு உங்க மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு என்று ஈஸ்வரியை தரதர என இழுத்து போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போகின்றனர். ஈஸ்வரிக்காக மொத்த குடும்பமும் போலீஸிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் போலீஸ் கேட்காமல் ஈஸ்வரியை அரெஸ்ட் செய்து கூட்டிட்டு போக அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த கோபி என்ன போலீஸ் வண்டி வந்துகிட்டு போகுது என்று அங்கு வந்து செழியன் இடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அப்போது கோபமான ராமமூர்த்தி கோபியை போட்டு அடித்து எப்படி இருந்தவடா.. அவளை போயி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்துட்டியே என்று சொல்ல, கோபி தலையை பிடித்துக் கொண்டு கதறி கொண்டு இருக்கிறார். இனி ஈஸ்வரியை எப்படி வெளியே கொண்டு வர போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கமலா கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார் என்று தெரிந்ததும் ராதிகா எதற்காக கம்ப்ளைன்ட் கொடுத்த என்று தன்னுடைய அம்மாவை திட்டியிருந்தார். இந்த நிலையில் ராதிகா கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்க போகிறாரா? அல்லது உண்மையை புரிந்து கொண்டு மனம் மாறப்போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications