பாக்கியலட்சுமி: போலீஸ் கைது செய்ததும் கெஞ்சிய ஈஸ்வரி.. ராதிகா செய்த செயல்.. கோபிக்கு தெரிந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி மீது கமலா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஈஸ்வரியை போலீஸ் கைது செய்து இருக்கின்றனர். அதே நேரத்தில் கமலா மற்றும் ராதிகாவின் செயல்பாடுகளை பார்த்து கோபி சந்தேகப்படுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கமலாவும் ராதிகாவும் பாக்கியா வீட்டில் என்ன நடக்கிறது என்று ரோட்டில் நின்று நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கோபி வந்ததும் நைசாக இரண்டு பேரும் வீட்டிற்குள் வந்து விடுகின்றனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி கைது செய்வதை தடுப்பதற்காக எழில் மற்றும் செழியன் இருவரும் தங்களுக்கு தெரிந்த வக்கீல்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எல்லோரும் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட, என்ன செய்யலாம் என்று வாசலில் நின்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் பாக்யா வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக கமலா தெருவில் நின்று நோட்டமிட்டு கொண்டிருப்பதை பார்த்து செழியன் கோபப்பட்டு அவரை திட்ட போக எழில் செழியனை பிடித்து வைத்துக் கொள்கிறார். ஏற்கனவே அந்த அம்மா பாட்டி மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. இப்ப நீ அவங்க கிட்ட பேச போனா உன் மேலேயும் கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க.

இருக்கிற பிரச்சனையில் இது தேவையில்லாத வேலை. இப்போதைக்கு நாம பாட்டியை எப்படி காப்பாற்றுவது என்பதை பார்ப்போம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். வீட்டிற்குள் கிட்சனில் பாக்யாவும் தனக்கு தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு மருமகள்களோடு சேர்ந்து பாட்டி விஷயத்தில் என்ன செய்யலாம் என்று பாக்யா யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வரும் ஈஸ்வரி வீட்டு வேலைகளை எல்லாம் எல்லாரும் சரியா பாத்தீங்களா என்று வழக்கம்போல ஜெனி மற்றும் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் வண்டி வாசலில் வர அதை பார்த்து செழியனும் எழிலும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனாலும் கேட்காமல் போலீஸ் வீட்டிற்குள் வந்து இங்கு யாரு ஈஸ்வரி என்று கேட்க, இராமமூர்த்தி எதுக்கு கேக்குறீங்க என்று கேட்க, அவங்க மேல கம்ப்ளைன்ட் வந்து இருப்பதாக சொல்கிறார்.
யார் கம்ப்ளைன்ட் கொடுத்தா என்ன கம்பளைண்ட் என்று கேட்க, ராதிகாவை தள்ளி குழந்தையை கலைத்து விட்டார்கள் என்று ராதிகாவின் அம்மா கமலா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்ல, எல்லோரும் போலீஸிடம் ஈஸ்வரி அப்படி பண்ணி இருக்க மாட்டாங்க என்று கெஞ்சுகின்றனர். ஆனாலும் போலீஸ் கேட்காமல் ஈஸ்வரியை கைது செய்து வெளியே கூட்டிட்டு வர அந்த நேரத்தில் ஒரு கமலாவும் ராதிகாவும் வாசலில் நின்று இதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.
அப்போது கமலா உன்னை அழ வச்சவங்க இப்போ கதறி அழுகிறார்கள். இந்த கண்கொள்ளா காட்சியை பாரு.. என்று சொல்லி ரசிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஈஸ்வரி நான் எதுவும் பண்ணல என்று தலையில் அடித்துக் கொண்டு அழ போலீஸ் அவரை ஜிப்பில் ஏற்றி அழைத்துச் செல்ல, மொத்த குடும்பமும் அழுது துடிப்பதை பார்க்க முடியாமல் ராதிகா வீட்டிற்குள் செல்ல அந்த நேரத்தில் கோபி வீட்டிற்குள் இருந்து வெளியே வரும்போது போலீஸ் வண்டி பாக்யா வீட்டு வாசலில் நின்று போவதை பார்த்து அதிர்ச்சியடைந்து யாருக்கு என்ன ஆச்சு என்று பதறி ஓடி வர கமலா கோபியை பார்த்ததும் நைசாக வீட்டிற்குள் சென்று விடுகிறார்.

அதை அடுத்து கோபி செழியனிடம் என்ன ஆச்சு யாருக்கு என்ன பிரச்சனை என்று பதறிப் போய் கேட்க, ராமமூர்த்தி சரமாரியாக அடி கொடுத்து இன்னும் எத்தனை தடவ எங்கள உயிரோட கொன்னு சமாதி கட்ட போற என்று கோபப்படுகிறார். கோபி என்ன ஆச்சு என்று புரியாமல் கேட்க இனியா கமலா கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை பற்றி சொல்ல, ராமமூர்த்தி உன்னை நம்பி தானே இருந்தா, அவளுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டியே நீ நல்லா இருக்கவே மாட்ட என்று சாபம் விட, எழில் இவருக்கு தெரியாமல் இந்த விஷயங்கள் எல்லாம் நடக்கல, இவரு கிட்ட போய் நீ விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கிறியா என்று இனியாவை திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications