கல்யாண விஷயத்தில், கோபி கேட்ட கேள்வியால் பாக்யா எடுத்த முக்கிய முடிவு! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்யா மற்றும் பழனிச்சாமிக்கு கல்யாணம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக பழனிச்சாமியின் அக்கா பாக்யாவிடம் நேரடியாக கேட்டு இருக்கிறார். அதுபோல கோபி பாக்யாவிற்கு இனியா விஷயத்தில் வார்னிங் கொடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ரெஸ்டாரண்ட் வந்து பாக்யாவிடம் உனக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணமா? அவங்க அக்கா என்கிட்ட முகத்துக்கு நேரா வந்து சொல்றாங்க. உன்னை பொண்ணு கேட்க போறாங்களாம் என்று பாக்யாவை அவமானப்படுத்தி பேசுகிறார். அதோடு நீயும் பழனிச்சாமியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு நல்ல அம்மானு நீ போட்டுட்டு இருக்கிற வேஷம் கலைஞ்சு போயிடும்.

அப்புறம் கிளைமாக்ஸ்ல உன் கூட யாரும் இல்லாம தனிமரமா தான் இருக்க போற. ஆனால் நீ என்ன வேணாலும் பண்ணிட்டு போ அதை பற்றி எனக்கு கவலை கிடையாது. ஆனா என் பொண்ணை எதுக்கு அந்த விமல் பையனோட பேச விடுற. என் பொண்ணுக்கு ஏதாவது ஒன்னுனா தொலைச்சிடுவேன். நீ காலேஜ் முடிச்சிட்டு யாராவது நம்மை கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு பாத்துட்டு இருக்கியா என்று வாய்க்கு வந்தபடி பேச அதற்கு பாக்யா போதும் நிறுத்துங்க நீங்க சொன்னது நடக்காது என்று சொன்னதும், கோபி என்னது கல்யாணம் நடக்காதா? என்று சந்தோசமாக கேட்க, அதற்கு பாக்யா என் குடும்பத்தில் யாரும் என்னை விட்டு தரமாட்டாங்க என்று சொல்கிறார்.

அதோடு எல்லாத்துக்கும் உங்களுக்கு விளக்கம் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது நீங்க வெளிய போங்க என்று துரத்தி விடுகிறார். அதைப் பார்த்த செல்வி என்னாச்சு என்று கேட்டதும் ஒன்னும் இல்ல நான் பழனிச்சாமி சார் வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறார். பிறகு பாக்யா பழனிச்சாமி வீட்டுக்கு வந்ததும் அவருடைய அக்காவும் அம்மாவும் பாக்யாவை வரவேற்று உன்கிட்டயும் உங்க குடும்பத்துகிட்டயும் நேற்று ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு இருந்தோம்.
ஆனால் பேச முடியல என்று சொல்லி பாக்யா மற்றும் பழனிச்சாமிக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு எடுத்து இருப்பதாக நேரடியாகவே பாக்கியாவிடம் கேட்டதும் பாக்யா அதிர்ச்சி அடைகிறார். அதோடு என் மனசுல அப்படி ஒரு எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது. நீங்க பழனிச்சாமி சார் கிட்ட இதைப்பற்றி பேசி இருந்தா என்கிட்ட பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தயவு செய்து இந்த பேச்சை இதோட விட்டுடுங்க என்று சொல்கிறார்.

இதனால் பழனிச்சாமியின் அக்கா கோவப்பட்டு ரூமுக்குள் சென்று விட பழனிச்சாமியின் அம்மா அவ மனசுல பட்டதை கேட்டுட்டா. இந்த விஷயம் பழனிக்கு கூட தெரியாது. நீ அவனை தப்பாக நினைக்காதே என்று சமாதானப்படுத்துகிறார். அதற்கு பாக்யா இல்லமா நான் அவர்கிட்ட இதை பற்றி பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி வருகிறார். பிறகு பழனிச்சாமியிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று பாக்கியா யோசித்துக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி அங்கே வந்து என்னாச்சு மேடம் என்று கேட்க,
அதற்கு பாக்கியா சூப்பர் மார்க்கெட்ல பில்லுல கொஞ்சம் தப்பு இருக்கு அதற்கு இப்ப போலாமா? கொஞ்சம் கழிச்சு போலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல பழனிச்சாமி நானும் சூப்பர் மார்க்கெட் தான் போறேன் வாங்க என்று காரில் கூட்டிக்கொண்டு போக பாக்கியா காரில் போய்க் கண்டிருக்கும் போது பழனிச்சாமி இடம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications