ICUவில் கண் முழித்ததும் ஈஸ்வரி செய்த செயல்! கோபத்தில் கோபி.. ராமமூர்த்தியிடம் பாக்யா சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் எட்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி சாப்பிடாததால் மயக்கம் போட்டு விழ, அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கின்றனர். இதை தெரிந்து கொண்ட ராமமூர்த்தியும் பாக்யாவும் பதறி அடித்து அங்கு வருகின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கமலா எப்ப பார்த்தாலும் டிவி பார்த்துட்டே இருக்கீங்களே என்று வம்பு இழுக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது கமலா ஈஸ்வரி இடம் நீங்க எப்போ வீட்டை விட்டு கிளம்பி போவீங்க என்று கேட்க, ஈஸ்வரி நான் எதற்கு போகணும் இது என்னுடைய மகன் வீடு என்று இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராதிகா எழுந்து வந்து ரெண்டு பேரும் கொஞ்சம் சண்டை போடாம இருக்கீங்களா? ஏற்கனவே ஆபீஸில் அவ்வளவு பிரச்சனை இருக்கிறது. வீட்டில் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலான்னு பார்த்தா நீங்க எப்பவும் இப்படியே சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று திட்டியதும் ஈஸ்வரியும் கமலாவும் ஆளுக்கு ஒரு மூலைக்கு சென்று விடுகின்றனர்.
ஈஸ்வரி சாப்பிடாமல் ரூமில் படுத்து கொண்டிருக்கிறார். ராதிகா சென்று ஈஸ்வரியை சாப்பிட கூப்பிட ஈஸ்வரி அழுது கொண்டு இருக்கிறார். எதுவும் பேசாமல் இருக்க ராதிகா வந்து விடுகிறார். மறுபக்கம் பழனிச்சாமி விமலுடன் காரில் வரும்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியாவை பார்க்க எதற்கு காலேஜுக்கு போன என்று கேட்க, அதற்கு விமல் எதை எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறார்.
மறுபக்கத்தில் கோபி சாப்பாடு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வர ராதிகா உங்க அம்மா மதியத்தில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை அந்த ரூமை விட்டு வரவே இல்லை என்று சொல்ல, கமலா பச்சை தண்ணி கூட குடிக்கல என்று சொன்னதும் கோபி இவ்வளவு நடந்திருக்கு நீங்க ஏன் எனக்கு போன் பண்ணி சொல்லல என்று கோபப்பட்டு திட்டிவிட்டு ஈஸ்வரியை போய் பார்க்க ஈஸ்வரி தூங்கிக் கொண்டிருக்கிறார்.
பிறகு கோபி ஈஸ்வரியை சாப்பிட வைக்கலாம் என்று எழுப்ப ஆனால் ஈஸ்வரி தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவே இல்லை. உடனே அவர் மயக்கத்தில் இருக்கிறார் என்று கோபி பதற கமலா புது ட்ராமாவை ஆரம்பிச்சிடுச்சி என்று சொல்ல ராதிகா அமைதியா இருமா என்று கோபப்படுகிறார். அப்போ கோபி தண்ணீர் தெளித்ததும் ஈஸ்வரி எழுந்து பிறகு மீண்டும் மயக்கம் போட்டு விட கோபி ஆம்புலன்ஸ் வர வைத்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகிறார்.
அப்போது ராதிகாவும் ஆம்புலன்ஸில் ஏற வர கோபி நீ வர வேண்டாம். எங்க அம்மாவுக்கு ஏதாவது ஆச்சின்னா உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் என்று திட்டி விட்டுப் போகிறார். அந்த நேரத்தில் அந்த பக்கமாக வந்த செல்வி ஈஸ்வரியை ஆம்புலன்ஸில் கூட்டிட்டு போவதை பார்த்து பாக்கியா குடும்பத்திடம் வந்து சொல்ல, அவர்களும் பதறி அடித்து ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர்.
ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு என்று ராமமூர்த்தி கேட்க, அம்மா சரியா சாப்பிடாம மயங்கிட்டாங்க என்று கோபி சொல்கிறார். பிறகு டாக்டர் வெளியே வந்ததும் பாக்யா அத்தைக்கு என்ன ஆச்சு? என்று விசாரிக்க சுகர் லோவாகி இருக்கு. வேற ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா அத்தையை போய் பார்க்கலாமா என்று கேட்க, இரண்டு பேர் மட்டும் போங்க என்று டாக்டர் சொன்னதும் ராமமூர்த்தியும் பாக்யாவும் உள்ளே சென்று பார்க்கிறார்கள்.
அப்போது ஈஸ்வரி மயக்கத்தில் இருந்து கண்ணைத் திறக்க அப்போது ராம மூர்த்தி நின்று கொண்டிருப்பதை பார்ப்பதும் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு கண்ணை மூடி கொள்கிறார். பிறகு ராமமூர்த்தி கலங்கி போய் நிற்க பாக்கியா சமாதானம் செய்து ராமமூர்த்தியை வெளியே கூட்டிக்கொண்டு வருகிறார்.
அந்த நேரத்தில் ராதிகாவும் ஹாஸ்பிடலுக்கு வர கோபி எல்லாம் உங்களால தான். என் அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் உங்களுக்கு இருக்கு என்று வார்னிங் கொடுக்கிறார். இதைத்தொடர்ந்து வெளியான வீடியோவில் பாக்யா அத்தையை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்விடலாம் என்று சொல்ல கோபி அம்மாவை நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications