தியாகி பாக்யாவிற்கு ஈஸ்வரி கொடுத்த அவமானம்.. பழனிச்சாமி சொன்ன வார்த்தை.. கோபிக்கு பெரும் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 18 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்யா ரெஸ்டாரண்ட் பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை என்பதால் ஈஸ்வரி கோபியோடு கம்பர் செய்து பாக்யாவை அவமானப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் ஜெனிக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது ஜோசப் மூலமாக கோபிக்கு தெரிய வருகிறது. இந்த நிலையில் இனி கோபி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 18th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கோபியின் ரெஸ்டாரண்டில் பெரிய அளவில் வியாபாரம் நடப்பதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். பிறகு நாங்கள் வீட்டுக்கு கிளம்புகிறோம் என்று அவர்கள் சொல்ல அதற்கு கோபி அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்து அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த ஈஸ்வரி மகன் பெற்றியே பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்யாவும் வீட்டிற்கு வர பாக்யாவை பிடித்து வைத்து கோபி பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு பாக்யா ரெஸ்டாரண்ட் பற்றி ராமமூர்த்தி விசாரிக்க அதற்கு பாக்யா டல்லாக தான் வியாபாரம் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல உடனே ஈஸ்வரி பாக்யா மற்றும் கோபி ரெஸ்டாரண்ட் பற்றி கம்பேர் பண்ணி பேசுகிறார்.

இதைக் கேட்டு பாக்கியா ஃபீல் பண்ணுகிறார். அதற்கு செழியன் நீ ஏம்மா வீட்டுக்கு அடிக்கடி வர, அப்புறம் எப்படிம்மா பிசினஸை கவனிப்பா? என்று கேட்க அதற்கு பாக்கியா வீட்டை பற்றி நினைக்காமல் என்னால் இருக்க முடியல என்று தியாகி மாதிரி பேசுகிறார். மறுபக்கத்தில் பழனிச்சாமி பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வர அந்த நேரத்தில் பாக்யா வீட்டுக்கு போய் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொல்ல சரி என்று பழனிச்சாமி சாப்பிட உட்காருகிறார்.

Baakiyalakshmi Serial march 18th episode full update

அந்த நேரத்தில் எல்லோரும் பழனிச்சாமியை விழுந்து விழுந்து கவனிக்கின்றனர். அப்போது பாக்கியா தண்ணி கொடுக்க அதை பார்த்து பழனிச்சாமி சந்தோசப்படுகின்றார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா கோபி பிசினஸ் தொடங்கியது பற்றி சொல்கிறார். அதோடு பிசினஸ் நல்லா போகுதுன்னு எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. என்னோட பிசினஸ் டல்லா போகுதுன்னு சொன்னதும் ரெண்டு பேரோட பிசினஸையும் கம்பேர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க என்று பீல் பண்ணி பேசுகிறார்.

Baakiyalakshmi Serial march 18th episode full update

அதற்கு பழனிச்சாமி பிசினஸ் விஷயத்தை வீட்ல பேசக்கூடாது. வீட்டு விசேஷத்தை பிசினஸில் பேசக்கூடாது என்று அட்வைஸ் செய்கிறார். அதற்கு பாக்கியா எனக்கு இந்த மாதிரி நீங்க அடிக்கடி அட்வைஸ் கொடுக்கணும். அப்பதான் என்னால அடுத்த கட்டத்துக்கு போக முடியுது என்று சொல்ல அதற்கு பழனிசாமி நான் எப்பவும் துணையாய் இருப்பேன் என்று சொல்ல, அந்த நேரத்தில் அங்கு வரும் செல்வி அக்காவுக்கு நீங்க வாழ்க்கை முழுக்க துணையாக இருப்பீர்களா என்று கேட்க அதற்கு பழனிச்சாமி கண்டிப்பா இருப்பேன் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial march 18th episode full update

அடுத்த கட்டத்தில் கோபி தன்னுடைய நண்பன் சதீஸோடு பேசிக் கொண்டிருக்க அப்போது ஹோட்டலுக்கு வந்த ஜோசப்பை கோபி பார்த்ததும் தன்னுடைய நண்பனிடம் இது என்னுடைய சம்பந்தி என்று அறிமுகம் செய்து வைக்க அதற்கு ஜோசப் யார் யாருக்கு சம்பந்தி என்னுடைய மகளுக்கு டைவர்ஸ் அப்ளை பண்ணியாச்சு. அவளுக்கு டைவர்ஸ் கிடைத்த அடுத்த நாளே கல்யாணம் மாப்பிள்ளை எல்லாம் ரெடி என்று சொல்ல அதைக் கேட்டு கோபி அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+