செழியனுடன் சேர்ந்த ஜெனிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. எப்படி ஒரு திருப்பமா? குட்டையை குழப்பம் கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஜெனியனும் ஜெனியும் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுக்க அதை கேட்டு ஜோசப் அதிர்ச்சி ஆகிறார். பிறகு மரியம் ஜோசப்பை சமாதானம் செய்து விடுகிறார்.

ஆனால் இதுவெல்லாம் தெரியாத கோபி பாக்கியாவை பற்றி மீண்டும் வீட்டில் தப்பு தப்பாக பேச எல்லோரும் பாக்கியா மீது கோபப்படுகின்றனர். ஆனால் ராதிகா பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial march 29th promo and episode full update

இந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் செழியனும் ஜெனியும் கட்டிப்பிடித்தபடி நிற்க அதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்பட்டு கண் கலங்குகின்றனர். பிறகு செழியனும் ஜெனியும் ரூமில் இருந்து வெளியே வர, நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு பண்ணி இருக்கீங்க என்று பாக்கியா கேட்க அதற்கு எழில் நானே சொல்கிறேன். ஜெனி நீங்க நம்ம வீட்டுக்கு வர போறீங்க தானே என்று கேட்க ஜெனி கொஞ்ச நேரம் யோசித்து ஆமாம் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial march 29th promo and episode full update

அதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதற்கு செழியன் பாக்யாவை கட்டிபிடித்து நன்றி சொல்ல ஜெனியும் மரியத்திடம் நன்றி சொல்கிறார். பிறகு பாக்கியா ஜெனியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா என்று கேட்க அதற்கு மரியம் நாங்க வரும்போது ஜோசப்பிடம் எதுவும் சொல்லாமல் தான் வந்தோம். அவரிடம் முறைப்படி சொல்லிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல எழில் வேண்டாம் அவரு அங்க போனா கோபப்படுவார் என்று சொல்ல மரியம் நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் என்று கூட்டிட்டு போகிறார்.

ஜோசப் வீட்டில் எல்லோரும் வந்து நிற்பதை பார்த்ததும் கோபப்பட்டு செழியனை திட்டுகிறார். அதற்கு மரியம் நாங்க சர்ச்சுக்கு போகல ஜெனியையும் செழியனையும் தனியா பேச வைக்க தான் கூட்டிட்டு போயிருந்தோம் என்று சொல்ல அதற்கு ஜோசப் கோவப்பட்டு பிரச்சனை தீர்ந்து விட்டதா என்று கேட்க, அதற்கு பாக்கியா பிரச்சனை தீர்ந்து விட்டது என்று சொல்ல அதற்கு ஜோசப் இதெல்லாம் தீரவே தீராது என் பொண்ணு உங்களுக்காக நடிக்க மாட்டா என்று சொல்ல, அதற்கு ஜெனி செழியனுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறேன் என்று கூறுகிறார்.

Baakiyalakshmi Serial march 29th promo and episode full update

அதற்கு ஜோசப் இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம் என்று சொல்ல மரியம் செழியன் தப்பு உணர்ந்துட்டாரு என்று சொல்ல, அதற்கு ஜோசப் அதெல்லாம் சரி வராது என்று சொல்ல அதற்கு மரியம் யாருமே தப்பு பண்றது இல்லையா? ஏன் நீங்க தப்பு பண்ணலையா? என்று ஜோசப்பை மடக்குகிறார். இதனால் ஜோசப் பதில் எதுவும் சொல்ல முடியாமல் வீட்டிற்குள் சென்று விட மரியம் நான் அவரை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார்.

Baakiyalakshmi Serial march 29th promo and episode full update

பிறகு ஜெனியிடம் முன்ன மாதிரி இனி இருக்காத செழியன் எங்க போறான் வர்றான் என்பதை கவனி இந்த முறை எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று அறிவுரை கொடுக்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி பாக்யா ரெஸ்டாரண்டுக்கு போகல, ரெண்டு பேரையும் கூப்பிட்டு ஜோசப் வீட்டுக்கு தான் போயிருப்பா என்று சொல்ல கோபி இந்த பாக்யா ஏன் தான் இப்படி இருக்கான்னு தெரியல.

Baakiyalakshmi Serial march 29th promo and episode full update

தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்கா அவள மட்டும் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என்று மேலும் ஏத்தி விடுகிறார். அதற்கு ராதிகா, அவங்க தப்பா எதுவும் பண்ண மாட்டாங்க. அவங்க அவங்க பையனோட வெளியே போயிருக்காங்க அவ்வளவுதானே என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+